10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை

10TH TAMIL கலித்தொகை

  • எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்.
  • எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது.
  • நாடகப் பாங்கில் அமைந்துள்ள எட்டுத்தொகை நூல் = கலித் தொகை.
  • இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது.
  • கலித் தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
  • கலித் தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
  • கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.
  • இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும்.
  • எனவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனச் சிறப்பித்துக் கூறுவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நல்லந்துவனார் ஆசிரியர் குறிப்பு

  • நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
  • இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
  • இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
  • கலித்தொகையை தொகுத்தவர் இவரே.
  • “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
  • “பண்பெனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = கலித் தொகை.
  • “அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
  • “அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் = கலித் தொகை.
  • “ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
  • “ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல் = கலித் தொகை.
  • “நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை” எனப் பாடியவர் = நல்லந்துவனார்.
  • “நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = கலித் தொகை.

10TH TAMIL கலித்தொகை

சொற்பொருள்

  • கிளை – சுற்றம்
  • நோன்றல் – பொறுத்தல்

இலக்கணக்குறிப்பு

  • ஒழுகுதல் – தொழிற்பெயர்
  • பொறுத்தல் – தொழிற்பெயர்

பிரித்தறிதல்

  • அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
  • பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது

 

Leave a Reply