11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
- கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பாது ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
- பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பிள்ளைத்தமிழ் வகைகள்
- இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்
- ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்
- பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.
குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
- தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
- பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சசிவகாமசுந்தரி.
- பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
- திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்
- நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.
செங்கீரைப் பருவம் குறிப்பு
- செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும்.
- பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது.
- இளங்குழந்தை ங்க ங்க என்று கூறக்கேட்டுத்தாய் உகக்கும் பருவம் இது, இவ்வொலி மழலையைக் காட்டிலும் இளம் பருவத்தை உடையது.
- (கீர் – சொல்) தொட்டில் பிள்ளை தலையையுயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலைச் செங்கீரையாடுதல் என்பர்.
சொற்பொருள்
- புலராமே = வறண்டு விடாமல், காயாமல்
- கம்முதல் = குரல் தேய்ந்து மங்குதல்
- விரல் = பெருவிரல்
- கம்மாமே = கம்மிக் கொள்ளாமல்
- சிவவாமே = சிவக்காமல்
- அஞ்சனம் = கண்மை
- கலுழ்தல் = அழுதல்
- கலுழிப்புனல் = மையைக் கரைத்து வரும் கலங்கற் கண்ணீர்
- தாள் = கால்
- செங்கீரை குழந்தை பேசத் தொடங்குமுன் செய்கிற ஒலிக்குறிப்புகள்
- வயித்தியநாதபுரி = புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுரன்கோவில்)
இலக்கணக்குறிப்பு
- மெல்லிதழ், மென்குரல் = பண்புத்தொகை
- நுண்டுளி = பண்புத்தொகை
- கண்மலர் = உருவகம்
- புனலருவி, அருள்மொழி = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
- பொழி திருமுகம் = வினைத்தொகை
- ஆடுக = வியங்கோள் வினைமுற்று.