11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது
11 ஆம் வகுப்பு அழகர் கிள்ளைவிடு தூது
- அரசன் ஒருவன் மற்றோர் அரசனுக்குத் தூதுவரை அனுப்புவது பழங்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும்.
- அதியமானின் தூதராக ஒளவை சென்றதைப் புறநானூறு கூறுகிறது.
- மனிதர்களை மட்டுமன்றி உயிருள்ள, உயிரற்ற பிறபொருள்களையும் தூதனுப்புவதாகக் கற்பனை செய்து பாடும் வழக்கமும் அன்று இருந்தது.
- இதுவே பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருவாயிற்று.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தூது இலக்கியம் என்றால் என்ன
- தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
பயிறருங் கலிவெண் பாவி னாலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே |
- தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
- தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படுவது = தூது இலக்கியம்.
- தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.
அழகர் கிள்ளைவிடு தூது நூல் குறிப்பு
- திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
- இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
- இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
- பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை ஆசிரியர் குறிப்பு
- சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
- இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
- நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.
சொற்பொருள்
- அரி = சிங்கம்
- அரன் = சிவன்
- அவுணன் = இரணியன்
- காயம் = உடம்பு, உணவுப்பொருளோடு சேர்க்கும் பலவகைப் பொடி
- சேனை = சைனியம், சேனை (பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் நாவிலிடும் இனிப்பு)
- அருந்தி = உண்டு
- உருத்திரனாய் = நிலைபெற்ற வடிவை உடையவனாகி; உருத்திரன் என்ற கடவுளாகி
- பண்ணும் தொழில் = காத்தல் தொழில்
- நிலக்காப்பு = மண்ணைக் குழைத்திட்ட பொட்டு
- நிலத்தைக் காத்தல்
- படி = உலகம்
- வேதனை = துன்பத்தை, பிரமதேவனை
- பாதவத்தை = மருத மரங்களை
- பாதவத்தை ஆரக்கால்களையுடைய சக்கரம் பூட்டிய வண்டியை, சகடம்.
- ஒள்ளிழையார் = ஒள்ளிய ஆபரணத்தை அணிந்த மகளிர்
- பெண்ணை = பனைமரம், மகளிர் மடலேறுதல்
- பெண் = அகலிகை
- கவிக்கு = திருமழிசையாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
- பாரம் = பளு, சுமை
- நாரியோடு = சீதாபிராட்டியோடு.
- வன்கானகம் கடந்த = வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற
- வேட்டுவற்கு = சரனென்னும் வேடனுக்கு
- வேலை = கடல் (பாற்கடல்)
- உள்ளத்துள்ளான் = மிக அண்மையிலிருப்பவன்
- உலகுக்கு அப்பாலான் = மிகச் சேய்மையிலிருப்பவன்
இலக்கணக்குறிப்பு
- வன்காயம் = பண்புத்தொகை
- அரைத்திடும் சேனை = எதிர்காலப் பெயரெச்சம்
- தந்தபால், கடைந்த பாயலான் = இறந்தகாலப் பெயரெச்சங்கள்
- மலர்க்கால் = உவமைத்தொகை
- வன்கானகம் = பண்புத்தொகை