11 ஆம் வகுப்பு திருக்குறள்
11 ஆம் வகுப்பு திருக்குறள்
- “குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும்.
- திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள்.
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
- 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு பத்து பாடல வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
- பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
- காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இன்டு இயல்களையும் உடையது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருக்குறள் வேறு பெயர்கள்
- “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
- திருக்குறள் “தமிழர் திருமறை” ஆகும்.
- “உலகப் பொதுமறை” என்று அழைக்கபப்டும் நூல் = திருக்குறள்.
- தெய்வநூல்
- முப்பால்
- வாயுறை வாழ்த்து
- உத்தரவேதம்
- பொய்யாமொழி
திருக்குறள் சிறப்புகள்
- “திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள் இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” என்று தமிழரை விம்மித முறவைப்பது இத்தெய்வநூல்.
- இந்நூலுட் கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாக விளங்குகின்றன.
- உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு பலராலும் படிக்கப்பெற்று வருகிறது.
- உலகம் முழுவதும் ஒப்பக் கூடிய சிறந்த கருத்துகளைக் கொண்டுள்ள இந்நூல் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது.
- திருக்குறளையோ அதன் கருத்துகளையோ எடுத்தாளாத அறிஞர் பெருமக்கள் இலர் என்று கூறுமளவிற்குப் பெருமை பெற்றுள்ளது.
- “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளை புகழ்ந்தவர் = ஔவையார்.
- திருக்குறளையும் திருவள்ளுவரையும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாராட்டிப் பாடிய நுால் திருவள்ளுவ மாலை என்று அழைக்கப்படுகிறது.
திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு
- இத்தகைய பெருநூலை நமக்கு இயற்றித் தந்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆவர்.
- இவர் கடைச்சங்க காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
- திருவள்ளுவரைப் பற்றிய உண்மை வரலாறு புலப்படவில்லை.
- செவிவழிச் செய்திகளே உள்ளன.
- திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு.
- இவர் கி.மு. 31-இல் தோன்றியவரென்று அறிஞர் சிலர் கூறுவர்.
- இதைக் கணக்கில் சேர்க்கவும் கொண்டு திருவள்ளுவராண்டு முறை வழங்கி வருகிறது.
திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்
- முதற்பாவலர்
- பொய்யில் புலவர்
- பெருநாவலர்
- செந்நாப்போதார்
- நாயனார்
- தேவர்
- மாதானுபங்கி
சொற்பொருள்
- அடக்கம் = மனம் மொழி மெய்கள் தீயவழிகளிற் செல்லாது அடங்குதல்
- அமரருள் = தேவர் உலகம் (சுவர்க்கம்)
- உய்க்கும் = செலுத்தும்
- ஆரிருள் = நரகம்
- பொருளா = உயர்ந்த பொருளாகக் கருதி
- காக்க = கடைப்பிடித்து ஒழுகுக
- அதனின் ஊங்கு = அவ் அடக்கத்தைவிடவும்
- செறிவு = அடக்கம்
- சீர்மை = விழுப்பம், சிறப்பு
- அறிவறிந்து = அடங்கியிருத்தலே அறிவாவது என்றறிந்து
- ஆற்றின் =நேரியவழியில்
- நிலையின் = (இல்லறநெறியாகிய) நிலையின் நின்று
- திரியாது = நிலைபிறழாது
- தோற்றம் = உயர்வு
- மாண = மிகவும்
- நன்று ஆம் = நன்மைதருவதே ஆம்
- பணிதல் = அடங்குதல்
- செல்வந்தகைத்து = செல்வம் எனத்தகும் சிறப்பினையுடைத்து.
- ஐந்து = ஐம்பொறிகள்
- ஒருமை = ஒரு பிறப்பு
- எழுமை = ஏழு பிறப்பு
- ஏமாப்பு= பாதுகாப்பு.
- யா = எவற்றை (எல்லாவற்றையும்)
- சோகாப்பர் = துன்புறுவர்
- சொல்இழுக்கு = சொற்குற்றம்
- பொருட்பயன் = பொருளால் விளைவது
- உண்டாயின் = உண்டாவது ஆயின்
- நன்றாகாது ஆகிவிடும் = தீதாகிவிடும்
- நாவினால் = கடுஞ்சொற்களால்
- வடு = தழும்பு
- கதம் = சினம்
- காத்து = அடக்கி
- செவ்வி = தகுந்த காலம்
- அறம் = அறக்கடவுள்
- ஆற்றின் = அடையும் வழியில்
- கைம்மாறு = எதிர்பார்த்துச் செய்யும் உதவி
- கடப்பாடு = கடமையாய்க் கொண்டு செயல்படல்
- மாரி = மழையைத் தரும் மேகம்
- தந்த = ஈட்டிய
- தக்கார்க்கு = தகுந்தவர்க்கு
- தாளாற்றி = மிக்க முயற்சி செய்து
- வேளாண்மை = உதவி
- புத்தேள் உலகம் = தேவர் உலகத்தும்
- ஈண்டும் = இவ்வுலகத்தும்
- ஒப்புரவின் = ஒப்புரவைக் காட்டிலும்
- நல்லபிற = நல்லனவாய பிறசெயல்கள்
- ஒத்தது = உலகநடையறிந்து அதற்கிசையச் செய்வது
- செத்தாருள் வைக்கப்படும் = இறந்தாருள் ஒருவனாக் கருதப்படுவான்
- ஊருணி = ஊர் மக்கள் உண்ணுநீர்க்குளம்
- உலகுஅவாம் = உலக நடையை விரும்பிச் செய்யும்
- திரு = செல்வம்
- அற்று = போலும்
- பயன்மரம் = பயன்படும்மரம்
- உள்ளூர் = ஊர்நடுவே
- நயனுடையான் – நல்ல உள்ளமுடையவன் (ஒப்புரவாளன்)
- மருந்தாகி = மருந்தாய்
- தப்பா = தப்பாத
- மரத்தற்று = மரத்தை ஒப்பது.
- இடம் = செல்வம்
- இடனில் பருவம் = வறுமையுற்றகாலம்
- ஒல்கார் = தளரார்
- கடன் = முறைமை
- காட்சியவர் = அறிவுடையார்.
- நயனுடையான் = ஒப்புரவாளன்
- நல்கூர்ந்தானாதல் = வறுமை வாய்ப்படுதல்
- செய்யாது = செய்யப்பெறாது.
- கேடு = பொருள்கேடு
- கோள்தக்கது = கொள்ளத்தக்கது
- கூகை = இரவில் இயங்கும் பறவைகளுள் ஒன்று (கோட்டான்)
- இகல் = பகை
- பொழுது = தகுந்தகாலமும் சூழலும்
- பருவத்தோடு = காலத்தோடு
- ஒட்ட = இசைய
- தீராமை = நீங்காமல்
- ஆர்க்கும் = பிணிக்கும்
- அருவினை = அரிய செயல்
- உளவோ = உண்டோ (இல்லை)
- கருவியான் = காலமறிந்து
- கருதினும் = நினைப்பினும்
- கைகூடும் = கையகத்ததாகும்.
- கலங்காது = தவறாது.
- ஊக்கம் உடையான் = மனவெழுச்சி உடையவன்
- ஒடுக்கம் = அடங்கியிருத்தல்
- தகர் = ஆட்டுக்கிடாய்
- தாக்கற்கு = தாக்குவதற்காக
- பேரும் = பின்னே கால் வாங்கும்
- தகைத்து = தன்மைத்து
- பொள்ளென = உடனடியாக
- புறம்வேரார் = வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்
- உள்வேர்ப்பர் = பகைமையை உள்ளே வைத்திருப்பர்
- ஒள்ளியவர் = அறிவுடையவர் (அறிவுடைய அரசர்).
- செறுநர் = பகைவர்
- சுமக்க = பணிக
- இறுவரை = (அழிவிற்கான) இறுதி நாள் வந்தபோது
- கிழக்காம் = விழுவதாம்
- இயைந்தக்கால் = கூடிவரும்பொழுது
- செயல் = செய்க
- கூம்பு பருவத்து = வினைமேற் செல்லாதிருக்கும் காலத்து
- கொக்கு ஒக்க = கொக்குப் போல் இருக்கவும்
- சீர்த்த விடத்து = வினைமேற் சென்ற இடத்து
- குத்தொக்க = அலகு கொண்டு குத்துவது போலத் தாக்குக.
- வினைவலி = தான் செய்யக்கருதிய செயலின் வலிமை
- மாற்றான் = பகைவர்
- துணை = தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார்
- தூக்கி = சீர் தூக்கி
- செயல் = செயற்படுக
- ஒல்வது =தம்மாலியன்றது
- அறிவது = அறிய வேண்டிய வலிமை
- செல்வார்க்கு = பகைமேற்செல்வார்க்கு
- உடைத்தம் = தம்முடைய
- இடைக்கண் = நடுவிலேயே
- ஊக்கம் = மன எழுச்சி
- ஊக்கி = செயலைத் தொடங்கி
- முரிந்தார் = அழிந்தவர் (தோற்றவர்)
- ஆங்கு அமைந்து ஒழுகான் = அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகாது
- அளவறியான் = தன்வலிமையின் அளவை அறியாது
- தன்னைவியந்தான் = தானே தன்னை உயர்வாகக் கருதிச் செருக்குறுபவன்.
- பீலி = மயில்தோகை
- சாகாடு = வண்டி
- இறும் = முரியும்
- பெயின் = ஏற்றினால்
- கொம்பர் = இறுதிப்போலி
- நுனிக்கொம்பர் = கிளையின்நுனி
- ஆறு = நெறி
- ஆற்றின் = கொடுக்கும் நெறியில்
- அளவு அறிந்து = தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து
- ஆகு ஆறு = பொருள் வரும் வழி
- இட்டிது = சிறியது
- போகு ஆறு = செலவழியும் வழி
- அகலாக்கடை = பெருகாதாயின்
- ஆகுபோகு ஆறு = செலவழியும் வழி
- உளபோல = உள்ளன போல
- உளவரை = தனக்குள்ள பொருளின் அளவு
- தூக்காத = ஆராய்ந்து பார்க்காத
- வல்லை = விரைவில்
- வளவரை = செல்வத்தின் எல்லை
இலக்கணக்குறிப்பு
- அடங்காமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
- ஆரிருள் = பண்புத்தொகை
- காக்க = வியங்கோள் வினைமுற்று
- பொருளா = (பொருளாக என்பதன்) தொகுத்தல்விகாரம்
- அதனினூஉங்கு = இன்னிசையளபெடை
- பெறின் = செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
- அடங்கியான் = வினையாலணையும் பெயர்
- மலையினும் = உயர்வு சிறப்பும்மை
- எல்லார்க்கும் = முற்றும்மை
- பணிதல் = தொழிற்பெயர்
- தகைத்து = குறிப்பு வினைமுற்று
- நன்றாம் = (நன்றாகும்) தொகுத்தல் விகாரம்
- செல்வர்க்கே = தேற்றேகாரம்
- உடைத்து = குறிப்பு வினைமுற்று
- எழுமை, ஐந்து = ஆகுபெயர்கள்
- காவாக்கால் = எதிர்மறை வினையெச்சம்
- பொருட்பயன் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- ஆனும் = ஆயினும் என்பதன் விகாரம்
- நன்று – (நன்மை) பண்புப்பெயர்
- சுட்ட புண், சுட்ட வடு = பெயரெச்சங்கள்.
- அடங்கல் = தொழிற்பெயர்
- ஆற்றுவான் = வினையாலணையும் பெயர்
- வேண்டாக்கடப்பாடு = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- உலகு = இடவாகுபெயர்
- தந்தபொருள் = பெயரெச்சம்
- பொருட்டு = குறிப்பு வினைமுற்று
- நல்ல = பலவின்பால் வினையாலணையும் பெயர்
- பெறல் = தொழிற்பெயர்
- ஈண்டும் = உம்மை எண்ணுப் பொருள்.
- அறிவான், வாழ்வான் = வினையாலணையும் பெயர்
- மற்றையான் = குறிப்பு வினையாலணையும் பெயர்கள்
- பேரறிவு = பண்புத்தொகை
- ஊருணி = காரணப்பெயர்
- பயன்மரம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- உள்ளூர் = ஊருள் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை
- தப்பாமரம் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பெருந்தகை = பண்புத்தொகை.
- கடனறிகாட்சி = வினைத்தொகை
- ஒல்கார் = வினையாலணையும் பெயர்
- இல்பருவம் = பண்புத்தொகை
- ஆதல் = தொழிற்பெயர்
- நீர = பலவின்பாற் பெயர்
- செயும் = செய்யும் என்பதன் தொகுத்தல் விகாரம்
- கேடு, கோள் = முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்.
- பகல்வெல்லும் = ஏழாம் வேற்றுமைத் தொகை
- இகல்வெல்லும் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
- ஒழுகல் = தொழிற் பெயர்
- தீராமை ஆர்க்கும் = எதிர்மறை வினையெச்சம்
- அருவினை = பண்புத்தொகை
- உளவோ = ஓகாரம் எதிர்மறை
- செயின் = வினையெச்சம்
- கருதுபவர் = வினையாலணையும் பெயர்
- ஒடுக்கம் = தொழிற் பெயர்
- பொருதகர் = வினைத்தொகை
- பேரும் = பெயரும் என்பதன் மரூஉ
- பொள்ளென = குறிப்புமொழி (விரைவுக் குறிப்பு)
- ஒள்ளியவர் = வினையாலணையும் பெயர்
- சுமக்க = வியங்கோள் வினைமுற்று
- எய்தக்கால் = காலீற்று வினையெச்சம்
- செயல் = அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று
- ஒக்க = வியங்கோள் வினைமுற்று.
- வினைவலி, துணைவலி = ஆறாம்வேற்றுமைத்தொகைகள்
- செயல் = வியங்கோள்வினைமுற்று
- செல்வார் = வினையாலணையும் பெயர்
- அறியார் = எதிர்மறைவினையாலணையும் பெயர்
- ஒழுகான், அறியான் = (முற்றுகள் எச்சப் பொருளில் வந்தன) முற்றெச்சம்.
- பெய்சாகாடு = வினைத்தொகை
- சாலமிகுத்து = உரிச்சொற்றொடர்
- மிகுத்து = மிகுந்து என்பதன் பிறவினை.
- கொம்பர் = ஈற்றுப்போலி
- நுனிக்கொம்பர் = முன்பின்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை.
- ஈக = வியங்கோள் வினைமுற்று
- வழங்கும் நெறி = பெயரெச்சத்தொடர்
- ஆகாறு, போகாறு = வினைத் தொகைகள்
- அகலாக் கடை = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கேடு = முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
- தோன்றாக்கெடும் = செய்யா எனும் வாய்பாட்டு வினையெச்சம்
- வாழ்க்கை = தொழிற் பெயர்.
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்
- 11 ஆம் வகுப்பு திருக்குறள்