11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

Table of Contents

11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

  • ஒரே பொருளை தரும் சொற்கள் = பா, செய்யுள், தூக்கு, கவி, கவிதை, பாட்டு
  • செய்யுளின் உறுப்புகள் = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

யாப்பருங்கலக்காரிகை

  • பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை விளக்குவது யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலாகும்.

பா வகைகள்

  • பா வகைகள் நான்கு ஆகும். அவை,
    • வெண்பா
    • ஆசிரியப்பா
    • வஞ்சிப்பா
    • கலிப்பா

பாவகை ஓசைகள்

  • வெண்பா = செப்பலோசை
  • ஆசிரியப்பா = அகவலோசை
  • வஞ்சிப்பா = தூங்கலோசை
  • கலிப்பா = துள்ளலோசை

சீர் என்றால் என்ன

  • செய்யுளில் மோனை, எதுகை, இயைபு போன்றவை இசையைப் பிணைக்கின்றன.
  • சீர் அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன.

அடி எத்தனை வகைப்படும்

  • அடிகள் ஐந்து வகைப்படும். அவை,
    • குறளடி = இரண்டு சீர்கள்
    • சிந்தடி = மூன்று சீர்கள்
    • அளவடி (நேரடி) = நான்கு சீர்கள்
    • நெடிலடி = ஐந்து சீர்கள்
    • கழிநெடிலடி = ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்கள்

பா இயற்ற எளிய வடிவம்

  • பா இயற்ற எளிய வடிவம் = ஆசிரியப்பா ஆகும்.
  • அகவல் ஓசை கொண்டதால், ஆசிரியப்பாவை “அகவற்பா” என்றும் கூறுவர்.
  • பெரும்பாலும் ஆசிரியப்பா, இரண்டு அசைகளால் அமையும்.
  • சங்ககாலத் தமிழ் பாடல்களில் மிகுதியான பாடல்கள் ஆசிரியப்பாவால் அமைந்தவையே.

அசை எத்தனை வகைப்படும்

  • யாப்பில், ‘எழுத்து’ அசையை அமைக்க உதவும்.
  • அசை என்பது இசை (மாத்திரை) சேர்ந்து வருவதாகும்.
  • அசை இரண்டு வகைப்படும். அவை,
    • நேர் அசை
    • நிரை அசை

அசை வாய்ப்பாடுகள்

நேரசை

எ.கா நிரையசை எ.கா
குறில் தனித்து வருதல் இரு குறில் இணைந்து வருதல்

அக

குறில் ஒற்றுடன் வருதல்

கண் இருகுறில் இணைந்து ஒற்றுடன் வருதல் அகம்
நெடில் தனித்து வருதல் பா குறில் நெடில் இணைந்து வருதல்

கலா

நெடில் ஒற்றுடன் வருதல்

பார் குறில் நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல்

கலாம்

மெய்யெழுத்து

  • சீர் ஒன்றில் அசைப் பிரிவில் தனி மெய்யெழுத்து வந்தாலோ, இரண்டு மெய் எழுத்துக்கள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • எ.கா
    • ஆல் = நேரசை (இருமாத்திரை அளவே கொள்ள வேண்டும் – ‘ல்’ அலகு பெறாது)
    • இகழ்ச்சி = நிரையசை (இருமாத்திரை அளவே கொள்ள வேண்டும் – ‘ழ், ச்’ அலகு பெறாது)

ஆசிரிய உரிச்சீர் வகைகள்

  • அசைகள் சேர்ந்து அமைந்தால் சீர் பிறக்கும்.
  • ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் இயற்சீர் ஆகும்.
  • இதனை ஆசிரிய உரிச்சீர் என்றும் கூறுவர்.
  • தேமா, புளிமா ஆகிய இரண்டும் நேரீற்று ஈரசைச் சீர்களாகவும் கருவிளம், கூவிளம் ஆகிய இரண்டும் நிரையீற்று ஈரசைச் சீர்களாகவும் வரும்.
  • எனவே, ஆசிரிய உரிச்சீர் நான்கு வகைப்படும்.
  • வெண்பாவிற்குரிய தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் ஆகிய நேரீற்று மூவசைச் சீர்களால் அமைந்த ‘காய்ச்சீர் கலந்தும் வரலாம்.
11TH TAMIL பா இயற்றப் பழகலாம்
11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

ஆசிரியத்தளை என்றால் என்ன

11TH TAMIL பா இயற்றப் பழகலாம்
11TH TAMIL பா இயற்றப் பழகலாம்
  • ஆசிரியப்பாவானது = இயற்சீரும், ஆசிரியத்தளையும் பெற்று வரும்.
11TH TAMIL பா இயற்றப் பழகலாம்
11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

  • அகவலோசை கொண்டது.
  • எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் (அளவடி) பெற்றுவரும்.
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
  • ஆசிரியத்தளை மிகுந்தும் பிற தளை கலந்தும் வரும்.
  • நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் (கூவிளங்கனி, கருவிளங்கனி) வராமல் அமையும்.
  • இறுதி அடியின் இறுதி எழுத்து பிற எழுத்தால் முடியும் என்றாலும், ‘ஏ’ என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு.
  • ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ ஆகிய ஈறுகளாலும் முடியும்.
  • மூன்றடிச் சிற்றெல்லையாக அமையும்.
  • பேரெல்லை பாடுவோன் எண்ணத்திற்கேற்ப (கற்பனைக்கேற்ப) அமையும்.

ஆசிரியப்பாவின் வகைகள்

  • ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை,
    1. நேரிசை ஆசிரியப்பா
    2. இணைக்குறள் ஆசிரியப்பா
    3. நிலைமண்டில ஆசிரியப்பா
    4. அடிமறிமண்டில ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களைப் பெற்று வரும்
இணைக்குறள் ஆசிரியப்பா

முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் (குறளடி) மூன்று சீர்களாகவும் (சிந்தடி) வரும்

நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்
அடிமறிமண்டில ஆசிரியப்பா

பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது

நேரிசை ஆசிரியப்பா

  • “கடை அயற்பாதம்”
  • இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களைப் பெற்று வருவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.
  • மற்ற அடிகள் நான்கு சீர்களைப் பெற்றுவரும்.

இணைக்குறள் ஆசிரியப்பா

  • “இடைபல குன்றின் இணைக்குறள்”
  • முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் (குறளடி) மூன்று சீர்களாகவும் (சிந்தடி) வருவது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்.

நிலைமண்டில ஆசிரியப்பா

  • “எல்லா அடிகளும் ஒத்து நடைபெறுமாயின் நிலைமண்டில ஆசிரியப்பா“.
  • எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்.
  • ‘ஏ’ என்ற எழுத்தாலும் ‘என்’ என்ற அசைச் சொல்லாலும் முடியும்.
  • (அசைச்சொல் – யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல்)

அடிமறிமண்டில ஆசிரியப்பா

  • “நடு ஆதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே”
  • பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவாகும்.

ஆசிரியப்பாவின் இனங்கள்

  • ஆசிரியப்பாவின் இனங்கள் மூன்று ஆகும்.,
    1. ஆசிரியத் தாழிசை
    2. ஆசிரியத் துறை
    3. ஆசிரிய விருத்தம்

ஆசிரிய விருத்தம் என்றால் என்ன

  • ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களே இன்று பெருவழக்கில் உள்ளன.
  • இவ்வகையான பாடல்களை எளிதாகக் கையாளலாம்.
  • ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றே விருத்தம்.
  • ஆறு சீர்களால் அமைந்த பாடலை அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும்
  • ஏழு சீர்களால் அமைந்த பாடலை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும்
  • எட்டுச்சீர்களால் அமைந்த பாடலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் பாவகையைக் குறிப்பிடுவர்.
  • ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘கழிநெடிலடி’ ஆகும்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமையும் முறை

  • அறுசீர்க்கழிநெடிலடிகள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கடியும் அளவொத்து வரவேண்டும்.
  • முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதும் முறை

  • சீர் அமைப்பை வைத்து அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பல்வேறு வகையாக எழுதப்படுகின்றன.
  • ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவனவும்
  • ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவனவும் ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனவும் உண்டு .

 

 

Leave a Reply