11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

  • காலம் = 1882 – 1954
  • “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்.
  • இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர்.

வட்டத் தொட்டி

  • டி. கே. சி. யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றிப்பேசியது. அவ்வமைப்பு ‘வட்டத் தொட்டி’ என்றே பெயர்பெற்றது.
  • டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர்.
  • தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்.
  • வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்.
  • தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார்.
  • கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார்.
  • அவர்தம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன.
  • இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களும் முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்.
  • சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி. கே. சி. ஏற்றிய இலக்கியஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது.

Leave a Reply