Skip to content
11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள்

11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள்
- கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர் = ஆத்மாநாம்.
- கவிதை பாடுதலைச் சமூக அக்கறையாக மாற்றிக்கொண்டவர்.
- ஆத்மாநாமின் இயற்பெயர் = மதுசூதனன்
- மதுசூதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.
- காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு.
- ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர்.
- இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்பெற்றுள்ளன.
ஆத்மாநாம்
- இவரின் தாய்மொழி = கன்னடம்
- இன்றுவரை ஆத்மாநாம் எழுதியவையாக, நமக்கு 156 கவிதைகள் கிடைத்துள்ளன.
- இவற்றைத் தொகுப்பாக்கித் தமிழ் வாசகர்களிடம் ஆத்மாநாமை நிலைநிறுத்தியதில் கவிஞர் பிரம்மராஜனுக்குத் தலையாய பங்குண்டு.