12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ் ஐஞ்சிறுகாப்பியங்கள்
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுங்காப்பியமாகும்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமண சமய காப்பியங்களாகும்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள் = உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
உதயணகுமார காவியம்
- இந்நூலில் 6 காண்டங்கள் உள்ளன.
- இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றை கூறுகிறது.
- பிற்பகுதியில் அவனது மகனான நரவாகனனது வரலாற்றை கூறுகிறது.
- இக்காப்பியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன.
- இந்நூல் “பெருங்கதை” என்னும் காப்பியத்தில் இருந்து வேறுபட்டது.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
-
உதயணகுமார காவியம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
நாககுமாரகாவியம்
- இக்காப்பியத்தை “நாகபஞ்சமி கதை” என்றும் கூறுவார்.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- 17௦ விருதப்பாக்களை கொண்டது.
- 5 சருக்கங்களை கொண்ட இந்நூல் சமண சமய கொள்கையை விளக்குகிறது.
- இளமைக் காலத்திலே இன்பம் துய்ப்பதிலே தனது காலத்தை கழித்த நாககுமாரன் தனது இறுதி காலத்தில் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொண்ட கதை இந்நூல் கூறுகிறது.
-
நாககுமார காவியம் மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
யசோதர காவியம்
- யசோதரன் என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- இந்நூல் 5 சருக்கங்களையும், 32௦ பாடல்களையும் கொண்டுள்ளது.
- அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்கு தம் பிறப்பின் வரலாற்றை கூறி சமண சமயத்தை தழுவி நெறிப்படுத்துவதே இந்நூலின் கதையாகும்.
-
யசோதர காவியம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
சூளாமணி
- பெருங்காப்பியதிற்கு இணையாக போற்றப்படும் சிறுகாப்பிய நூல்.
- இயற்றியவர் தோலாமொழித்தேவர்
- இந்நூலில் 12 காண்டங்களும், 2131 விருதப்பாக்களையும் கொண்டுள்ளது.
- திவிட்டன், விசயன் ஆகிய இரண்டு மன்னர்களின் வரலாற்றை கூறும் நூல்.
- திவிட்டனின் தந்தை பயாபதி மன்னன், “உயர்ந்து உலகின் முடிக்கோர் சூளாமணியானான்” என்பதால், இந்நூல் சூளாமணி எனப்பெயர் பெற்றது.
-
நீலகேசி
- பௌத்த நூலான குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்டது இந்த சமண சமய காப்பியம் நீலகேசி.
- தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவே.
- இதனை “நீலகேசி திரட்டு” என்றும் கூறுவர்.
- 1௦ சருக்கம், 895 விருதப்பாக்களை கொண்டது இந்நூல்.
- பாஞ்சால நாட்டில் நடக்கும் உயிர்கொலையை, முனிச்சந்திரர் என்ற முனிவர் தம் தவ வலிமையால் தடுக்கிறார்.
- அவர் தவத்தை கலைக்க பழையனூர் நீலி, அரசிபோல் வேடமிட்டு வந்து முயற்சி செய்து தோற்று பின்னர் அவருக்கே மனைவியாகிறாள்.
- பின்னர் சமண சமய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி சமணசமய தலைவியாக மாறுகிறாள்.
- தெய்வங்களுக்கு உயிர்பலி இடுவது தவறு எனக் கூறுகிறது நீலகேசி.
-
நீலகேசி பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்