12 ஆம் வகுப்பு திருக்குறள்
12 ஆம் வகுப்பு திருக்குறள்
- திருக்குறள் = திரு + குறள்
- சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் திருக்குறள் எனப் பெயர் பெற்றது.
- குறள் – இரண்டடி வெண்பா
- திரு – சிறப்பு அடைமொழி.
- குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர்.
- திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும்.
- இது தமிழில் வழங்கும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்டது.
- திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள் = 9.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அறத்துப்பால்
- அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் = 38
- அறத்துப்பாலில் உள்ள இயல்கள் = 4
- அறத்துப்பாலில் உள்ள இயல்கள் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால்
- பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் = 70
- பொருட்பாலில் உள்ள இயல்கள் = 3
- பொருட்பாலில் உள்ள இயல்கள் = அரசியல், அங்கவியல், ஒழிபியல்
காமத்துப்பால்
- காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் = 25
- காமத்துப்பாலில் உள்ள இயல்கள் = 2
- காமத்துப்பாலில் உள்ள இயல்கள் = களவியல், கற்பியல்.
திருக்குறள் சிறப்புப் பெயர்கள்
- உலகப் பொதுநூல்
- அறவிலக்கியம்
- தமிழர் திருமறை
திருக்குறள் வேறு பெயர்கள்
- முப்பால்
- பொய்யாமொழி
- வாயுறைவாழ்த்து
- உத்தரவேதம்
- தெய்வநூல்
- திருவள்ளுவம்
- தமிழ்மறை
- பொதுமறை
- திருவள்ளுவப்பயன்
- பொருளுரை
- முதுமொழி
திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்
- நாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்
- நான்முகனார்
- மாதானுபங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
திருக்குறள் சிறப்புகள்
- மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக் காட்டிய நூல்
- ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலான உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
- உலகோர் விரும்பிப் படிக்கும் தமிழ்நூலாக விளங்குகிறது.
- ஆலும் வேலும், பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் இதன் பெருமையை விளக்குவனவாகும்.
- இவற்றுள் ‘நால்’ என்பது நாலடியாரையும், ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும்.
திருக்குறளின் பெருமையை கூறும் தொடர்கள்
- திருக்குறளின் பெருமையை கூறும் நூல் = திருவள்ளுவமாலை.
- “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்று கூறியவர் = இறையனார்.
- “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = திருவள்ளுவமாலை.
- “மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = திருவள்ளுவமாலை.
- “மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்று கூறியவர் = இறையனார்.
- திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றுகின்ற நூல் = திருவள்ளுவமாலை.
- “வள்ளுவன்’ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறியவர் = பாரதியார்.
- “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” என்று கூறியவர் = பாரதிதாசன்.
- “தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளை பாராட்டியவர் = கபிலர்.
- “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து” என்று திருக்குறளை பாராட்டியவர் = பரணர்.
- “உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு” என்று திருக்குறளை கூறியவர் = மாங்குடி மருதனார்.
- “பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
- “பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
- “முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
- “முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
- “புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது” என்று கூறியவர் = கவிமணி
- “வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது” என்று பாடியவர் = கவிமணி
- “செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” என்று கூறியவர் = கவிமணி.
- “திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” என்று கூறியவர் = கவிமணி
- “நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர் = கவிமணி.
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
- திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் முன்னரே உரை எழுதியுள்ளனர்.
- அவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனக் கற்றோர் புகழ்வர்.
திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு
- திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உண்மையான வரலாறு நமக்குக் கிடைத்திலது.
- ஒவ்வொரு சமயத்தவரும் திருவள்ளுவரைத் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவரென்று புகழ்ந்து கூறுமளவிற்குத், திருக்குறள் இடமளிக்கின்றது.
- இறைக் கோட்பாட்டின் பொதுவான நெறியைத் திருக்குறள் காட்டுகிறது.
- இவருடைய காலம் கி.மு.31 எனக் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது. (திருவள்ளுவர் காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவார் பலர் உளர்)
- திருவள்ளுவரை நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் எனப் பல பெயர்களால் பாராட்டுகின்றனர்.
சொற்பொருள்
- வையகம் = மண்ணுலகம்
- வானகம் = விண்ணுலகம்
- ஆற்றலரிது = ஒத்தலரிது; ஈடாகா
- ஞாலம் = நிலவுலகம்
- நன்றி = நன்மை; உதவி
- மாணப்பெரிது = மிகப்பெரிது
- தூக்கார் = ஆராய்தலிலராய், (பயன் நோக்கார்)
- நயன் = உதவியாகிய ஈரமுடைமை
- தூக்கின் = ஆராயின்.
- தினை = மிகச் சிறிய அளவு (தினை = சிறிய அளவினதாய தானிய வகை)
- பனை = ஒரு பேரளவு
- வரைத்து = அளவையுடையது
- சால்பு = நிறைபண்பு; தகுதி.
- மாசற்றார் = குற்றமற்றவர்
- கேண்மை = நட்பு.
- உள்ளுவர் = நினைப்பர்
- விழுமம் = துன்பம்
- துடைத்தவர் = நீக்கினவர்.
- நன்று = நன்மை (அறன்) ஆகும்
- நன்றன்று = அறமாகாது.
- இன்னா = தீங்குகள்
- உள்ள = நினைக்க
- கெடும் = இல்லையாகும் (கெடும்)
- நன்றி = அறம்
- உய்வு = நீங்கும் வாயில் (பிராயச்சித்தம்)
- கொன்ற = சிதைத்த.
- அகழ்வாரை = தோண்டுபவரை
- தாங்கும் = பொறுத்துக் கொள்ளும்
- இகழ்வார் = அவமதிப்பார்
- பொறுத்தல் = மன்னித்தல்
- தலை = சிறந்த அறமாகும்
- பொறுத்தல் = மன்னிக்க
- இறப்பினை = பிறர் செய்த அவமதிப்பை
- இன்மை = வறுமை
- ஒரால் = நீக்குதல்
- வன்மை = வலிமை
- மடவார் = அறிவிலிகள்
- பொறை = பொறுத்தல்
- விருந்து = புதியராய் வந்தவர்.
- நிறை = சால்பு
- நீங்காமை = விலகாமை; (நெடுங்காலம் நிற்றலை)
- ஒறுத்தாரை = தண்டித்தவரை
- ஒன்றாக = ஒரு பொருளாக
- பொதிந்து வைப்பர் = இடைவிடாது மனத்துட் கொள்வர்.
- பொன்றும் = அழியும்
- பொன்றுந்துணையும் = அழியுமளவும்
- திறனல்ல = செய்யத்தகாத, கொடியவற்றை
- நோநொந்து = துன்பத்திற்கு வருந்தி
- மிகுதியான் = மனச் செருக்கால்
- மிக்கவை = தீங்குகள்
- தகுதியான் = பொறுமையான்
- விடல் – விடுக
- துறந்தாரின் = பற்றற்றவர் போல
- இறந்தார் = நெறியைக் கடந்தவரது
- இன்னா = தீய
- நோற்கிற்பவர் = பொறுப்பவர்
- உண்ணாது = உணவைத் தவிர்த்து
- நோற்பார் = (உற்ற நோயைப்) பொறுப்பவர்
- அற்றம் = அழிவு; இறுதி
- செறுவார்க்கு = பகைவர்க்கு
- அரண் = கோட்டை
- ஒரீஇ = நீக்கி
- உய்ப்பது = செலுத்துவது; விடா – விடாமல்
- மெய்ப்பொருள் = உண்மைப்பொருள்
- காண்பது = (காணுதல்) காணவல்லது அறிவு
- எண்பொருளவாக = எளியபொருள் ஆமாறு
- நுண்பொருள் = நுட்பமான பொருள்
- செலச்சொல்லி = மனங்கொள்ளச் சொல்லி
- தழீஇயது = நட்பாக்குவது
- ஒட்பம் = அறிவுடைமை
- கூம்பல் = குவிதல், முகம் வாடுதல்
- மலர்தல் = விரிதல், முகம் மலர்தல்
- உறைவது = ஒழுகுவது
- ஆவது = பின்னர் வரக்கூடியது
- அறிகல்லாதவர் = அறியமாட்டாதார்.
- பேதைமை = அறிவுஇன்மை
- அறிவார் = அறிவுடையவர்
- அஞ்சல் = எண்ணிப் பார்த்து அதனைச் செய்யாது விடுதல். செய்யப் பயப்படுதல் (ஒன்றனைச் செய்யப் பயப்படுதலை அஞ்சல் என்பர்).
- எதிரது = எதிர்காலத்தில் நேரக்கூடியது
- அதிர = நடுங்குபடி
- நோய் = துன்பம்
- என்னுடையரேனும் = எல்லாம் உடையராயினும்
- இலர் = இல்லாதவர்
- திட்பம் = வலிமை
- மற்றவை = ஒழிந்தவை
- பிற = திண்மையென்று சொல்லப்படா
- வினைத்திட்பம் = செயல் செய்வதற்கான மனவலிமை
- ஊறு = பழுதுபடும் வினை
- ஒரால் = செய்யாமை
- ஒல்காமை = தளராமை
- ஆறு = நெறி
- கோள் = துணிபு
- கடை = இறுதியில்
- கொட்க = புலப்படும்படி
- எற்றா = நீங்காத
- விழுமம் = துன்பம்
- இடைக்கொட்கின் = இடையே வெளிப்படுமாயின்
- செயல் = செய்தல்
- வீறு = சிறப்பு
- எய்தி = பெற்று
- மாண்டார் = மாட்சிமைப்பட்ட அமைச்சர்
- உள்ளப்படும் = நன்கு மதிக்கப்படும்
- ஊறு எய்தி = நல்ல விளைவை எய்து வித்தலால்
- எண்ணிய = எண்ணப்பட்டவை
- எய்துப = அடைவர்
- திண்ணியர் = வலியர்
- உருவுகண்டு = வடிவின் சிறுமை நோக்கி
- எள்ளாமை = இகழாதிருத்தல்
- கலங்காது = மனந்தெளிந்து
- கண்டவினை = துணிந்த வினையிடத்து
- துளங்காது = சோம்பலின்றி
- தூக்கம் = நீட்டித்தல்
- கழிந்து = ஒழிந்து
- செயல் = செய்க
- உறவரின் = மிகுந்து வருமாயினும்
- துணிவாற்றி = துணிவை நெறியாகக் கொண்டு
- செய்க = செய்யவேண்டும்
- பயக்கும் = உண்டாக்கும்
- வேண்டாரை = கொள்ளாத அமைச்சரை
- வேண்டாது = விரும்பாது
- உலகு வேண்டாது = உயர்ந்தோர் நன்கு மதியார்
இலக்கணக்குறிப்பு
- செய்யாமல் = எதிர்மறை வினையெச்சம்
- செய்த = இறந்தகாலப் பெயரெச்சம்
- வையகமும் வானகமும் = எண்ணும்மை
- வையகம் – பூமிக்குக் காரணப்பெயர்
- அரிது = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
- காலத்தினால் = உருபு மயக்கம்
- பெரிது = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
- ஞாலத்தின் = ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உருபு உறழ் பொருளில் வந்துள்ளது
- தூக்கார் = முற்றெச்சம்
- தூக்கின் = எதிர்கால வினையெச்சம்
- செயின் = வினையெச்சம்
- தெரிவார் = வினையாலணையும் பெயர்
- பனைத்துணையா = ‘ஆ’ ஆக என்பதன் தொகுத்தல்
- சால்பு = பண்புப்பெயர்
- வரைத்து = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
- உதவி வரைத்து = குறிப்புப் பெயர்
- சால்பின் வரைத்து = அஃறிணை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
- மறவற்க, துறவற்க = எதிர்மறை வியங்கோள் வினை முற்றுகள்
- எழுபிறப்பும் = முற்றும்மை
- துடைத்தவர் = வினையாலணையும் பெயர்
- நன்றி மறப்பது = இரண்டாம் வேற்றுமைத் தொகை; மறப்பது = தொழிற்பெயர் (மறத்தல் என்னும் பொருள் தருவதால்)
- உள்ள = வினையெச்சம்
- கெடும் = செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
- செயினும் = ‘உம்’ இழிவு சிறப்பு
- கொன்றார் = வினையாலணையும் பெயர்
- கொன்ற = பெயரெச்சம்
- அகழ்வார், இகழ்வார் = வினையாலணையும் பெயர்கள்
- பொறுத்தல் = தொழிற்பெயர்
- மறத்தல் = தொழிற்பெயர்
- பொறுத்தல் = அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
- நன்று = குறிப்பு வினைமுற்று
- விருந்து = பண்பாகுபெயர்
- ஒரால், பொறை = தொழிற்பெயர்கள்
- நீங்காமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
- போற்றி = வினையெச்சம்
- ஒழுகப்படும் = செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
- ஒறுத்தார் = வினையாலணையும் பெயர்
- பொதிந்து = வினையெச்சம்
- வையார் = எதிர்மறைப் பலர்பால் வினைமுற்று
- பொறுத்தார் = வினையாலணையும் பெயர்
- பொன்றும் = பெயரெச்சம்
- தற்பிறர் = ஏழாம் வேற்றுமைத் தொகை
- செய்யினும் = சிறப்பு உம்மை
- நொந்து = வினையெச்சம்
- அறன் – ஈற்றுப்போலி
- செய்தாரை = வினையாலணையும் பெயர்
- விடல் = அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
- துறந்தார் = வினையாலணையும் பெயர்
- இன்னாச் சொல் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நோற்கிற்பவர் = வினையாலணையும் பெயர்
- உண்ணாது = எதிர்மறை வினையெச்சம்
- அற்றம் = தொழிற்பெயர்
- அழிக்கலாகா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஒரீஇ = சொல்லிசை அளபெடை
- உய்ப்பது = வினையாலணையும் பெயர்
- சென்ற இடத்தால் = உருபு மயக்கம் (ஏழன் உருபு நிற்க வேண்டிய இடத்தில் மூன்றன் உருபு நின்றது)
- யார் யார் = அடுக்குத்தொடர்
- எண்பொருள், நுண்பொருள் = பண்புத்தொகைகள்
- செல = வினையெச்சம்
- தழீஇ = சொல்லிசையளபெடை
- மலர்தல், கூம்பல் = தொழிற்பெயர்கள்
- மலர்தலும் கூம்பலும் = எண்ணும்மை
- எவ்வதுறைவது = வினையாலணையும் பெயர்
- அவ்வதுறைவது = தொழிற்பெயர்
- அறிகல்லாதவர் = வினையாலணையும் பெயர்
- அஞ்சுவது = வினையாலணையும் பெயர்
- அஞ்சாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
- அஞ்சல் = தொழிற்பெயர்
- அறிவார்தொழில் = ஆறாம் வேற்றுமைத்தொகை
- அதிர = வினையெச்சம்
- உடையார், இலர் = குறிப்பு வினைமுற்றுகள்
- வினைத்திட்பம் = நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ஏழாம் வேற்றுமைத் தொகை
- மனத்திட்பம் = ஆறாம்வேற்றுமைத் தொகை
- பிற = பலவின்பால் வினைமுற்று
- ஆய்ந்தவர் = வினையாலணையும் பெயர்
- ஒரால், ஒல்காமை = தொழிற்பெயர்கள்
- கோள் = முதனிலை திரிந்த தொழிற்பெயர்
- எற்றா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கொட்க = செயவென்னெச்சம் (கொட்கு – பகுதி)
- சொல்லுதல் = தொழிற்பெயர்
- யார்க்கும் = முற்றும்மை
- எளிய = குறிப்பு வினைமுற்று
- செயல் = தொழிற்பெயர்
- சொல்லிய = பெயரெச்சம்
- எய்தி = வினையெச்சம்
- மாண்டார் = வினையாலணையும் பெயர்
- உள்ளப்படும் = செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று
- எண்ணிய = வினையாலணையும் பெயர்
- எய்துப = பலர்பால் வினைமுற்று
- எண்ணியாங்கு = எண்ணியவாங்கு என்பதன் தொகுத்தல் விகாரம்
- கண்டு = வினையெச்சம்
- எள்ளாமை = தொழிற்பெயர்
- உடைத்து = குறிப்பு வினைமுற்று
- பெருந்தேர் = பண்புத்தொகை
- கலங்காது, துளங்காது, கடிந்து = வினையெச்சங்கள்
- தூக்கம் = தொழிற் பெயர
- செய்க = வியங்கோள் வினைமுற்று
- வேண்டாரை = வினையாலணையும் பெயர்
- உலகு = இடவாகுபெயர்