12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்
12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்

கலம்பகம் குறிப்பு

  • பலவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்துக் கட்டிய மாலையைக் கதம்பம் என்பர்.
  • அதுபோலப் பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையைக் கலம்பகம் என்ற பெயரால் வழங்கினர்.
  • கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாகக் கருதுவர் டாக்டர் உ.வே.சா.
  • கலம் – பன்னிரண்டு
  • பகம் – அதில் பாதி (ஆறு)
  • பதினெட்டு உறுப்புகள் உடையதாகப் பாடப்படுவது கலம்பகம்.
  • புயவகுப்பு, அம்மானை, குறம், மறம், கொற்றியார் முதலியன அப் பதினெட்டு உறுப்புகள் ஆகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

முதல் கலம்பக நூல்

  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் என்பர்.

12 ஆம் வகுப்பு மதுரைக் கலம்பகம்

  • மதுரைக் கலம்பகம் மதுரை மாநகரிற் கோவில் கொண்டுள்ள அருள்மிகு அங்கயற்கண்ணி உடனாய சொக்கநாதப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல்.
  • இந்நூலைப் பாடியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் ஆவார்.
  • மதுரைக் கலம்பகம் நூலின் ஆசிரயர் = குமரகுருபரர்.

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

  • பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாய் இருந்து பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுந்திறன் பெற்றவர் குமரகுருபரர்.
  • அவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையில் மிகச் சிறந்த ஒன்று என்பர்.
  • கந்தர் கலி வெண்பா, காசிக் கலம்பகம், முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன இவர் இயற்றிய வேறு சில நூல்கள் ஆகும்.
  • குமரகுருபரரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் இன்னோசை ஆகும்.
  • தமிழ் மீது இவருக்கு இருந்த அன்பு அளவிடற்கரியது.
  • இவர் தமிழையும் தெய்வத்தையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவியாவார்.

மேக விடு தூது

  • “மேக விடு தூது” பாடியவர் = குமரகுருபரர்.
  • “முகில் விடு தூது” பாடியவர் = குமரகுருபரர்.
  • குமரகுருபரர் தனது “மதுரைக் கலம்பகம்” நூலில் இறைவன் மீது “மேக விடு தூது” பாடியுள்ளார்.

தூது இலக்கியம்

  • தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகைகளில் மிகப்புகழ்பெற்ற ஒன்று.
  • தான் விரும்பும் தலைவனுக்குத் தலைவி தூது விடுப்பதாக அமைத்துக்கொண்டு, பேசாத பொருள்களைப் பேசுவது போல எழுதியுள்ள தூது நூல்கள் அனைத்து மொழிகளிலும் காணக்கிடக்கின்றன.
  • வடமொழிக்கவிஞர் காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ் பெற்றதாகும்.
  • “முகில் விடு தூது” பாடியவர் = குமரகுருபரர்.

அருஞ்சொற்பொருள்

  • ஏமவெற்பு = மேருமலை
  • ஏமம் = பொன்
  • மலயாசலம் = பொதியில் மலை
  • கோமகட்கு அன்பர் = அரசியாகிய தடாதகைப் பிராட்டிக்குக் கணவர்
  • சந்தமலி சாரல் = சந்தன மரங்கள் மிக்க மலைச்சாரல்
  • மதிப்பிஞ்சு = பிறை நிலா

இலக்கணக்குறிப்பு

  • கயிலாய வெற்பு = இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அசலம் = காரணப்பெயர்
  • முச்சங்கம் = பண்புத் தொகை
  • துஞ்சுமுகில், இரை தேர் குயில், வளர்கூடல் = வினைத் தொகைகள்
  • மதிப்பிஞ்சு = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • மாமதி = உரிச்சொல் தொடர்
  • இரைதேர் = இரண்டாம் வேற்றுமைத் தொகை.

Leave a Reply