12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு

12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு

12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு
12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு

பள்ளு இலக்கியம்

  • ‘பள்’ என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
  • ஆகவே பள்ளு உழவரின் பாட்டுக்குப் பெயராக வந்தது.
  • பள்ளு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

புலனென மொழிப் புலனுணர்ந் தோரோ

சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப் புலனுணர்ந் தோரோ

–     தொல்காப்பியர்

தொல்காப்பியர் குறிப்பிடும் புலன் வகை

  • “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரோ” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான புலன் என்னும் இலக்கிய வகை ‘பள்ளு வகை’ இலக்கியத்திற்குப் பொருந்தும் என்பர்.

12 ஆம் வகுப்பு முக்கூடற்பள்ளு

  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது முக்கூடற்பள்ளு ஆகும்.

சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சிய நூல்

  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக முக்கூடற் பள்ளு தெரிகிறது.

பள்ளு இலக்கியம்

  • உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கியம் பள்ளு.
  • மூத்தபள்ளி, இளையபள்ளி குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல், நாட்டுவளன், குறிகேட்டல், மழை வேண்டி வழிபடல், மழைக்குறியோர்தல், ஆற்றில் நீர் வரவு முதலான பல உறுப்புகளைப் பெற்றது பள்ளு இலக்கியமாகும்.
  • சிந்தும் விருத்தமும் பரவிவர இது பாடப் பெறும்.
  • இந்நூலை இயற்றியவர் இன்னார் என அறியப்படவில்லை.
  • இந்நூல் தோன்றிய காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்பர்.

அருஞ்சொற்பொருள்

  • தயிர்க்கண்டம் = தயிர்க் கட்டிகள்
  • மறுகுதல் = சுழலுதல்
  • வான்சுழி வெள்ளம் = அதிகமான சுழித்தலுடன் ஓடிவரும் பெருவெள்ளம்

இலக்கணக்குறிப்பு

  • வெண்தயிர் = பண்புத்தொகை
  • காய, மாய = பெயரெச்சங்கள்
  • நாழிகை வாரம் = உம்மைத் தொகை
  • உரைத்திடும் சந்தனம் = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • தாபதர் உள்ளம் = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • செந்நெல் = பண்புத்தொகை
  • சுழி வெள்ளம் = வினைத்தொகை

Leave a Reply