6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
- மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த வெளிநாட்டினர் = சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் (பாக்டீரிய கிரேக்கர்கள்), குஷானர்கள் ஆவர்.
- குப்தப் பேரரசு அமைவதற்கு முன்னர் வட இந்தியப் பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் = சுங்கர்களும் கன்வர்களும்..
- தெற்கு பகுதியில் ஆட்சி செய்தவர்கள் = சாதவாகனர்கள்.
பௌத்த பண்பாட்டின் முக்கிய மையம்
- மௌரிய அரசின் வீழ்சிக்கு பிறகு மகதம் பேரரசாக இல்லாத போதும், பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொல்லியல் சான்றுகள்
- தனதேவரின் அயோத்தி கல்வெட்டு
- பெர்சிபோலிஸ் நக்ஸி ரஸ்தம் கல்வெட்டு
- மோகா (தட்சசீலம் செப்புப்பட்டயம்)
- ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு
- நாசிக் மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி)
- முதலாம் டேரியஸின் கல்வெட்டு
நாணயங்கள்
- சாதவாகனரின் நாணயங்கள்
- இரண்டாம் காட்பிஸிசின் நாணயங்கள்
- ரோமானிய நாணயங்கள்
இலக்கிய சான்றுகள்
- புராணங்கள்
- கார்கி சம்கிதா
- பாணபட்டரின் ஹர்ஷ சரிதம்
- பதஞ்சலியின் மகாபாஷ்யம்
- குணாதியாவின் பிரிகஸ்தகதா
- நாகார்ஜுனாவின் மத்யமிக சூத்ரா
- அஸ்வகோஷரின் புத்த சரிதம்
- காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்
அயல் நாட்டவர் குறிப்புகள்
- சீனப்பயணி யுவான்-சுவாங் குறிப்புகள்
சுங்கர்கள்
- மௌரியப் பேரரசின் கடைசி அரசர் = பிருகத்ரதா.
- பிருகத்ரதாவின் படைத்தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
- மௌரிய பேரரசின் கடைசி அரசன் பிருகத்ரதாவை கொன்றவன் = புஷ்யமித்ர சுங்கர்.
- சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் = புஷ்யமித்ர சுங்கர்.
- புஷ்யமித்ர சுங்கரின் தலைநகரம் = பாடலிபுத்திரம்.
- பாக்டீரியாவின் அரசன் மினான்டரை தோற்கடித சுங்க அரசன் = புஷ்யமித்ர சுங்கர்.
- கலிங்க அரசர் காரவேலனின் படையெடுப்பை முறியடித்த சுங்க மன்னன் = புஷ்யமித்ர சுங்கர்.
- புஷ்யமித்திரர் பின்பற்றிய சமயம் = வேதசமயம்.
- இருமுறை அஸ்வமேத யாகம் நடத்திய சுங்க அரசன் = புஷ்யமித்ர சுங்கன்.
- புஷ்யமித்ர சுங்கரின் மகன் = அக்னிமித்ரர்.
- “மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தை இயற்றியவர் = காளிதாசர்.
- காளிதாசர் இயற்றிய “மாளவிகாக்னிமித்ரம்” என்ற நாடகத்தின் கதாநாயகனாக கருதப்படுபவர் = புஷ்யமித்ர சுங்கனின் மகன் அக்னிமித்திரர்.
- அக்னிமித்ரரின் மகன் = வசுமித்ரர்.
- அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர், ககிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டார் என்ற தகவலை குறிப்பிட்டுள்ள நூல் = காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்.
- சுங்க வம்சத்தினர் ஆட்சி செய்த காலம் = நூறு ஆண்டுகள்.
- சுங்க வம்சத்தின் கடைசி அரசன் = தேவபூதி.
- சுங்க மன்னன் தேவபூதியின் படைத்தளபதி = வாசுதேவ கன்வர்.
- சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூதியை கொன்றவன் = தேவபூதியின் படைத்தளபதி வாசுதேவ கன்வர்.
- கன்வர் வம்சத்தை தோற்றுவித்தவர் = வாசுதேவ கன்வர்.
சுங்கர்கள் ஆட்சியின் முக்கியத்துவம்
- கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாக்டீரியாவை சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்தவர்கள் சுங்கர்கள் ஆவர்.
- சுங்க வம்சத்தினர் “வேதமத” நடைமுறைகளை பின்பற்றினர்.
- சுங்கர்கள் “வைணவத்தை” வளர்த்தனர்.
- சமஸ்கிருத மொழி வளர்ச்சி பெற்று அரசவை மொழியானது.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருத மொழி அரசவை மொழியாக உயர்ந்தது = சுங்கர்கள் ஆட்சிக் காலத்தில்.
சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர்
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞர் = பதஞ்சலி.
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண நூல் = யோகசூத்திரம்
- கூடுதல் தகவல்:
- சமஸ்கிருத மொழியின் முதல் இலக்கண அறிஞர் = பாணினி.
- சமஸ்கிருத மொழியின் முதல் இலக்கண நூல் = அஷ்டாத்யாயி.
- சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியை ஆதரித்த மன்னன் = புஷ்யமித்ர சுங்கன்.
சாஞ்சி ஸ்தூபி
- புஷ்யமித்திரர் பௌத்தர்களை துன்புறுத்தினார்.
- யாருடைய ஆட்சிக்காலத்தில் “பார்குத், சாஞ்சி” ஆகிய இடங்களில் இருந்த பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டு புதுபிக்கப்பட்டன = புஷ்யமித்ர சுங்கன்.
- பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
- ஸ்தூபிகளில் கற்களுக்கு பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை யாருடைய காலத்தில் நடைமுறைக்கு வந்தது = புஷ்யமித்ர சுங்கர் ஆட்சிக்காலத்தில்.
- சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபி யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன = சுங்கர்கள் காலத்தில்.
- சாஞ்சி ஸ்தூபி உள்ள இடத்தில் சுற்றுச் சுவர் அமைத்தவர்கள் = சுங்கர்கள்.
ஹதிகும்பா கல்வெட்டு
- கலிங்க அரசர் காரவேலர் பற்றி அறிந்துக் கொள்ள உதவும் கல்வெட்டு = ஹதிகும்பா கல்வெட்டு.
- ஹதிகும்பா கல்வெட்டை உருவாக்கியவர் = கலிங்க அரசர் காரவேலர்.
- “யானை குகை கல்வெட்டு” என அழைக்கப்படுவது = ஹதிகும்பா கல்வெட்டு.
- சுங்க அரசர்களின் சமகாலத்தவர் = கலிங்க மன்னர் காரவேலர்.
கன்வர்கள்
- கன்வ வம்சத்தில் உள்ள அரசர்களின் எண்ணிக்கை = நான்கு.
- கன்வ வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 45 ஆண்டுகள்.
- கன்வ அரசர்கள் நால்வர் = வாசுதேவர், பூமிபுத்திரர், நாராயணர், சுசர்மன்.
- கன்வ வம்சத்தை துவக்கி வைத்தவர் = வாசுதேவ கன்வர்.
- கன்வ வம்சத்தின் கடைசி அரசன் = சுசர்மன்.
- கன்வ வம்சத்தின் கடைசி அரசன் சுசர்மனை கொன்றவர் = சாதவாகன அரசர் சிமுகா.
சாதவாகனர்கள்
- குஷானர்கள் வடஇந்தியாவில் ஆட்சி செய்த காலம் = 300 ஆண்டுகள்.
- தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்கள்) ஆட்சி செய்த காலம் = 450 ஆண்டுகள்.
- சாதவாகன வம்சத்தை துவக்கி வைத்தவர் = சிமுகா.
- சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 23 ஆண்டுகள்.
- சிமுகாவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் = கிருஷ்ணா.
- யாருடைய ஆட்சிக் காலத்தில் சாதவாகன அரசு பேரரசாக உயர்ந்தது = கிருஷ்ணா, சதகர்ணி.
- அஸ்வமேத யாகம் செய்த சாதவாகன அரசர் = சதகர்ணி.
- சாதவாகன அரசர்களில் தலைச் சிறந்தவர் = கௌதமிபுத்திர சதகர்ணி.
- கௌதமிபுத்திர சதகர்ணியின் தாய் = கௌதமி பாலஸ்ரீ.
- “நாசிக் மெய்கீர்த்தி” (பிரசஸ்தி) வெளியிட்டவர் = கௌதமி பாலஸ்ரீ.
- சாதவாகனர்களின் (ஆந்திரர்கள்) கடல்சார் திறனையும், கடற்படை வலிமையையும் கூறும் நாணயங்கள் = கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட வசிஸ்டபுத்திர ஸ்ரீபுலமாயி நாணயங்கள்.
போகர் கல்வெட்டு
- தென்கிழக்கு ஆசியப பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றி கூறும் கல்வெட்டு = போகர் கல்வெட்டு.
சாதவாகனர்களின் இலக்கியப் பங்களிப்பு
- சாதவாகன அரசர் “ஹாலா” ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர் ஆவார்.
- பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட “சட்டசாய்” (சப்தசதி) எனும் நூலினை படைத்தவர் = அரசர் ஹாலா.
- கி.மு இரண்டாம் நூற்றாண்டில் “தக்காணப்” பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.
சாதவாகனர்களின் கலை கட்டிடக்கலை
- அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டியவர்கள் = சாதவாகனர்கள்.
- அமராவதி பாணி கலையை துவக்கி வைத்தவர்கள் = சாதவாகனர்கள்.
- வியட்நாமில் உள்ள ஒக்-யோ என்னும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியப்பட்ட புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது.
- பிற்காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள் இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களின் சின்னம் பொறிக்கப்பட்ட ஈய அல்லது செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.
- தாய்லாந்தில் நாக்கான் பதோம் என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அதே வடிவத்தில் அமைந்துள்ளது.
கிரேக்கர்கள், பார்தியர்கள்
- அலெக்சாண்டர் இந்தியாவி விட்டு கிளம்பும் பொழுது, தான் ஆக்கிரமித்த பகுதிகளை நிர்வகிக்க தனது பிராந்திய ஆளுநர்களை நியமித்தார்.
- அவற்றில் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த 2 சத்ராபிகள் (மாநிலங்கள்) = பாக்டீரியா, பார்த்தியா (பகலவர்கள்).
- பாக்டீரியா சத்ராபி “முதலாம் டயோடாடஸ்” தலைமையில் சுதந்திர அரசாக ஆனது.
- பார்த்தியா சத்ராபி “அர்சாகஸ்” தலைமையில் சுதந்திர அரசாக உருவானது.
இந்தோ கிரேக்கர்கள்
- இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குடியேறி, இந்தியர்களோடு திருமண உறவு மூலம், இந்தியக் கலாச்சாரத்தில் கலந்தனர்.
முதலாம் டெமிட்ரியஸ்
- இவர் இந்தோ-கிரேக்க மன்னர் “யுதி டெமிஸ்” என்பவற்றின் மகன்.
- மாசிடோனியாவின் மன்னராக இருந்தவர் = முதலாம் டெமிட்ரியஸ்.
- சதுர வடிவிலான இருமொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டவர் = முதலாம் டெமிட்ரியஸ்.
- நாணயத்தின்,
- தலைப் பகுதியில் = கிரேக்க மொழியும்
- பூப்பகுதியில் = கரோஷ்தி மொழியும் இருந்தன.
- டெமிட்ரியஸ் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர்.
மினான்டர்
- இந்தோ கிரேக்க அரசர்களில் புகழ் பெற்றவர் = மினான்டர்.
- பாக்டீரிய அரசன் “மிலிந்தா” என்பவருக்கும், பௌத்தத் துறவி “நாகசேனாவுகும்” இடையே நடைபெற்ற உரையாடலை பற்றி கூறும் நூல் = மிலிந்த பன்கா.
- இந்த மிலிந்தா அரசனே “மினான்டர்” என கூறப்படுகிறது.
இந்தோ கிரேக்கர்களின் பங்களிப்பு
- நாணய அச்சு வார்ப்பு முறையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள் = இந்தோ கிரேக்கர்கள்.
- நாணயங்களில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கும் முறையை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள் = இந்தோ கிரேக்கர்கள்.
- குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள் = கிரேக்கர்கள்.
- மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்து எடுக்கும் முறையை கிரேக்கர்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர்.
இந்தோ பார்த்தியர்கள்
- இந்தோ கிரேக்கருக்கு பிறகு இந்தியா வந்தவர்கள் = இந்தோ சைத்தியர்கள்.
- இந்தோ கிரேக்கர்கள், இந்தோ சைத்தியர்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் = இந்தோ பார்த்தியர்கள்.
- இந்தோ பார்த்தியர்களை தோற்கடித்து விரட்டியவர்கள் = குஷானர்கள்.
- இந்தோ பார்த்திய வம்சத்தை தோற்றுவித்தவர் = கோண்டோ பெர்னஸால்.
- இந்தோ பார்த்தியா அரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது = கோண்டோபரித் வம்சம்.
- கோண்டோ பெர்னஸால் உடன் தொடர்புடைய கிறித்துவ உபதேசியார் = புனித தாமஸ்.
- கோண்டோ பெர்னஸால் அவைக்கு வருகை தந்த கிறித்துவ உபதேசியார் = புனித தாமஸ்.
சாகர்கள் (சைத்தியர்கள்)
- இந்தியாவில் இந்தோ கிரேக்கர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள் = சாகர்கள்.
- நாடோடி இனத்தவரான இவர்கள், ஈரானிய சைத்தியர்கள் ஆவர்.
- சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் “சாகர்கள்” என அறியப்பட்டனர்.
- இந்தியாவில் சாகர்களின் ஆட்சியை துவக்கி வைத்தவர் = மாவோஸ் (அல்லது) மேகா.
- சாகர்களின் தலைநகரம் = சிர்காப்.
- “மோரா கல்வெட்டுடன்” தொடர்புடையவர்கள் = சாகர்கள்.
- மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசன் = மாவோஸ் (மேகா).
- மாவோஸ் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்கள் = சிவன், புத்தர்.
- சிவன், புத்தர் உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாகர் வம்ச அரசன் = மாவோஸ்.
- சாகர்கள் “ஷப்திராபஸ்” அல்லது “சத்ரப்ஸ்” என்ற பெயரில் ஆளுநர்களை நியமித்து ஆட்சியை நிர்வகித்தனர்.
ஜூனாகத் கல்வெட்டு கிர்னார் கல்வெட்டு
- சாகர் வம்சத்தின் முக்கிய அரசன் = ருத்ரதாமன்.
- ருத்ரதாமனுடன் தொடர்புடைய கல்வெட்டு = ஜூனாகத் கல்வெட்டு (கிர்னார் கல்வெட்டு).
- ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டை உருவாக்கியவர் = சாகர் அரசன் ருத்ரதாமன்.
- தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு = ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு.
- இந்தியாவில் தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு = ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு.
குஷானர்கள்
- சீனாவின் யூ-ச்-சி பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் குஷானர்கள்.
- யு-ச்-சி பழங்குடியினரின் பிற பிரிவினர், குஷானர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.
- குஷானர்களின் தொடக்கக்கால தலைநகரம் = காபூல்.
- குஷானர்களின் தலைநகரம் காபூலில் இருந்து பின்பு எங்கு மாற்றப்பட்டது = பெஷாவர் (புருஷபுரம்).
- குஷான அரசர்களில் தலைச் சிறந்தவர் = கனிஷ்கர்.
கனிஷ்கர்
- குஷான வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் = கனிஷ்கர்.
- கனிஷ்கர் துவக்கி வாய்த்த சகாப்தம் = சாகர் சகாப்தம், கி.பி (பொ.ஆ) 78.
- கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு = கி.பி (பொ.ஆ) 78.
- காஷ்மீரை கைப்பற்றினார் கனிஷ்கர்.
- சீனாவின் “பன்-சியாங்” என்னும் தளபதியை வீழ்த்தி சீன ஊடுருவலை முறியடித்தார்.
- கனிஷ்கர் “புத்த மதத்தை” பின்பற்றினார்.
- கனிஷ்கர் ஆதரித்த புத்த சமயம் = மகாயான புத்த மதம்.
- கனிஷ்கரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = அஷ்வகோஷர்.
- புத்த மதத்தை அரச மதமாக அறிவித்த அரசர் = கனிஷ்கர்.
- நான்காவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் = கனிஷ்கர்.
- நான்காவது புத்த சமய மாநாடு நடிப்ற்ற இடம் = காஷ்மீருக்கு அருகே உள்ள குந்தல வனம்.
- இந்த நான்காம் மாநாட்டில் தான் புத்த மதம் பிளவுற்று ஹீனயானம், மகாயானம் என இரண்டு பிரிவிகளாக பிரிந்தது.
- கனிஷ்கர் அவையை அலங்கரித்த புத்தமத அறிஞர்கள் = அஷ்வகோஷர், வசுமித்திரர், நாகார்ஜூனர்.
- காஷ்மீரில் ‘கனிஷ்கபுரம்” என்னும் புதிய நகரை உருவாக்கினார்.
- காந்தாரப் கலைப்பள்ளி, கனிஷ்கர் காலத்தில் உச்சநிலையை அடைந்தது.
அஷ்வகோஷர்
- கனிஷ்கரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = அஷ்வகோஷர்.
- “புத்த சரிதம்” என்னும் நூலின் ஆசிரியர் = அஷ்வகோஷர்.
- முதல் சம்ஸ்கிருத நாடக நூல் = புத்தசரிதம்.
முதலாம் கட்பிசஸ்
- குஷானர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவத் தளபதி = முதலாம் கட்பிசஸ்.
- இந்தோ கிரேக்கர்கள், இந்தோ பார்த்தியர்கள் ஆகியோரை தோற்கடித்தார்.
இரண்டாம் கட்பிசஸ்
- சீன, ரோமானிய அரசர்களுடன் நல்ல நட்புறவை மேற்கொண்டார்.
- “சிவபெருமான்” உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட குஷான மன்னன் = இரண்டாம் கட்பிசஸ்.
- நாணயத்தில் அரசரின் பெயர் “கரோஸ்தி” மொழியில் எழுதப்பட்டிருக்கும்.
கூடுதல் தகவல்கள்
- அயோத்திக் கல்வெட்டை உருவாக்கியவர் = தனதேவர்.
- “ஹர்ஷ சரிதம்” நூலின் ஆசிரியர் = பாணபட்டர்.
- “மகாபாஷ்யம்” நூலின் ஆசிரியர் = பதஞ்சலி.
- “பிரகஸ்தகதா” நூலின் ஆசிரியர் = குணாதியா.
- “மத்யமிக சூத்ரா” நூலின் ஆசிரியர் = நாகர்ஜுனா.
- “புத்த சரிதம்” நூலின் ஆசிரியர் = அஸ்வகோஷர்.
- “மாளவிகாக்னிமித்ரம்” நூலின் ஆசிரியர் = காளிதாசர்.
- இரண்டாம் பருவம்
-
- வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
- மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
- 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
- 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
- 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
- 6TH HISTORY இந்தியா மௌரியருக்குப் பின்னர்
- குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
-