6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹர்ஷர் ஆட்சியில் சமகாலத்தில் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
- மத்திய மற்றும் கிழக்கு தக்காணத்தின் பெரும்பகுதி பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள் கீழ் இருந்தன.
- இடைக்கால இந்தியாவின் பண்பு அம்சமாக இருந்தவை = பிராந்திய அதிகார மையங்களின் தோற்றம்.
பல்லவர்கள்
- பல்லவர்களின் தலைநகரம் = காஞ்சிபுரம்.
- பல்லவ அரசின் மையப்பகுதியாக இருந்தது = தொண்டை மண்டலம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பல்லவர் ஆட்சிக்கான சான்றுகள்
கல்வெட்டு சான்றுகள் | மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு |
செப்பேடுகள் | காசக்குடிச் செப்பேடுகள் |
இலக்கியங்கள் | மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக் கலம்பகம் |
வெளிநாட்டவர் குறிப்புகள் | யுவான் சுவாங்கின் குறிப்புகள் |
பல்லவ அரசர்கள்
- பல்லவ அரசர்கள் யாருக்கு கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் = சாதவாகனர்கள்.
- இரண்டாம் சிம்மவர்மனின் மகன் = சிம்மவிஷ்ணு.
- களப்பிரர்களை அழித்து பலலவ வம்சத்தை துவக்கி வைத்தவர் = சிம்மவிஷ்ணு.
- பல்லவ வம்சத்தை துவக்கியவர் = சிம்மவிஷ்ணு.
- சேரர்கள், பாண்டியர்களை வென்ற பலலவ மன்னன் = சிம்மவிஷ்ணு.
- பல்லவ மன்ன சிம்மவிஷ்ணுவின் மகன் = முதலாம் மகேந்திரவர்மன்.
- முதலாம் மகேந்திரவர்மனின் மகன் = முதலாம் நரசிம்மவர்மன்.
- பல்லவ அரசர்களின் மற்ற முக்கிய அரசர்கள் = ராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன்.
- கடைசி பல்லவ மன்னன் = அபராஜிதன்.
மகேந்திரவர்மன்
- மகேந்திரவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 600 – 630 வரை.
- மகேந்திரவர்மன் பின்பற்றிய சமயம் = சமண சமயம்.
- மகேந்திரவர்மனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர் (திருநாவுக்கரசர்).
- திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்த பல்லவ மன்னன் = மகேந்திரவர்மன்.
- மகேந்திரவர்மன் அறிமுகம் செய்த பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது = மகேந்திரபாணி.
- மகேந்திரவர்மன் எழுதிய நாடக நூல் = மத்தவிலாசப்பிரகசனம் (குடிகாரர்களின் மகிழ்ச்சி).
- மத்தவிலாசப்பிரகசனம் என்பதன் பொருள் = குடிகாரர்களின் மகிழ்ச்சி.
- மத்தவிலாசப்பிரகசனம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருத மொழியில்.
- பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் நோக்கில் மகேந்திரவர்மன் எழுதிய நூல் = மத்தவிலாசப்பிரகசனம்.
- மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் யாருடன் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது = வாதாபியை ஆண்ட மேலை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியுடன்.
- மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் = சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி.
- மகேந்திரவர்மனை தோற்கடித்து எவ்விடத்தை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார் = வெங்கி.
முதலாம் நரசிம்மவர்மன்
- முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 630 – 668 வரை.
- தனது தந்தையின் தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்து கொன்றார் முதலாம் நரசிம்மவர்மன்.
- இரண்டாம் புலிகேசியின் தலைநகரம் வாதாபியை தீக்கரை ஆக்கினார் முதலாம் நரசிம்மவர்மன்.
- முதலாம் நரசிம்மவர்மன், வாதாபியை அழித்து “வாதாபி கொண்டான்” என்ற பட்டதை சூட்டிக் கொண்டார்.
பரஞ்சோதி முனிவர் குறிப்பு
- முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி = பரஞ்சோதி முனிவர்.
- பரஞ்சோதி முனிவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் = சிறுத்தொண்டர்.
- 63 நாயன்மார்களில் ஒருவர் = பரஞ்சோதி முனிவர் எனப்படும் சிறுத்தொண்டர்.
- பரஞ்சோதி முனிவர் பலலவ படைக்கு தலைமை தாங்கி சென்று, இரண்டாம் புலிகேசிக்கு எதிரான போரில் வெற்றியை தேடித் தந்தார். வாதாபி நகரையும் அழித்தார்.
- வாதாபி வெற்றிக்கு பிறகு மனமாற்றம் அடைந்து சிவபக்தராக மாறினார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.
இரண்டாம் நரசிம்மவர்மன்
- இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலம் = கி.பி. 695 – 722 வரை.
- “ராஜசிம்மன்” என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிமம்வர்மன்.
- சீன நாட்டிற்கு தூதுக் குழுவினை அனுப்பிய பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிமம்வர்மன்.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = இரண்டாம் நரசிம்மன் எனப்படும் ராஜசிம்மன்.
சிம்மவிஷ்ணு சிறப்பு பெயர்
- பல்லவ மன்னன் சிமம்விஷ்ணுவின் சிறப்பு பெயர் = அவனிசிம்மர்.
முதலாம் மகேந்திரவர்மன் சிறப்பு பெயர்கள்
- சங்கீரணஜதி
- மத்தவிலாசன்
- குணபாரன்
- சித்திரகாரப் புலி
- விசித்திர சித்தன்
முதலாம் நரசிம்மவர்மன் சிறப்பு பெயர்கள்
- மாமல்லன்
- வாதாபி கொண்டான்.
பல்லவர் கால கட்டிடக்கலை
- பல்லவர் கால கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் = ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாமல்லபுரம் ஒற்றைக்கல் கடற்கரைக் கோவில்கள், வராகர் குகை.
- எந்த ஆண்டு மாமல்லபுரம் ஒற்றைக்கல் கோவில், யுனஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது = 1984.
பல்லவர்கால கட்டிடக்கலை வகைகள்
- பலல்வர் கட்டிடக் கலையை மூன்று வகையாக பிரிப்பர். அவை,
- பாறைக் குடைவரைக் கோவில்கள் = மகேந்திரவர்மன் பாணி.
- ஒற்றைக்கால் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் = மாமல்லன் பாணி (அல்லது) முதலாம் மகேந்திரவர்மன் பாணி.
- கட்டுமானக் கோவில்கள் = ராஜசிம்மன் பாணி (இரண்டாம் நரசிம்மவர்மன் பாணி), நந்திவர்மன் பாணி.
மகேந்திரவர்மன் பாணி
- மகேந்திரவர்மன் பாணியில் அமைக்கபப்ட்டுள்ள சின்னங்கள் உள்ள இடங்கள் = மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக் கோவில்கள்
மாமல்லன் பாணி
- மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் உருவாக்கியவர் = மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்).
- ஐந்து ரதங்களும் ஐந்து வகையான கோவில் கட்டிட பாணியை உணர்த்துகின்றன.
- ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக் கல்லில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன.
- எனவே தான் அவை, “ஒற்றைக்கால் ரதங்கள்” என அழைக்கப்படுகின்றன.
- மாமல்லன் பாணி கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகள் = மகிஷாசுரமர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம்.
- மாமல்லன் பாணி கட்டிடக்கலையில் மிகச் சிறந்தது = மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம்.
- மகாபலிபுரம் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது = சிவபெருமானின் தலையில் இருந்து அருவியெனக் கொட்டும் கங்கை நதி, அர்ஜுனன் தபசு.
உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது
- உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது = மாமல்லபுரத்தில் உள்ள பெருந்தவ வடிவச் சிற்பம்.
- மாமல்லபுரத்தில் உள்ள பெருந்தவ வடிவச் சிற்ப வேலைபாடு, உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியது ஆகும்.
ராஜசிம்மன் பாணி
- ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிம்மவர்மன்.
- பெருங்கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களை கட்டிய பல்லவ மன்னன் = இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மன்.
- கட்டுமானக் கோவில் முறையை தமிழகத்தில் கொண்டுவந்தவர் = ராஜசிம்மன்.
- கட்டுமானக கோவில் கலை பாணிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்).
- மிருதுவான மணற் கற்களால் கட்டப்பட்ட கோவில் = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது = ராஜசிம்மேஸ்வரம்.
- “ராஜசிம்மேஸ்வரம்” என அழைக்கப்படும் கோவில் = காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.
நந்திவர்மன் பாணி
- பிற்கால பல்லவ கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு = நந்திவர்மன் பாணி கோவில்கள்.
- நந்திவர்மன் பாணி கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு = காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவில்.
- காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலை கட்டியவர் = இரண்டாம் நந்திவர்மன்.
பல்லவர் கால சமூகமும் பண்பாடும்
- பல்லவ அரசர்கள் பௌத்த, சமண சமயங்களையும் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.
- ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் பக்தி மார்க்கத்தை வலுப்படுத்த செயல்பட்டனர்.
- பல்லவர் கால சைவ அடியார்கள் = அப்பர், மாணிக்கவாசகர்.
- பலல்வர் கால வைணவ அடியார்கள் = ஆண்டாள், நம்மாழ்வார்.
- பக்தி மார்க்கத்தை போதிக்க ஏதுவாக அடியார்கள், தமிழ் மொழியை பயன்படுத்தினர்.
- சமயக் கூட்டங்களில் பெண்களுக்கு பங்கேற்றனர்.
- தமிழ் பக்தி வழிபாடு இயக்கம் வளர்ச்சி பெறத் துவங்கியதின் பயனாக தமிழகத்தில் இருந்து சமண, பௌத்த இயக்கங்கள் வீழ்ச்சிபெறத் துவங்கின.
பல்லவர் கால கல்வி இலக்கியங்கள்
- பல்லவர் காலத்தில் புகழ் பெற்று விளங்கியது = காஞ்சிபுரம் கடிகை (மடாலயம் அல்லது கல்வி மையம்).
- காஞ்சிக் கடிகையில் ஆசிரியராக இருந்தவர் = வாத்ஸ்யாயர்.
- “வாத்ஸ்யாயர்” எழுதிய நூல் = நியாயபாஷ்யா.
- நியாயபாஷ்யா என்னும் நூலின் ஆசிரியர் = வாத்ஸ்யாயர்.
- தட்சிண சித்திரம் எனப்படுவது
-
- முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்ட தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு நூல் ஆகும்.
- தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான “தட்சிண சித்திரம்” என்பதை தொகுத்தவர் = முதலாம் மகேந்திரவர்மன்.
-
- முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்த சமஸ்கிருத அறிஞர் = தண்டி.
- “தசகுமார சரிதம்” எனும் நூலின் ஆசிரியர் = தண்டி.
- சிம்மவிஷ்ணு காலத்தில் இருந்த சமஸ்கிருத அறிஞர் = பாராவி.
- பாராவி எழுதிய நூல் = கிர்தார்ஜூனியம்.
- கிர்தார்ஜூனியம் என்பது = ஒரு வடமொழி காப்பியம் ஆகும்.
- கிர்தார்ஜூனியம் என்ற வடமொழி காப்பியத்தின் ஆசிரியர் = பாராவி.
- பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் சமய இலக்கியங்கள் = நாயன்மார்களின் தேவாரமும், ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்.
- இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட புலவர் = பெருந்தேவனார்.
- பெருந்தேவனார், மகாபாரதத்தை “பாரதவெண்பா” என்ற பெயரில் தமிழில் மொழிப்பெயர்த்தார்.
பல்லவர்காலக் கலை
- பல்லவர் கால இசை குறித்த கல்வெட்டுகள் எங்கு உள்ளன = குடுமியான்மலை, திருமயம்.
- இசையில் பல்லவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிக்காட்டும் கல்வெட்டுகள் = குடுமியான்மலை, திருமயம் கல்வெட்டுகள்.
- முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் = ருத்ராச்சாரியார்.
- எந்த ஆட்சிக்காலத்தில் சிற்பங்கள் நடனமாடும் வகையில் வடிக்கப்பட்டன = பலல்வர் காலத்தில்.
சாளுக்கியர்கள்
- சாளுக்கியர் தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராட்டியத்தை உள்ளடக்கிய பகுதியை ஆண்டனர்.
- சாளுக்கியர்களின் தலைநகரம் = வாதாபி (பதாமி).
- நெருங்கிய தொடர்புடைய மூன்று வெவேறு சாளுக்கிய அரசுகள் இருந்தான். அவை,
-
- வாதாபிச் சாளுக்கியர்கள்
- வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்).
- கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்).
-
சாளுக்கிய ஆட்சிக்கான சான்றுகள்
கல்வெட்டுச் சான்றுகள் | மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு, பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு |
அயலவர் குறிப்புகள் | யுவான் சுவாங்கின் குறிப்புகள் |
வாதாபி சாளுக்கியர்கள்
- வாதாபிச் சாளுக்கிய வம்சத்தை துவக்கியவர் = முதலாம் புலிகேசி.
- பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறுநில மன்னராக இருந்த முதலாம் புலிகேசி, வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றினார்.
- முதலாம் புலிகேசி வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 543.
- முதலாம் புலிகேசியின் மகன் = முதலாம் கீர்த்திவர்மன்.
- முதலாம் கீர்திவர்மனின் ஆட்சிக்காலம் = கி.பி. 566 – 597 வரை.
- வாதாபி சாளுக்கியர்களின் தலைச்சிறந்த மன்னன் = இரண்டாம் புலிகேசி.
- இரண்டாம் புலிக்கேசியின் ஆட்சிக்காலம் = கி.பி. 610 – 642 வரை.
- பாதாமி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் = இரண்டாம் புலிகேசி.
- இரண்டாம் புலிகேசியின் அவைக்கு தூதுக்குழுவை அனுப்பி வைத்த அரசர் = பாரசீக (ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ.
- ஹர்ஷரை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் = இரண்டாம் புலிகேசி.
- இரண்டாம் புலிகேசி, ஹர்ஷரை நர்மதை ஆற்றன் கரையில் தோற்கடித்தார்.
- ஹர்ஷருக்கும், இரண்டாம் புலிகேசிக்கும் இடையே எல்லையாக வரையறை செய்யப்பட்ட பகுதி = நர்மதை நதி.
- இரண்டாம் புலிகேசி, வெங்கி அரசை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 624.
- இரண்டாம் புலிகேசி, வெங்கி அரசை யாருக்கு வழங்கினார் = தனது சகோதரர் விஷ்ணுவர்த்தனருக்கு.
- கீழைச் சாளுக்கிய வம்சத்தை துவக்கி வைத்தவர் = விஷ்ணுவர்தன்.
- முதல் கீழைச் சாளுக்கிய அரசன் = விஷ்ணுவர்தன்.
- கி.பி. 641 – 647 காலப்பகுதியில் பலல்வர்கள் தக்காணத்தை சூறையாடி “வாதாபியை” கைப்பற்றினர்.
- பல்லவர்களிடம் இருந்து சாளுக்கியர்கள் “வாதாபியை” எப்பொழுது மீட்டனர் = கி.பி. 655.
- காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கிய மன்னர்கள் = முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன்.
- இரண்டாம் கீர்திவர்மனை தோற்கடித்த ராஷ்டிரகூட அரசர் = தந்திதுர்க்கர்.
- ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் = தந்திதுர்க்கர்.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள்
- யாருடைய வழித்தோன்றல் கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் = வாதாபி சாளுக்கியர்கள்.
- கல்யாணி சாளுக்கியர்களின் தலைநகரம் = கல்யாணி (தற்போதைய பசவ கல்யாண்).
- மாளவ அரசர் பராமரை தோற்கடித்து கல்யாணியை கைப்பற்றிய சாளுக்கிய மன்னன் = இரண்டாம் தைலப்பர்.
- மன்யகோட்டாவில் இருந்து தலைநகரை “கல்யாணிக்கு” மாற்றியவர் = முதலாம் சோமேஸ்வரர்.
- வளம் நிறைந்த வெங்கி பகுதியை கைப்பற்ற ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போரிட்ட பேரரசுகள் = தஞ்சை சோழர்களும், மேலைச் சாளுக்கியர்கள்.
- எந்த கல்யாணி சாளுக்கிய மன்னன் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதி சாளுக்கியர்களின் கீழ் கொண்டுவரப்பட்டது = ஆறாம் விக்கிரமாதித்யன்.
சாளுக்கியர்களின் கலை கட்டிடக்கலை
- சாளுக்கியர்கள் சைவம், வைணவம் இரண்டையும் போற்றி வளர்த்தனர்.
- யாருடைய ஆட்சிக்காலத்தில் “வெசாரா பாணி” கோயில் விமானங்கள் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது = சாளுக்கியர்கள் ஆட்சிக்காலத்தில்.
- சாளுக்கியர்கள் காலத்தில் எந்த கட்டுமான முறை வளர்ச்சி பெற்றது = வெசாரா பாணி கோவில் விமானங்கள் கட்டும் முறை.
- சாந்து இல்லாமல் கற்களை மட்டுமே கொண்டு கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் = சாளுக்கியர்கள்.
- சாளுக்கியர்கள் கட்டுமானத்திற்கு மிருதுவான மணற்கற்களைப் பயன்படுத்தினர்.
- சாளுக்கியர்களின் கட்டுமானக் கோவில்கள் உள்ள இடம் = ஐஹோல், வாதாபி, பட்டடக்கல்.
- கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் = வாதாபி விஷ்ணு கோவில், ஐஹோல் விஷ்ணு கோவில் மற்றும் பட்டடக்கல் விருபாக்ஷா கோவில்.
- வாதாபி விஷ்ணு கோவிலை கட்டிய மன்னன் = சாளுக்கிய மன்னன் மங்களேசன்.
- ஐஹோல் கல்வெட்டை நிர்மானித்தவர் = இரண்டாம் விக்கிரமாதித்தன்.
- வாதாபி குகைக் கோவில்களில் புகழ்பெற்றது = சேஷநாகர் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணு சிற்பம்.
- கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் உருவாக்கிய கோவில்கள் = குறுவட்டி மல்லிகார்ஜுன கோவில், லக்கண்டி காசி விஸ்வநாதர் கோவில், பகலி என்னுமிடத்தில் உள்ள கள்ளேஸ்வரர் கோவில், இட்டகியில் உள்ள மகாதேவர் கோவில்.
சாளுக்கிய ஓவியங்கள்
- சாளுக்கியர்கள் பின்பற்றிய ஓவிய முறை = வாகடகர் பாணி.
- பாரசீகத் தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்றதொரு காட்சி அஜந்தா ஓவியமொன்றில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
அய்கோல் கல்வெட்டு
- அய்கோல் கல்வெட்டு உள்ள இடம் = கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள மேகுதி கோவிலில் உள்ளது.
- அய்கோல் கல்வெட்டை உருவாக்கியவர் = இரண்டாம் புலிகேசியின் அவைகளப் புலவர் ரவிகீர்த்தி.
- அய்கோல் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது = சமஸ்கிருத மொழி.
- ஹர்ஷவர்த்தனரை இரண்டாம் புலிகேசி தோற்கடித்ததை குறிப்பிடும் கல்வெட்டு = அய்கோல் கல்வெட்டு.
பட்டடக்கல் யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்
- பட்டடக்கல் = யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் ஆகும்.
- பட்டடக்கல் = கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
- பட்டடக்கல்லில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை = 10.
- வடஇந்திய “நகரா” பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = நான்கு.
- தென்னிந்திய “திராவிட” பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = ஆறு.
- திராவிட பாணியில் அமைந்துள்ள கோவில்கள் = பட்டடக்கல் விருபாக்ஷா கோவில், பட்டடக்கல் சங்கமேஷ்வரா கோவில்.
- நாகரா பாணியில் அமைந்துள்ள கோவில் = பாப்பநாதர் கோவில்.
- பட்டடக்கல் விருபாக்ஷா ஆலயம், எந்தக் கோவிலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது = காஞ்சி கைலாசநாதர் கோவில்.
- காஞ்சி கைலாசநாதர் கோவிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட கோவில் = பட்டடக்கல் விருபாக்ஷா கோவில்.
வெசாரா பாணி கட்டிடக்கலை
- வெசாரா பாணி கட்டிடக்கலை என்பது தென்னிந்தியாவின் “திராவிட” பாணி மற்றும் வடஇந்தியாவின் “நாகரா” பாணி முறையின் கலப்பு ஆகும்.
ராஷ்டிரகூடர்கள்
- ராஷ்டிரகூடர்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை தக்காணப் பகுதியில் ஆட்சி செய்தனர்.
- ராஷ்டிரக்கூடர்களின் தாய்மொழி = கன்னடம்.
- ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் = தந்திதுர்க்கர்.
- தந்திதுர்க்கரை அடுத்தி ஆட்சி போருபெற்றவர் = முதாலம் கிருஷ்ணா
- ராஷ்டிரக்கூட அரசை ஒருங்கிணைத்து விரிவாக்கியவர் = முதலாம் கிருஷ்ணர்.
- உலகப்புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.
ராஷ்டிரக்கூட அரசர்கள்
- ராஸ்டிரக்கூட அரசர்களில் தலைசிறந்தவர் = அமோகவர்ஷன்.
- அமோகவர்ஷன் எங்கு புதிய தலைநகரை உருவாக்கினார் = மன்யக்கோட்டா.
- ராஸ்டிரக்கூடர்களின் துறைமுகம் = புரோச்.
- அமோகவர்ஷர் ஆட்சிக்காலம் = கி.பி. 814 – 878 வரை.
- அமோகவர்ஷரை சமண சமயத்திற்கு மாற்றியவர் = சமணத் துறவி ஜினசேனர்.
- அமோகவர்ஷரின் மகன் = இரண்டாம் கிருஷ்ணர்.
- இரண்டாம் கிருஷ்ணரை தோற்கடித்த சோழ மன்னன் = பராந்தகச் சோழன்.
- பராந்தகச் சோழன், ராஸ்டிரக்கூட அரசர் இரண்டாம் கிருஷ்ணரை எங்கு தோற்கடித்தார் = வல்லம் (தற்போதைய வேலூர் மாவட்டம் திருவல்லம்).
- கி.பி. 916 இல் பராந்தகச் சோழனால், இரண்டாம் கிருஷ்ணர் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்.
- ராஸ்டிரக்கூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர் = மூன்றாம் கிருஷ்ணர்.
- மூன்றாம் கிருஷ்ணர் எந்தப் போரில் சோழர்களை தோற்கடித்தார் = தக்கோலம் (வேலூர் மாவட்டம்).
- தக்கோலம் போரில் சோழர்களை தோற்கடித ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
- இராமேஸ்வரத்தில் “கிருஷ்ணேஸ்வரர்” கோவிலை கட்டியவர் = மூன்றாம் கிருஷ்ணர்.
- ராஸ்டிரக்கூட வம்சத்தின் கடைசி சிறந்த அரசர் = மூன்றாம் கோவிந்தர்.
ராஸ்டிரக்கூடர்களின் இலக்கிய பங்களிப்பு
- ராஸ்டிரக்கூடர்களின் தாய்மொழி = கன்னடம்.
- கன்னட மொழியின் முதல் கவிதை நூல் = கவிராஜமார்க்கம்.
- கவிராஜமார்க்கம் நூலின் ஆசிரியர் = அமோகவர்ஷர்.
- கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்கள் எனப்படுவோர் = ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா.
- ஆதிகவி பம்பாவின் நூல்கள் = ஆதிபுராணம், விக்கிரமார்ஜூன விஜயம்.
- முதல் சமணத் தீர்த்தங்கரான “ரிஷபதேவரின்” வாழ்க்கையை விவரிக்கும் நூல் = ஆதிபுராணம்.
- விக்கிரமார்ஜூன விஜயம், மாகாபாரதத்தின் மீள் தருகை ஆகும். இந்நூலில் பம்பா, தன்னை ஆதரித்த சாளுக்கிய “அரிகேசரியை”, அர்ஜுனன் கதாப்பாத்திரத்தில் பொருத்தி எழுதியுள்ளார்.
எல்லோரா கைலாசநாதர் கோவில்
- எல்லோரா கைலாசநாதர் கோவில் உள்ள இடம் = மகாராஸ்டிரா மாநிலம் ஔரங்காபாத் அருகில்.
- எல்லோராவில் உள்ள குடைவரைக் கோவில்களின் எண்ணிக்கை = முப்பது.
- முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று = எல்லோரா கைலாசநாதர் கோவில்.
- எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.
- எல்லோரா கைலாசநாதர் கோவிலின் பரப்பளவு = 60000 சதுர அடிகள்.
- எல்லோரா கைலாசநாதர் கோவில் கோபுர விமானத்தின் உயரம் = 90 அடி.
- மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலில் கட்டபப்ட்ட கோவில் = எல்லோரா கைலாசநாதர் கோவில்.
- எல்லோரா கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
எலிபெண்டா தீவு
- எலிபெண்டா தீவின் உண்மையான பெயர் = ஸ்ரீபுரி.
- இத்தீவின் உள்ளூர் மக்களால் எலிபெண்டா தீவு எவ்வாறு அழைக்கப்படுகிறது = காரபுரி.
- எலிபெண்டா தீவு எங்குள்ளது = மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே உள்ள தீவு.
- எலிபெண்டா தீவு என பெயரிட்டவர்கள் = போர்த்துகீசியர்கள்.
- எலிபெண்டா தீவில் உள்ள தெய்வம் = சிவன்.
- எலிபெண்டா குகையில் “திரிமூர்த்தி” (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலை உள்ளது.
- கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலை கண்ணை கவரும் வகையில் உள்ளது.
பட்டடக்கல்
- பட்டடக்கல் “சமண நாராயணர் கோவிலை” கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.
- பட்டடக்கல் “காசி விஸ்வேஸ்வரர் கோவிலை” கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.
கூடுதல் தகவல்கள்
- கீழைச் சாளுக்கியர்கள் எனப்படுபவர்கள் = வெங்கிச் சாளுக்கியர்கள்.
- மேலைச் சாளுக்கியர்கள் எனப்படுபவர்கள் = கல்யாணிச் சாளுக்கியர்கள்.
- காஞ்சி கைலாசநாதர் கோவிலை கடியவர் = பல்லவ மன்னன் ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்).
- எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = ராஷ்டிரக்கூட அரசர் முதலாம் கிருஷ்ணர்.
- வரலாறு என்றால் என்ன
- மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
- சிந்துவெளி நாகரிகம்
- தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
- வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடு
- தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- 6TH HISTORY தென்னிந்திய அரசுகள்
- மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
- குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை