6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

Table of Contents

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

  • வடஇந்தியாவில் குஷானப் பேரரசு வலிமை இழந்த காலம் = கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில்.
  • தெற்கே சாதவாகனப் பேரரசு வலிமை இழந்த காலம் = கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில்.
  • குப்த வம்சம் ஆட்சி செய்தக் காலம் = சுமார் 200 ஆண்டுகள்.
  • ஹர்ஷர் இந்தியாவை ஆட்சி செய்த காலம் = கி.பி. 606 – 647 வரை.

தொல்லியல் சான்றுகள்

  • குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்
  • சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
  • மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு
  • இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு.
  • ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு, கத்வா பாறைக் கல்வெட்டு
  • மதுபான் செப்புப் பட்டயம் (பஞ்சாப்)
  • சோனாபட் செப்புப் பட்டயம்
  • நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இலக்கியச் சான்றுகள்

  • விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத புராணங்கள்
  • நாரதரின் நீதி சாஸ்திரம்
  • விசாகதத்தரின் தேவிச்சந்திர குப்தம், முத்ரா ராக்ஸம்
  • பாணரின் ஹர்ஷ சரிதம்
  • காளிதாசரின் நாடகங்கள்
  • இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்தத்துறவி பாகியானின் பயணக் குறிப்புகள்
  • ஹர்ஷரின் ரத்னாவளி, பிரியதர்ஷிகா
  • யுவான் சுவாங்கின் சி-யூ-கி.

குப்த வம்சம்

  • குப்த வம்சத்தை நிறுவியவர் = ஸ்ரீகுப்தர்.
  • நாணயங்களில் முதன் முதலாக உருவம் பொறிக்கப்பட்ட குப்த அரசர் = ஸ்ரீகுப்தர்.
  • ஸ்ரீகுப்தரின் மகன் = கடோத்கஜர்.
  • கல்வெட்டுகளில் “மகாராஜா” எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்தா அரசர்கள் = ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்.

முதலாம் சந்திரகுப்தர்

  • முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி செய்த காலம் = கி.பி. 319 – 335.
  • “லிச்சாவி” அரச குடும்பத்தை சேர்ந்த “குமாரதேவியை” மணந்தார்.
  • சந்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களில் “சந்திரகுப்தர், குமாரதேவி” ஆகிய இருவரின் உருவமும், “லிச்சாவையா” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருந்தது.

லிச்சாவி

  • பழமையான கன சமூகங்களில் ஒன்று = லிச்சாவி.
  • லிச்சாவி அரசின் ஆட்சிப்பகுதி = கங்கை நதிக்கும் நேபாளத்திற்கும் இடைப்பட்ட பகுதி.

சமுத்திரகுப்தர் வரலாறு

  • சமுதிரகுப்தரின் ஆட்சிக்காலம் = கி.பி. 335 – 380.
  • முதலாம் சந்திரகுப்தரின் மகன் = சமுத்திரகுப்தர்.
  • குப்த வம்சத்தின் தலைசிறந்த அரசர் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தரின் அவைகளப் புலவர் = ஹரிசேனர்.
  • ஹரிசேனர் இயற்றியது = பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி).
  • பிரயாகை மெய்க்கீர்த்தி எங்கு பொறிக்கப்பட்டுள்ளது = அலகாபாத் தூண் கல்வெட்டில்.
  • சமுத்திரகுப்தர் ஆட்சிக்கான மிக முக்கியச் சான்று = அலகாபாத் தூண் கல்வெட்டு.
  • தென்னிந்தியாவின் மீது படையெடுத்த குப்த மன்னன் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து எந்த பல்லவ மன்னனை தோற்கடித்தார் = விஷ்ணுகோபன்.
  • வடஇந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திரகுப்தர் கைப்பற்றினார் = 9 அரசுகள்.
  • தென்னிந்தியாவை சேர்ந்த எத்தனை அரசர்களை தோற்கடித்து தனக்கு கப்பம் கட்டச் செய்தார் = 12 அரசுகள்.
  • சமுத்திரகுப்தர் விஷ்ணு பக்தர் ஆவார்.
  • சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள், குதிரைகளை பலியிடும் “அஸ்வமேத யாகத்தை” மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
  • தான் வீணை வாசிப்பது போன்று உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டவர் = சமுத்திரகுப்தர்.
  • வீணை வாசிப்பதில் சிறந்த குப்த அரசர் = சமுத்திரகுப்தர்.
  • “கவிராஜா” என்ற பட்டதை பெற்ற குப்த மன்னன் = சமுத்திரகுப்தர்.
  • சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர் = இலங்கையை சேர்ந்த பௌத்த மன்னன் ஸ்ரீ மேகவர்மன்.
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

இரண்டாம் சந்திரகுப்தர்

  • சமுத்திரகுப்தரின் மகன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • இரண்டாம் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்காலம் = கி.பி. 380 – 415 வரை.
  • “விக்கிரமாதித்யர்” என்று அழைக்கப்பட்ட குப்த மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • சாக அரசர்களை தோற்கடித்த குப்த மன்னன் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • குதுப்மினாருக்கு அருகே “இரும்புத் தூணை” உருவாக்கியவர் = இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா.
  • யாருடைய ஆட்சிக்காலத்தின் பொழுது சீனப் பயணி “பாகியான்” இந்தியா வந்தார் = இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா.
  • இரண்டாம் சந்திரகுப்தர் விக்கிரமாதித்யா அவையில் ஒன்பது அறிஞர்கள் இருந்தனர். இவர்களை “நவரத்தினங்கள்” என்பர்.

நவரத்தினங்கள்

  1. காளிதாசர் = சமஸ்கிருதப் புலவர்
  2. ஹரிசேனர் = சமஸ்கிருதப் புலவர்.
  3. அமர சிம்ஹர் = அகராதியியல் ஆசிரியர்.
  4. தன்வந்திரி = மருத்துவர்.
  5. காகபானகர் = சோதிடர்.
  6. சன்கு = கட்டிடக் கலை நிபுணர்
  7. வராகமிகிரர் = வானியல் அறிஞர்.
  8. வராச்சி = இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப் புலவர்.
  9. விட்டல்பட்டர் = மாய வித்தைக்காரர்.

இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள் = விக்கிரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ.

முதலாம் குமாரகுப்தர்

  • இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் = முதலாம் குமாரகுப்தர்.
  • “நாளந்தா பல்கலைக்கழகத்தை’ உருவாக்கியவர் = முதலாம் குமாரகுப்தர்.

பிற குப்த அரசர்கள்

  • குமாரகுப்தருக்கு பின்னர் பதவி ஏற்றவர் = ஸ்கந்த குப்தர்.
  • ஹூணர்களின் படையெடுப்பை சந்தித்த குப்த அரசன் = ஸ்கந்தகுப்தர்.
  • ஹூனர்களை தோற்கடித்த குப்த மன்னர் = ஸ்கந்தகுப்தர்.
  • எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்கந்தகுப்தர் ஹூனர்கள் படையெடுப்பை சந்தித்தார் = 12 ஆண்டுகள்.
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு ஹூனர்கள் மீண்டும் படையெடுத்து ஸ்கந்தகுப்தரை தோற்கடித்தனர்.
  • குப்தப் பேரரசின் கடைசி பேரரசர் = பாலாதித்யர் (முதலாம் நரசிம்மகுப்தர்).
  • பௌத்த மதத்திற்கு மாறிய குப்த மன்னன் = பாலாதித்யர் (முதலாம் நரசிம்மகுப்தர்).
  • பாலாதித்யர் யாருக்கு கப்பம் கட்டி வந்தார் = மிகிரகுலர்.
  • குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர் சந்திராதித்யா.
  • குப்த வம்சத்தின் கடைசி அரசர் = விஷ்ணுகுப்தர் சந்திராதித்யா.

குப்தர்களின் ஆட்சி அமைப்பு

  • குப்த அரசர்களின் கோட்பாடு = தெய்வீக உரிமைக் கோட்பாடு.
  • குப்த அரசர்களுக்கு நிர்வாகத்தில் உதவி செய்த குழு = அமைச்சர்கள் குழு.
  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர்.
  • குப்த பேரரசில் பிராந்தியங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = தேசம் அலல்து புக்தி.
  • குப்த பேரரசில் பிராந்தியங்களை நிர்வகிக்கும் ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = உபாரிகா.
  • பிராந்தியங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது = மாவட்டங்களாக.
  • பிராந்தியங்கள் “விஷ்வா” என்னும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
  • மாவட்ட நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் = விஷ்யாபதிகள்.
  • குப்தர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = கிராமிகா, கிராமதியாகஷா.
  • “பாலாதிகிரிதா” எனப்படுவது = காலாட்படையின் தளபதி.
  • “மகாபாலாதிகிரிதா” எனப்படுவது = குதிரைப்படையின் தளபதி.
  • குப்த அரசின் ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு படையின் பெயர் = தூதகா.

குப்தர்களின் ஆட்சியில் சமூகமும் பொருளாதாரமும்

  • “நிதிசாரம்” என்னும் நூலின் ஆசிரியர் = காமாந்தகர்.
  • எந்த நூலில் அரசுக் கருவூலத்தின் முக்கியத்துவத்தையும், வருமானத்திற்கான பல வழிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது = காமாந்தகர் எழுதிய “நிதிசாரம்” என்னும் நூலில்.
  • குப்த அரசின் முக்கிய வருவாய் = நிலவரி.
  • குப்தர்கள் காலத்தில் விவசாயிகளின் நிலை மோசமாக இருந்தது. பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டிருந்தது.

குப்தர்கள் காலத்தில் நிலங்களின் வகைகள்

  1. சேத்ரா = வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்.
  2. கிலா = தரிசு நிலங்கள்
  3. அப்ரகதா = வனம் அல்லது காட்டு நிலங்கள்.
  4. வஸ்தி = குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்.
  5. கபத சரகா = மேய்ச்ச்சல் நிலங்கள்

குப்தர்கள் கால வணிகம்

  • குப்தர்கள் காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.
  • குப்தர்கள் ஆட்சியில் இரண்டு வகை வணிகர்கள் இருந்தனர். அவை,
    1. சிரோஸ்தி
    2. சார்த்தவாகா
  • சிரோஸ்தி என்றால் என்ன = சிரோஸ்தி பிரிவை சார்ந்த வணிகர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர்.
  • சார்த்தவாகா என்றால் என்ன = சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள்.
  • குப்தர்கள் காலத்தில் முக்கிய வணிக நகரங்களாக இருந்தவை = பாடலிபுத்திரம், உஜ்ஜைன், வாரணாசி, மதுரா.
  • வங்காளத்தின் “தாமிரலிப்தி” என்னும் துறைமுகம் முக்கிய வணிக மையமாக இருந்தது.
  • குப்தர்கள் காலத்தில் உலோகத் தொழிலும், சுரங்கத் தொழிலும் செழிப்புற்று இருந்தன.

குப்தர்கள் கால சமூக முறை

  • குப்தர்கள் காலத்தில் “வர்ணாஸ்ரம முறை” பின்பற்றப்பட்டது.
  • குப்தர்கள் சமூகம் தந்தை வழி சமூகமாகும்.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்தது.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் அரசிகள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவர்கள் = குபேரநாகா, துருபசுவாமினி.
  • உடன்கட்டை (சதி) ஏறும் முறை நடைமுறையில் இருந்தன.

அடிமை முறை

  • குப்தர்கள் காலத்தில் பல வகைப்பட்ட அடிமை முறைகள் பின்பற்றப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

குப்தர்கள் சமயம்

  • குப்தர்கள் பின்பற்றிய சமயம் = வேத சமயம்.
  • அஸ்வமேத யாகம் நடத்திய இரண்டு குப்த அரசர்கள் = சமுத்திரகுப்தர், முதலாம் குமாரகுப்தர்.
  • எந்த அரசின் ஆட்சிக்காலத்தில் உருவ வழிபாட்டு முறை இந்தியாவில் தோன்றியது = குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்.
  • சைவம், வைணவம் என்ற பிரிவுகள் எந்த ஆட்சிக்காலத்தில் தோன்றியது = குப்தர்கள் ஆட்சிக்காலத்தில்.

குப்தர்கள் கால கட்டிடக்கலை

  • இந்தியாவில் கட்டுமானக் கோவில்களை முதன் முதலில் அமைத்தவர்கள் = குப்தர்கள்.
  • பாறைக் குடைவரைக் கோவிலின் அடுத்த கட்ட வளர்ச்சி = கட்டுமானக் கோவில்கள்.
  • அணைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன.
  • குப்தர்கள் கால முக்கிய பாறைக் குடைவரைக் கோவில்கள் உள்ள இடம் = அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), குவாலியர் பாக் (மத்தியப்பிரதேசம்), உதயகிரி (ஒடிசா).
  • குப்தர்களின் உலோகச் சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு,
    1. நாளந்தாவில் உள்ள 18 அடி உயர புத்தரின் செப்புச் சிலை.
    2. சுல்தான் கஞ்ச் என்னுமிடத்தில் உள்ள ஏழரை அடி உயர புத்தரின் உலோகச் சிலை.
  • குப்தர்களின் ஓவியக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு = அஜந்தா குகை ஓவியங்கள், குவாலியர் பாக் குகை ஓவியங்கள்.

குப்தர்கள் கால இலக்கியம்

  • குப்தர்கள் காலத்தில் மக்களின் பேச்சு மொழி = பிராகிருதம்.
  • குப்தர்கள் காலத்தில் அரசின் அலுவல் மொழி = சமஸ்கிருதம்.
  • பாணினி எழுதிய நூல் = அஷ்டதியாயி.
  • பதஞ்சலி எழுதிய நூல் = மகாபாஷ்யம்.
  • வங்காளத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் = சந்திரோகோமியோ.
  • சந்திரோகோமியோ எழுதிய நூல் = சந்திர வியாகரணம்.
  • காளிதாசர் இயற்றிய நூல்கள் = சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம்.

குப்தர்கள் கால கனிதம், வானியல்

  • பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் = ஆரியபட்டர்.
  • தசம எண் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் = குப்தர்கள்.
  • குப்தர்கள் காலத்தின் சிறந்த வானியல், கணித அறிஞர்கள் = ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்ம குப்தர்.
  • ஆரியபட்டர் எழுதிய நூல் = சூரிய சித்தாந்தா.
  • சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மையான காரணத்தை முதல் முதலில் விளக்கியவர் = ஆரியபட்டர்.
  • ஆரியபட்டர் தனது “சூரிய சிந்தாந்தா” என்னும் நூலில் சந்திர, சூரிய கிரகணங்களை பற்றி விளக்கி உள்ளார்.
  • பூமி தனது அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த உலகின் முதல் அறிஞர் = ஆரியபட்டர்.
  • பூமி தனது அச்சில் சுழல்கிறது என்ற உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் = ஆரியபட்டர்.
  • குப்தர்கள் காலத்தில் புகழ்பெற்ற ஆயுர்வேத நிபுணராக இருந்தவர் = தன்வந்திரி.
  • அறுவை சிகிச்சை முறை பற்றி விளக்கிய முதல் இந்தியர் = சுஸ்ருதர்.

மெக்ராலி இரும்புத் தூண்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
  • மெக்ராலி இரும்புத் தூணை நிறுவியவர் = முதலாம் சந்திரகுப்தர்.
  • மெக்ராலி இரும்புத் தூண் உள்ள இடம் = டெல்லி.

குப்தர்களின் நாணய அமைப்பு முறை

  • குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகம் செய்தவர் = சமுத்திரகுப்தர்.
  • யாருடைய நாணயங்கள் சமுத்திரகுப்தருக்கு உந்துதலை வழங்கின = குஷானர்களின் நாணயங்கள்.
  • குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன = தினாரா.
  • குப்தர்கள் வெள்ளி, செப்புக் காசுகளை குறைந்த அளவே வெளியிட்டனர்.
  • அதிகளவு தங்கக் காசுகளை வெளியிட்டவர்கள் = குப்தர்கள்.

குப்தர்கள் பயன்படுத்திய உலோகங்கள்

  • குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் = இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா,மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.

தெய்வீக உரிமைக் கோட்பாடு என்றால் என்ன

  • தெய்வீக உரிமைக் கோட்பாடு என்றால், அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.
  • எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர் ஆவார்.
  • மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை என்பதாகும்.

மெய்க்கீர்த்தி என்றால் என்ன

  • மெய்க்கீர்த்தி என்பதை குறிக்கும் வடமொழிச் சொல் = பிரசஸ்தி.
  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.
  • பிரசஸ்தி என்ற சொல்லின் பொருள் = ஒருவரைப் பாராட்டிப் ‘புகழ்வதாகும்’.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.

பாகியான் குறிப்புகள்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
  • இரண்டாம் சந்திரகுப்தரின் அவைக்கு வந்த சீனப்பயணி = பாகியான்.
  • பாகியானின் பயணக்குறிப்புகள் குப்தர்கள் கால வரலாற்றை அறிந்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
  • மகத தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ்ந்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் பாகியான்.
  • கடுமையான தண்டனைகள் கிடையாது என்றும், மரன தண்டனைகள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் பாகியான்.
  • புத்தகயா பாழடைந்துள்ளது என்றும், கபிலவஸ்து காடாகி இருந்ததாகும் தெரிவித்துள்ளார். ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நாளந்தா பல்கலைக்கழகம்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
  • நாளந்தா பல்கலைக்கலகத்தை கட்டியவர் = குமாரகுப்தர்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை வளர்த்தவர்கள் = குப்தர்கள், ஹர்ஷர்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த முக்கிய பாடம் = பௌத்தத் தத்துவம்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற சீனப் பயணி “யுவான் சுவாங்” பல காலம் தங்கி புத்த தத்துவங்களை பயின்றார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகாபாடசாலைகள் இருந்தன = எட்டு.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை நூலகங்கள் இருந்தன = மூன்று.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தில் எட்டு மகாபாடசாலைகளும், மூன்று பெரிய நூலகங்களும் இருந்தன.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தை யாரால் அழிக்கப்பட்டது = பக்தியார் கில்ஜி (துருக்கிய இஸ்லாமிய அடிமை வம்சம்).
  • நாளந்தா யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

ஹூணர்கள் வரலாறு

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
  • ஹூணர்கள் நாடோடிப் பழங்குடியினர்கள் ஆவர்.
  • ஹூணர்களின் மாபெரும் தலைவர் = அட்டில்லா.
  • இந்தியப் பகுதியில் குடியேறிய ஹூணர்களின் தலைவர் = தோரமானர்.
  • தோரமானரின் மகன் = மிகிரகுலர்.
  • ஹூணர்களை தோற்கடித்து விரட்டிய இந்திய மன்னன் = யசோதர்மன்.

வர்த்தன அரச வம்சம்

  • வர்த்தனா வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = புஷ்யபூதி அரச வம்சம்.
  • வர்த்தனா அல்லது புஷ்யபூதி வம்ச ஆட்சியாளர்களின் தலைநகரம் = தானேஷ்வரம்.
  • புஷ்யபூதி யாரிடம் படைத் தளபதியாக பணியாற்றி வந்தனர் = குப்தர்களிடம்.
  • குப்த பேரரசின் வீழ்சிக்கு பிறகு, புஷ்யபூதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்.
  • பிரபாகர வர்த்தனரின் மகன் = ராஜவர்த்தனர்.
  • ராஜவர்த்தனரின் சகோதரி = ராஜ்யஸ்ரீ.
  • ராஜ்யஸ்ரீயின் கணவரே, கன்னோசியின் அரசராவார்.
  • வங்காளத்தை சேர்ந்த கௌடா வம்ச அரசர் “சசாங்கர்” என்பவரால் கன்னோசியின் அரசர் கொல்லப்பட்டார்.
  • சசாங்கர், ராஜவர்த்தனரையும் போரில் கொன்றார்.
  • ராஜவர்த்தனரின் தம்பியான ஹர்ஷர் தானேஸ்வரத்தின் அரசராகவும், கன்னோசியின் அரசராகவும் பொறுப்பேற்றார்.
  • ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
  • வர்த்தன அரச வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் = ஹர்ஷர் ஆவார்.
  • ஹர்ஷர் ஆட்சி புரிந்த மொத்த காலங்கள் = 41 ஆண்டுகள்.
  • வடஇந்தியப் பகுதிகளை கைபெற்றிய ஹர்ஷர் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.
  • ஹர்ஷரின் தென்னிந்தியப் படையெடுப்பை தடுத்து நிறுத்தியவர் = சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிக்கேசி.
  • ஹர்ஷர் மறைந்த ஆண்டு = கி.பி.648.
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

ஹர்ஷரின் ஆட்சிமுறை நிர்வாகம்

  • ஹர்ஷர் ஆட்சிக்காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் = மூன்று (பாகா, ஹிரண்யா, பாலி).
  • ஹர்ஷர் கால ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக இருந்தன.
  • சட்டங்களை மீறுவோர்க்கும், அரசருக்கு எதிராக சதி செய்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
  • ஹர்ஷர் தொடக்கத்தில் சிவனை வழிப்பட்டார்.
  • ஹர்ஷரை புத்த மதத்திற்கு மாற்றியவர்கள் = ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஸ்ரீ, சீனப்பயணி யுவான் சுவாங்.
  • ஹர்ஷர் பின்பற்றிய பௌத்த பிரிவு = மகாயானா புத்த மதம்.
  • ஹர்ஷர் இந்து துறவிகளையும், புத்தத் துறவிகளையும் ஒரே மாதிரியாகவே நடத்தினார்.
  • இந்தியாவில் பௌத்த மதத்தை பின்பற்றிய கடைசி அரசர் = ஹர்ஷர்.
  • உணவுக்காக மிருகங்கள் கொல்வதை தடை செய்தார் ஹர்ஷர்.
  • மதச் சகிப்புதன்மைக்காக அறியப்பட்டவர் ஹர்ஷர்.
  • ஹர்ஷர் ஒரே நேரத்தில் “புத்தர், சிவன், சூரியன்” ஆகிய உருவங்களை வழிபட்டார்.
  • ஹர்ஷர் இரெண்டு பௌத்த பேரவைகளை கூட்டினார். அவை,
    1. ஒன்று கண்னோசியிலும்
    2. மற்றொன்று பிரயகையிலும்.
  • ஹர்ஷர் எழுதிய நூல்கள் = ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.

கன்னோசி பிரயாகை பௌத்தப் பேரவை

  • கன்னோசி பௌத்தப் பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்ட அரசர்களின் எண்ணிக்கை = 20.
  • கன்னோசி பேரவை விழாவில், பத்தரின் மூன்றடி உயரச் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • நான்கு நாட்கள் நடைபெற்ற பிரயாகை பேரவையில் ஹர்ஷர் கணக்கில் அடங்கா பரிசுகளை பௌத்தத் துறவிகளுக்கு வழங்கினார்.

யுவான் சுவாங்

6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
6TH HISTORY பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்
  • ஹர்ஷர், சீனப் பயணி யுவான் சுவாங்கை முதன் முதலில் சந்தித்த இடம் = ராஜ்மகால் (ஜார்கண்ட்) அருகே உள்ள “கஜன்கலா” என்னும் இடம்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு யுவான் சுவாங் வந்த பொழுது அங்கு சுமார் 10000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், துறவிகளும் தங்கி கல்வி கற்றதாக பதிவு செய்துள்ளார்.
  • புனித யாத்ரீகர்களின் இளவரசன்” என அழைக்கப்படுபவர் = யுவான் சுவாங்.
  • யுவான் சுவாங் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்தார் = ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில்.
  • யுவாங் சுவாங்கின் நூல் = சி-யூ-கி.
  • ஹர்ஷர் காலத்து இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகள் பயனுள்ளதாக உள்ளது.
  • ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருந்தாலும், பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளா விழாவில் கலந்துக் கொண்டார் என்று யுவான் சுவாங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் தகவல்கள்

  • “அலகாபாத் தூண் கல்வெட்டுடன்” தொடர்புடைய அரசர் = முதலாம் சமுத்திரகுப்தர்.
  • உதயகிரி குகைக் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • மதுரா பாறைக் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = இரண்டாம் சந்திரகுப்தர்.
  • பிதாரி தூண் கல்வெட்டுடன் தொடர்புடைய அரசர் = ஸ்கந்தகுப்தர்.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் வருகை தந்த சீனப் பயணி = பாகியான்.
  • ஹர்ஷர் அவைக்கு வருகை தந்த சீனப் பயணி = யுவான் சுவாங்.

 

 

 

Leave a Reply