8TH TAMIL நோயும் மருந்தும்

8TH TAMIL நோயும் மருந்தும்

8TH TAMIL நோயும் மருந்தும்

8TH TAMIL நோயும் மருந்தும்

  • மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன நோய்கள்.
  • உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர்.
  • அந்நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

நீலகேசி பாடல்

பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி

தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்

பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே

8TH TAMIL நோயும் மருந்தும்
8TH TAMIL நோயும் மருந்தும்

அருஞ்சொற்பொருள்

  • தீர்வன = நீங்குபவை
  • உவசமம் = அடங்கி இருத்தல்
  • நிழல்இகழும் = ஒளிபொருந்திய
  • பேர்தற்கு = அகற்றுவதற்கு
  • திரியோகமருந்து = மூன்று யோகமருந்து
  • தெளிவு = நற்காட்சி
  • திறத்தன = தன்மையுடையன
  • கூற்றவா = பிரிவுகளாக
  • பூணாய் = அணிகலன்களைஅணிந்தவளே
  • பிணி = துன்பம்
  • ஓர்தல் = நல்லறிவு
  • பிறவார் = பிறக்க மாட்டார்.

நீலகேசி கூறும் கருத்துக்கள்

  • நீலகேசி கூறும் நோயின் வகைகள் = மூன்று.
    • மருந்தினால் நீங்கும் நோய்கள்
    • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்
    • அடங்கி இருப்பன போல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள்ளே இருந்து துன்பம் தருவன.
  • நீலகேசி கூறும் மருந்துகள் = மூன்று
    • நல்லறிவு
    • நற்காட்சி
    • நல்லொழுக்கம்

நீலகேசி நூல் குறிப்பு

  • நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
  • இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
  • நீலகேசி நூலில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = பத்து.
  • சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
  • நீலகேசி ஒரு தருக்க நூல்.
  • நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

 

8TH TAMIL

 

Leave a Reply