8TH TAMIL தமிழ்மொழி மரபு

8TH TAMIL தமிழ்மொழி மரபு

8TH TAMIL தமிழ்மொழி மரபு

8TH TAMIL தமிழ்மொழி மரபு

  • வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
  • வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும்.
  • மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்.
  • தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன.
  • அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.
  • செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் = தொல்காப்பியம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தொல்காப்பியம் பாடல்

8TH TAMIL தமிழ்மொழி மரபு
8TH TAMIL தமிழ்மொழி மரபு
  • “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
  • “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
  • “இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
  • “மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
  • “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்

அருஞ்சொற்பொருள்

  • விசும்பு = வானம்
  • மயக்கம் = கலவை
  • இருதிணை = உயர்திணை, அஃறினை
  • வழாஅமை = தவறாமை
  • மரபு = வழக்கம்
  • திரிதல் = மாறுபடுதல்
  • செய்யுள் = பாட்டு
  • தழாஅல் = தழுவுதல் (பயன்படுத்துதல்)
  • ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

அளபெடை என்றால் என்ன

  • புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு.
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும்.
  • அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது.
  • இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர்.

தொல்காப்பியம் நூல் குறிப்பு

8TH TAMIL தமிழ்மொழி மரபு
8TH TAMIL தமிழ்மொழி மரபு
  • தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

விலங்குகளின் இளமைப் பெயர்கள்

  • புலி = பறழ்
  • சிங்கம் = குருளை
  • யானை = கன்று
  • பசு = கன்று
  • ஆடு = குட்டி

விலங்குகளின் ஒலி மரபு

  • புலி = உறுமும்
  • சிங்கம் = முழங்கும்
  • யானை = பிளிரும்
  • பசு = கதறும்
  • ஆடு = கத்தும்

 

 

Leave a Reply