9TH TAMIL அணியிலக்கணம்

9TH TAMIL அணியிலக்கணம்

9TH TAMIL அணியிலக்கணம்

9TH TAMIL அணியிலக்கணம்

  • செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
  • சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ‘அணி’ இலக்கண இயல்பாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உவமை அணி என்றால் என்ன

  • அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும்.
  • மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
  • எ.கா:
    • மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம்
  • இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
    • பாதம் – பொருள் (உவமேயம்)
    • மலர் – உவமை
    • போன்ற – உவம உருபு
  • எ.கா:
    • இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
  • இதில் உவமையணி அமைந்துள்ளது

உருவக அணி என்றால் என்ன

  • கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
  • உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே ‘உருவகம்’ எனக் கூறப்படும்.
  • உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
  • எ.கா:
9TH TAMIL அணியிலக்கணம்
9TH TAMIL அணியிலக்கணம்

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.

  • இப்பாடலில்,
    • இன்சொல் – நிலமாகவும்
    • வன்சொல் – களையாகவும்
    • வாய்மை – எருவாகவும்
    • அன்பு – நீராகவும்
    • அறம் கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

பின்வருநிலை அணிகள்

  • ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே ‘பின்வருநிலை’ அணியாகும்.
  • இது மூன்று வகைப்படும்.

பின்வருநிலை அணிகள் மூன்று வகைப்படும்

  • பின்வருநிலை அணிகள் மூன்று வகைப்படும். அவை,
    • சொல் பின்வருநிலை அணி
    • பொருள் பின்வருநிலை அணி
    • சொற்பொருள் பின்வருநிலை அணி

சொல் பின்வருநிலை அணி

  • முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும்.
  • எ.கா:
    • துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
  • இக்குறளில்’ துப்பு’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
  • துப்பார்க்கு – உண்பவர்க்கு; துப்பு – நல்ல, நன்மை; துப்பு – உணவு என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.

பொருள் பின்வருநிலையணி

  • செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.
  • எ.கா:
9TH TAMIL அணியிலக்கணம்
9TH TAMIL அணியிலக்கணம்

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்

விண்டன கொன்றை விரிந்த கருவிளை

கொண்டன காந்தள் குலை.

  • இச்செய்யுளில் அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன ஆகிய சொற்கள் “மலர்ந்தன” என்ற ஒரே பொருளை தந்தன.
  • எ.கா:
    • கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.
  • இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.

சொற்பொருள் பின்வருநிலையணி

  • முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
  • எ.கா:
    • எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
  • இக்குறட்பாவில் ‘விளக்கு’ என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

வஞ்சப்புகழ்ச்சி அணி

  • வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாகும்.
  • எ.கா:
    • தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
  • கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போலத் தோன்றினாலும், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருளைக் குறிப்பால் உணர்த்துகிறது.
  • எனவே, இது புகழ்வது போலப் பழிப்பது ஆகும்.
  • எ.கா:

பாரி பாரி என்றுபல ஏத்தி,

ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்;

மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே

  • இப்பாடலின் பொருள்: புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைமாறு கருதாமல் கொடுக்கின்றான்? மழையும்தான் கைமாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகத்தைப் புரக்கிறது. இது பழிப்பது போலப் புகழ்வது ஆகும்.
  • இது பாரியை இகழ்வது போலத் தோன்றினாலும், பாரிக்கு நிகராகக் கொடுப்பவரில்லை என்று புகழ்கிறது.

 

 

 

Leave a Reply