9TH TAMIL விரிவாகும் ஆளுமை

9TH TAMIL விரிவாகும் ஆளுமை

9TH TAMIL விரிவாகும் ஆளுமை
9TH TAMIL விரிவாகும் ஆளுமை

9TH TAMIL விரிவாகும் ஆளுமை

  • தமிழியல் ஆய்வு வளரக் காரணமாக இருந்த தமிழறிஞர் பலர்.
  • பேராசிரியர் தனிநாயகம் அவர்கள் இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கினார்.
  • தமிழின் பரப்பையும் சிறப்பையும் உலகின் பல நாடுகளில் பரவலாக்கினார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தனிநாயகம் அடிகளார்

  • மனிதனுக்கு தேவையான ஆளுமை பற்றி இவர் ஆற்றிய பிரபலாமன் உரை நடைபெற்ற இடம் = இலங்கை யாழ் பல்கலைக்கழகம்.
  • இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய “பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு”, மிகவும் புகழ் பெற்றது ஆகும்.
  • பரந்த ஆளுமையும் (personality) மனித நலக் கோட்பாடும் (humanism) பற்றி இலத்தீன் புலவர் தெறென்ஸ் (Terence) கூறிய கூற்றானது – “நான் மனிதன்: மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” என்றார்.
9TH TAMIL விரிவாகும் ஆளுமை
9TH TAMIL விரிவாகும் ஆளுமை

முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள்

  • முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்கிறார் கோர்டன் ஆல்போர்ட் (Gordon Allport) என்னும் உளநூல் வல்லுநர்.
    • தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவன்
    • பிறர் கணிப்பதை அறிந்துககொள்ளும் ஆற்றல்
    • தன் வாழ்க்கைக்கு தேவையான தத்துவத்தை கடைபிடித்து நடத்தல்.

பூட்கையில்லோன் யாக்கை போல

  • குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் “பூட்கையில்லோன் யாக்கை போல” (புறம். 69) என்னும் அடியில் புலவர் ஆலத்தூர்கிழார் நிலைநாட்டுகிறார்.

உலகமேதை ஆல்பெர்ட் சுவைட்சர்

  • ஒழுக்கவியலை (Ethics) நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும்போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்பார்.
  • ஆனால், இத்தகைய கொள்கைகள் திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன.

பாணரும் புலவரும்

  • தமிழ் இலக்கியத்தை ஆராயும்போது, பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலையும் முதன்முதலில் பரப்புவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் தமிழ்நாட்டுப் பாணரும் புலவருமே ஆவர் என்பதை அறிய முடிகிறது.
  • பாணர்க்கும் புலவர்க்கும் சொந்த ஊரும் நாடும் உண்டு.
  • ஆயினும், அவர்கள் தமிழ் வழங்கும் இடமெங்கும் சென்று அரசர்களையும் வள்ளல்களையும் மக்களையும் வாழ்த்தி வந்ததால் ‘தமிழகம்’ என்ற ஒற்றுமை உணர்வு உண்டானது.
  • அம்மொழி பரவிய நிலம் அனைத்தையும் “தமிழகம்” என்றும் “தமிழ்நாடு” என்றும் வாழ்த்தினர்.

மொழிபெயர் தேயம்

  • பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது “மொழிமாறும் நாடு” – “மொழிபெயர் தேயம்” என்றே வரையறுத்துக் கூறியுள்ளனர்.

அகத்திணை இலக்கியம்

  • அகத்திணை இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனப்பான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
  • ஐவகை நிலங்களின் பெரும்பொழுது, சிறுபொழுது, கருப்பொருள் ஆகியவற்றைப் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது கற்றுவந்தனர்.

படுதிரை வையம் பாத்திய பண்பே

  • தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்தமுறை உலகின் பிரிவாகவே அமைந்தது.

படுதிரை வையம் பாத்திய பண்பே

–    (தொல்.948)

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

  • கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் என்பவரைப் போற்றுவதற்குக் காரணம் அவர், நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான்.
  • பிறர் போற்றுவார்கள் என்றோ வேறு நலன்களைப் பெறலாம் என்றோ அவர் நன்மைகளைச் செய்யவில்லை.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்

–    புறம். 134 (அடி 1 − 2 )

வட இந்தியாவுடன் தொடர்புகள்

  • “இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
  • “இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.

திருக்குறளில் பூட்கைமகன்

  • திருக்குறளில் பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் பல கூறப்பட்டிருக்கின்றன.
  • ஒன்று பிறர்பால் அன்புடைமை ஆகும். இல்லற வாழ்க்கையின் நோக்கம் ஈகை, விருந்தோம்பல் போன்ற பண்புகளால் ஆளுமையை வளர்த்தல் ஆகும்.

உரோமையருடைய “சாப்பியன்ஸ்” அல்லது சான்றோன்

  • தமிழ் மக்கள் “சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் “sapens” (அறிவுடையோன்) எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்தனர்.

தத்துவ ஞானி செனக்கா

  • செனக்கா என்னும் தத்துவ ஞானி கூறியதாவது: “எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்”.

மார்க்ஸ் அரேலியஸ்

  • மார்க்ஸ் அரேலியஸ் என்னும் பேரரசர் கூறியதாவது: “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்”.

உலகப் புலவர் திருவள்ளுவர்

  • மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் திருக்குறள். ஜி.யு. போப் திருவள்ளுவரை “உலகப் புலவர்” என்று போற்றுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
  • திருவள்ளுவரை “உலகப் புலவர்” எனப் போற்றியவர் = ஜி.யு.போப்.

தனிநாயகம் அடிகள் ஆசிரியர் குறிப்பு

  • தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
  • அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளைக் கொண்டவை.
  • இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம்பெற்றுள்ளது.
  • தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழைப் பரப்பினார்.
  • அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தார்.
  • இவர் தொடங்கிய “தமிழ்ப் பண்பாடு” என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
9TH TAMIL விரிவாகும் ஆளுமை
9TH TAMIL விரிவாகும் ஆளுமை

உலகத் தமிழ் மாநாடுகள்

வ. எண்

மாநாடு ஆண்டு நடைபெற்ற நாடு இடம்
1 முதல் மாநாடு 1966 மலேசியா

கோலாலம்பூர்

2

இரண்டாவது மாநாடு 1968 இந்தியா சென்னை
3 மூன்றாவது மாநாடு 1970 பிரான்ஸ்

பாரிஸ்

4

நான்காவது மாநாடு 1974 இலங்கை யாழ்பாணம்
5 ஐந்தாவது மாநாடு 1981 இந்தியா

மதுரை

6

ஆறாவது மாநாடு 1987 மலேசியா கோலாலம்பூர்
7 ஏழாவது மாநாடு 1989 மொரிசியஸ்

மொரிசியஸ்

8

எட்டாவது மாநாடு 1995 இந்தியா தஞ்சாவூர்
9 செம்மொழி மாநாடு 2010 இந்தியா

கோயம்புத்தூர்

 

 

Leave a Reply