8TH TAMIL தமிழ்மொழி மரபு
8TH TAMIL தமிழ்மொழி மரபு
- வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
- வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் எனப்படும்.
- மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்.
- தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன.
- அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.
- செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல் = தொல்காப்பியம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொல்காப்பியம் பாடல்
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
- “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
- “இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
- “மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
- “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தொல்காப்பியம்
அருஞ்சொற்பொருள்
- விசும்பு = வானம்
- மயக்கம் = கலவை
- இருதிணை = உயர்திணை, அஃறினை
- வழாஅமை = தவறாமை
- மரபு = வழக்கம்
- திரிதல் = மாறுபடுதல்
- செய்யுள் = பாட்டு
- தழாஅல் = தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
அளபெடை என்றால் என்ன
- புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு.
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும்.
- அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது.
- இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர்.
தொல்காப்பியம் நூல் குறிப்பு
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
விலங்குகளின் இளமைப் பெயர்கள்
- புலி = பறழ்
- சிங்கம் = குருளை
- யானை = கன்று
- பசு = கன்று
- ஆடு = குட்டி
விலங்குகளின் ஒலி மரபு
- புலி = உறுமும்
- சிங்கம் = முழங்கும்
- யானை = பிளிரும்
- பசு = கதறும்
- ஆடு = கத்தும்
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை