9TH TAMIL ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • கலாம் சாட்டிலைட் கண்டுபிடித்த பள்ளி மாணவனை ஊரே பாராட்டியது
    • பெண்களைக் கேலி செய்த இளைஞரை ஊரே திட்டியது
  • இத்இத்தொடர்களில் ஊர் பாராட்டுவதோ, திட்டுவதோ இல்லை. மாறாக, அவ்வூரில் உள்ள மக்கள் பாராட்டினர் / இகழ்ந்தனர் என்பது இதன் பொருள்.
  • ஊர் என்னும் பெயர், ஊரில் உள்ள மக்களுக்கு ஆகிவந்தது.
  • இதனை இடவாகுபெயர் என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆகுபெயர் என்றால் என்ன

  • ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

ஆகுபெயர் வகைகள்

  • ஆகுபெயர் எத்தனை வகைப்படும் = பதினாறு வகைகள்.
  • ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்
9TH TAMIL ஆகுபெயர்
  • பொருளாகு பெயரை “முதலாகுபெயர்” என்றும் கூறுவர்.
  • எ.கா:
    • முல்லையைத் தொடுத்தாள்
  • முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

இடவாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்
9TH TAMIL ஆகுபெயர்
  • எ.கா:
    • வகுப்பறை சிரித்தது
  • வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

காலவாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்
9TH TAMIL ஆகுபெயர்
  • எ.கா:
    • கார் அறுத்தான்
  • கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.

சினையாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்
9TH TAMIL ஆகுபெயர்
  • எ.கா:
    • மருக்கொழுந்து நட்டான்
  • மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.

பண்பாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • மஞ்சள் பூசினாள்
  • மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

தொழிலாகுபெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • வற்றல் தின்றான்
  • வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

கருவியாகு பெயர் என்றால் என்ன

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • வானொலி கேட்டு மகிழ்ந்தனர்
  • வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

காரியவாகு பெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • பைங்கூழ் வளர்ந்தது
  • கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.

கருத்தாவாகு பெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்
  • அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.

எண்ணலளவை ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • ஒன்று பெற்றால் ஒளிமயம்
  • ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

எடுத்தலளவை ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • இரண்டு கிலோ கொடு
  • நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

முகத்தலளவை ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • அரை லிட்டர் வாங்கு
  • முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

நீட்டலளவை ஆகுபெயர்

9TH TAMIL ஆகுபெயர்

  • எ.கா:
    • ஐந்து மீட்டர் வெட்டினான்
  • நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

 

 

 

 

Leave a Reply