8TH TAMIL வருமுன் காப்போம்
8TH TAMIL வருமுன் காப்போம்
- ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி.
- நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை.
- நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாடல்
உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீயதனை நித்தம் நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே! காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே! |
அருஞ்சொற்பொருள்
- நித்தம் நித்தம் = நாள் தோறும்
- மட்டு = அளவு
- சண்ட = நன்கு
- வையம் = உலகம்
- பேணுவையேல் = பாதுகாத்தால்
- திட்டுமுட்டு = தடுமாற்றம்
கவிமணி ஆசிரியர் குறிப்பு
- கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்;
- முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
- மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
8TH TAMIL