9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
- கையில் உள்ள செல்வத்தை காட்டிலும், நிலைத்த புகழுடைய கல்வி தான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கைக்கொடுக்கிறது.
- சங்க காலத்தில் உயர்ந்திருந்த பெண் கல்வி, இடைக்காலத்தில் ஒடுங்கிப் போனது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்
- தமிழின் பொற்காலம் எனப்படுவது = பாட்டும் தொகையும் உருவான சங்ககாலம்.
- சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் = ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.
- மாதவியின் மகள் மணிமேகலை கல்வி கற்ற பெண் ஆவார்.
- பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இறைவனுக்கே பாமாலை சூட்டியவர்கள் ஆவர்.
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் = டாக்டர் முத்துலெட்சுமி.
- தமிழக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி = டாக்டர் முத்துலெட்சுமி.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- இருதார தடைச்சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
- அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் = டாக்டர் முத்துலெட்சுமி.
பெரியார், பாரதியார், பாரதிதாசன்
- முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் = தந்தை பெரியார்.
- விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் = பாரதியார்
- பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் = பாரதிதாசன்.
முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு
- முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு = ஹன்டர் குழு (1882)
- ஹன்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த ஆண்டு = 1882.
முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கியவர்கள்
- ஹன்டர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர், முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கினர்.
- முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கியவர்கள் = ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் = சாவித்திரிபாய் பூலே.
- 1848இல் பெண்களுக்காக துவங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் = சாவித்திரிபாய் பூலே.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- காலம் = 1883 – 1962
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார்.
- இவர் திராவிட அரசியல் செயற்பாட்டாளர் ஆவார்.
- தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் = மூவலூர் இராமாமிர்தம்.
- தமிழக அரசு, 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கி வருகிறது.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
- காலம் = 1870 – 1960
- பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
- வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் = ஐதாஸ் சோபியா ஸ்கட்டர்.
கைலாஷ் சத்யார்த்தி
- கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு = 2014.
- கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நிறுவிய அமைப்பு = “குழந்தையைப் பாதுகாப்போம்”
- இந்தியாவில் “குழந்தையைப் பாதுகாப்போம்” என்ற அமைப்பை நிறுவி 80 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிய பெருமைக்கு உரியவர் = கைலாஷ் சத்யார்த்தி.
மலாலா
- பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய சிறுமி “மலாலாவிற்கு” நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).
பண்டித ரமாபாய்
- பண்டித ரமாபாய் சமூக தன்னார்வலர் ஆவார்.
- தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆனவர் = பண்டித ரமாபாய்.
- பெண்களின் உயர்வுக்கு துணை நின்றவர் = பண்டிதர் ரமாபாய்.
பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்
- ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் = பட்டமேற்படிப்பிற்கு உரியது.
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் = கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
நீலாம்பிகை அம்மையார்
- நீலாம்பிகை அம்மையார் (1903 – 1943) மறைமலையடிகளின் மகள் ஆவார்.
- மறைமலையடிகளின் மகள் = நீலாம்பிகை அம்மையார்
- தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்;
- நீலாம்பிகை அம்மையாரின் நூல்கள் = தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்.
கோத்தாரி கல்விக் குழு
- 1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
- கோதாரிக் கல்விக் குழுவின் ஆண்டு = 1964.
சாரதா சட்டம்
- பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.
- எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
- சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு = 1929.
ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்
- ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955) தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
- திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
- ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்கள் = சூரியன், பரமாணுப் புராணம்.
- தண்ணீர்
- துணைவினைகள்
- ஏறு தழுவுதல்
- மணிமேகலை
- அகழாய்வுகள்
- வல்லினம் மிகும் இடங்கள்
- திருக்குறள்
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
- ஒ என் சமகாலத் தோழர்களே
- உயிர்வகை