9TH TAMIL குடும்ப விளக்கு

9TH TAMIL குடும்ப விளக்கு

9TH TAMIL குடும்ப விளக்கு
9TH TAMIL குடும்ப விளக்கு

9TH TAMIL குடும்ப விளக்கு

  • புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவையே மறுமலர்ச்சி இலக்கியங்கள்.
  • இயற்கையைப் போற்றுதல், தமிழுணர்ச்சி ஊட்டுதல், பகுத்தறிவு பரப்புதல், பொதுவுடைமை பேசுதல், விடுதலைக்குத் தூண்டுதல், பெண்கல்வி பெறுதல் போன்ற பாடுபொருள்களில் தோன்றிய பல்வேறு இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று, பாவேந்தர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாரதிதாசனின் குடும்பவிளக்கு

  • “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = பாரதிதாசனின் குடும்பவிளக்கு
  • “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்று பாடியவர் = பாரதிதாசன்.
  • “கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = பாரதிதாசனின் குடும்பவிளக்கு
  • “கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும் மின்னாள் என்றே உரைப்பேன்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = பாரதிதாசனின் குடும்பவிளக்கு
  • “பெண்கல்வி வேண்டும் யாண்டும்!” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = பாரதிதாசனின் குடும்பவிளக்கு

அருஞ்சொற்பொருள்

  • களர்நிலம் = பண்படாத நிலம்
  • நவிலல் = சொல்லல்
  • வையம் = உலகம்
  • மாக்கடல் = பெரிய கடல்
  • இயற்றுக = செய்க
  • மின்னாளை = மின்னலைப் போன்றவளை
  • மின்னாள் = ஒளிரமாட்டாள்
  • தணல் = நெருப்பு
  • தாழி = சமைக்கும் கலன்
  • அணிந்து = அருகில்
  • தவிர்க்கஒணா = தவிர்க்க இயலாத
  • யாண்டும் = எப்பொழுதும்

இலக்கணக்குறிப்பு

  • மாக்கடல் = உரிச்சொற்றொடர்
  • ஆக்கல் = தொழிற்பெயர்
  • பொன்னேபோல் = உவம உருபு
  • மலர்க்கை = உவமைத்தொகை
  • வில்வாள் = உம்மைத்தொகை
  • தவிர்க்கஒணா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
9TH TAMIL குடும்ப விளக்கு
9TH TAMIL குடும்ப விளக்கு

குடும்ப விளக்கு நூல் குறிப்பு

  • குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது;
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது;
  • குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும்.
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • பாரதிதாசனின் “குடும்ப விளக்கு” எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? = ஐந்து பகுதிகளாக.
  • இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதிதாசனின் முக்கிய வரிகள்

  • “பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது” என்று பாடியவர் = பாரதிதாசன்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

  • “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பாடியவர் = பாரதியார்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல்

  • “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா….” என்று கூறியவர் = கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை.

 

Leave a Reply