9TH TAMIL மணிமேகலை
9TH TAMIL மணிமேகலை
- மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.
- அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் விழாதான்.
- அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது.
- அவ்விழா நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைகிறது மணிமேகலையின் விழாவறை காதை.
- இந்திராவிழா பற்றி மணிமேகலையில் கூறப்படும் காதை = விழாவறைக் காதை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- சமயக் கணக்கர் = சமயத் தத்துவவாதிகள்
- பாடைமாக்கள் = பல மொழிபேசும் மக்கள்
- குழீஇ = ஒன்றுகூடி
- தோம் = குற்றம்
- கோட்டி = மன்றம்
- பொலம் = பொன்
- வேதிகை = திண்ணை
- தூணம் = தூண்
- தாமம் = மாலை
- கதலிகைக் கொடி = சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
- காழூன்று கொடி = கொம்புகளில் கட்டும் கொடி
- விலோதம் = துணியாலான கொடி
- வசி = மழை
- செற்றம் = சினம்
- கலாம் = போர்
- துருத்தி = ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு)
இலக்கணக்குறிப்பு
- தோரணவீதியும், தோமறு கோட்டியும் = எண்ணும்மைகள்
- காய்க்குலைக் கமுகு, பூக்கொடி வல்லி, முத்துத்தாமம் = இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள்
- மாற்றுமின், பரப்புமின் = ஏவல் வினைமுற்றுகள்
- உறுபொருள் = உரிச்சொல்தொடர்
- தாழ்பூந்துறை = வினைத்தொகை
- பாங்கறிந்து = இரண்டாம் வேற்றுமைத்தொகை
- நன்பொருள், தண்மணல், நல்லுரை = பண்புத்தொகைகள்
மணிமேகலை முக்கிய அடிகள்
- “மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “பசியும் பிணியும் பகையும் நீங்கி” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “அறம் எனப்படுவது யாதெனின் கேட்பின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
- “மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை
பாடல் பொருள்
- அரசருக்குரிய அமைச்சர் குழு = ஐம்பெருங்குழு, எண்பேராயம்.
- புகார் நகரத்தில் பல மொழிகள் பேசும் அயல்நாட்டினரும் குழுமியிருந்தனர்.
ஐம்பெருங்குழு
- அரசருக்குரிய அமைச்சர் குழு = ஐம்பெருங்குழு.
- ஐம்பெருங்குழுவில் உள்ள உறுப்பினர்கள்
- அமைச்சர்
- சடங்கு செய்விப்போர்
- படைத்தலைவர்
- தூதர்
- சாரணர் (ஒற்றர்)
எண்பேராயம் என்றால் என்ன
- அரசருக்குரிய அமைச்சர் குழு = எண்பேராயம்.
- எண்பேராயம் குழுவில் உள்ள உறுப்பினர்கள்,
- கரணத்தியலவர்
- கரும விதிகள்
- கனகச்சுற்றம்
- கடைக்காப்பாளர்
- நகரமாந்தர்
- படைத்தலைவர்
- யானை வீரர்
- இவுளி மறவர்
மணிமேகலை நூல் குறிப்பு
- தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
- மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
- மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
- இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.
- பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம்.
- இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது;
- பௌத்த சமயச் சார்புடையது.
- கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்.
- முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை.
- மணிமேகலையின் முதல் காதை = விழாவறை காதை.
சீத்தலைச் சாத்தனார் ஆசிரியர் குறிப்பு
- மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
- சாத்தன் என்பது இவரது இயற்பெயர்.
- இவர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
- கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.
- இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார்.
- சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர்.
- தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
- திராவிட மொழிக்குடும்பம்
- 9TH TAMIL மணிமேகலை
- 9TH TAMIL மணிமேகலை
- தமிழோவியம்
- தமிழ்விடு தூது
- வளரும் செல்வம்
- தொடர் இலக்கணம்
- நீரின்றி அமையாது உலகு
- 9TH TAMIL மணிமேகலை
- பட்ட மரம்
- பெரியபுராணம்