9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்

  • கையில் உள்ள செல்வத்தை காட்டிலும், நிலைத்த புகழுடைய கல்வி தான் ஒருவருக்கு வாழ்வின் இறுதி வரையிலும் கைக்கொடுக்கிறது.
  • சங்க காலத்தில் உயர்ந்திருந்த பெண் கல்வி, இடைக்காலத்தில் ஒடுங்கிப் போனது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • தமிழின் பொற்காலம் எனப்படுவது = பாட்டும் தொகையும் உருவான சங்ககாலம்.
  • சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் = ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.
  • மாதவியின் மகள் மணிமேகலை கல்வி கற்ற பெண் ஆவார்.
  • பக்தி இலக்கிய காலத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இறைவனுக்கே பாமாலை சூட்டியவர்கள் ஆவர்.

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் = டாக்டர் முத்துலெட்சுமி.
  • தமிழக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி = டாக்டர் முத்துலெட்சுமி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • இருதார தடைச்சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர் = டாக்டர் முத்துலெட்சுமி
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் = டாக்டர் முத்துலெட்சுமி.

பெரியார், பாரதியார், பாரதிதாசன்

  • முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் = தந்தை பெரியார்.
  • விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் = பாரதியார்
  • பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் = பாரதிதாசன்.

முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு

  • முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த குழு = ஹன்டர் குழு (1882)
  • ஹன்டர் குழு முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்த ஆண்டு = 1882.

முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கியவர்கள்

  • ஹன்டர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர், முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கினர்.
  • முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை துவக்கியவர்கள் = ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் = சாவித்திரிபாய் பூலே.
  • 1848இல் பெண்களுக்காக துவங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் = சாவித்திரிபாய் பூலே.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • காலம் = 1883 – 1962
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார்.
  • இவர் திராவிட அரசியல் செயற்பாட்டாளர் ஆவார்.
  • தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் = மூவலூர் இராமாமிர்தம்.
  • தமிழக அரசு, 8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கி வருகிறது.

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • காலம் = 1870 – 1960
  • பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
  • வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் = ஐதாஸ் சோபியா ஸ்கட்டர்.

கைலாஷ் சத்யார்த்தி

  • கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு = 2014.
  • கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நிறுவிய அமைப்பு = “குழந்தையைப் பாதுகாப்போம்”
  • இந்தியாவில் “குழந்தையைப் பாதுகாப்போம்” என்ற அமைப்பை நிறுவி 80 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிய பெருமைக்கு உரியவர் = கைலாஷ் சத்யார்த்தி.

மலாலா

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய சிறுமி “மலாலாவிற்கு” நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997).

பண்டித ரமாபாய்

9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
9TH TAMIL கல்வியில் சிறந்த பெண்கள்
  • பண்டித ரமாபாய் சமூக தன்னார்வலர் ஆவார்.
  • தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆனவர் = பண்டித ரமாபாய்.
  • பெண்களின் உயர்வுக்கு துணை நின்றவர் = பண்டிதர் ரமாபாய்.

பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள்

  • ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் = பட்டமேற்படிப்பிற்கு உரியது.
  • சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் = கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

நீலாம்பிகை அம்மையார்

  • நீலாம்பிகை அம்மையார் (1903 – 1943) மறைமலையடிகளின் மகள் ஆவார்.
  • மறைமலையடிகளின் மகள் = நீலாம்பிகை அம்மையார்
  • தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்;
  • நீலாம்பிகை அம்மையாரின் நூல்கள் = தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்.

கோத்தாரி கல்விக் குழு

  • 1964ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
  • கோதாரிக் கல்விக் குழுவின் ஆண்டு = 1964.

சாரதா சட்டம்

  • பெண் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.
  • எனவே, அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு = 1929.

ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்

  • ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் (1906-1955) தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
  • இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார்.
  • ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்கள் = சூரியன், பரமாணுப் புராணம்.

 

Leave a Reply