9TH TAMIL புணர்ச்சி

9TH TAMIL புணர்ச்சி

9TH TAMIL புணர்ச்சி
9TH TAMIL புணர்ச்சி

9TH TAMIL புணர்ச்சி

  • இரண்டு சொற்களுக்கு இடையே நிகழ்வது புணர்ச்சி எனப்படும்.
  • இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும்.
  • எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி.
  • ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
  • அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இறுதி எழுத்தை பொருத்து புணர்ச்சி வகைகள்

  • நிலைமொழியின் இறுதி எழுத்தை பொருத்து புணர்ச்சி இரண்டு வகைப்படும்.
  • புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து = உயிரீறு, மெய்யீறு என இரண்டு வகைப்படும்.

முதல் எழுத்தைப் பொருத்து புணர்ச்சி வகைகள்

  • வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து புணர்ச்சி இரண்டு வகைப்படும்.
  • வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து = உயிர்முதல், மெய்ம்முதல் என இரண்டு வகைப்படும்.

எழுத்து வகையால் புணர்ச்சி வகைகள்

  • எழுத்து வகையால் புணர்ச்சி நான்கு வகைப்படும். அவை,
    • உயிரீறு => கலை + அழகு
    • மெய்யீறு => மண் + குடம்
    • உயிர்முதல் => வாழை + இலை
    • மெய்ம்முதல் => வாழை + மரம்

நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் புணர்ச்சி வகைகள்

  • புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்தை கொண்டு புணர்ச்சியை நான்கு வகையாக பிரிக்கலாம். அவை,
    • உயிர் முன் உயிர்
      • மணி (ண் + இ) + அடி = மணியடி
    • உயிர் முன் மெய்
      • பனி + காற்று = பனிக்காற்று
    • மெய்ம்முன் உயிர்
      • ஆல் + இலை = ஆலிலை
    • மெய்ம்முன் மெய்
      • மரம் + (க் + இ) கிளை = மரக்கிளை

எழுத்து மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி வகைகள்

  • புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப் படுத்தலாம். அவை,
    • இயல்பு புணர்ச்சி
    • விகாரப் புணர்ச்சி

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன

  • புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • வாழை + மரம் = வாழைமரம்
    • செடி + கொடி = செடிகொடி
    • மண் + மலை = மண்மலை

விகாரப் புணர்ச்சி என்றால் என்ன

  • புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்

விகாரப் புணர்ச்சி வகைகள்

  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைகள் ஆகும். அவை,
    • தோன்றல் விகாரம்
      • எ.கா: நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு (தோன்றல்)
    • திரிதல் விகாரம்
      • எ.கா: பல் + பசை = பற்பசை (திரிதல்)
    • கெடுதல் விகாரம்
      • எ.கா: புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)
9TH TAMIL புணர்ச்சி
9TH TAMIL புணர்ச்சி

உடம்படுமெய் என்றால் என்ன

  • உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்;
  • அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்;
  • ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும்.
  • இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.
  • நிலைமொழியின் ஈற்றில் ‘இ,ஈ,ஐ’ என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும்.
  • அவற்றின்முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும்.
  • அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.
  • எ.கா:
    • மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு
    • தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி
  • ‘இ, ஈ, ஐ’ தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும்.
  • எ.கா:
    • பல + உயிர் = பல + ய் + உயிர் = பலவுயிர்
    • பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம்
  • நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும்.
  • எ.கா:
    • சே + அடி = சே + ய் + அடி = சேயடி
    • சே + அடி = சே + வ் + அடி = சேவடி

குற்றியலுகரப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும்.
  • வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
  • குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.
  • எ.கா:
    • உறவு + அழகு = உற (வ் + உ) = உறவ் + அழகு = உறவழகு
9TH TAMIL புணர்ச்சி
9TH TAMIL புணர்ச்சி

குற்றியலுகரம் என்றால் என்ன

  • தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலுகரம் வகைகள்

  • சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
  • அவை,
    • வன்தொடர்க் குற்றியலுகரம்
    • மென்தொடர்க் குற்றியலுகரம்
    • இடைத்தொடர் குற்றியலுகரம்
    • உயிர்த்தொடர் குற்றியலுகரம்
    • ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
    • நெடில் தொடர்க் குற்றியலுகரம்

வலி மிகுதல் என்றால் என்ன

  • புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும்போது வருமொழியில் க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும்.
  • இதை’ வலி மிகுதல்’ என்பர்.

மெல்லினம் மிகுதல் என்றால் என்ன

  • இது போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் இவ்வாறு மிகும்.
    1. ‘ய’கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்.
    2. வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய,ர,ழ முன்னர் மெல்லினம் மிகும்.
    3. ‘புளி’ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
    4. உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.
    5. ‘பூ’ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

 

Leave a Reply