பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  • சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ் க்கணக்கு நூல்கள் எனப்படும்.
  • இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைப்பர்.
  • பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல்

அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி

அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத்

திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்

                     –          பன்னிரு பாட்டியல்

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்பதை கூறும் பாட்டு

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

  • அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது
  • அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது
  • இரட்டை அறநூல்கள் = இன்னா நாற்பது, இனியவை நாற்பது
  • திருக்குறள் தவிர ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட “சங்கம் மருவிய” காலத்தை சார்ந்தவை
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = 11 அற நூல்கள் + 6 அக நூல்கள் + 1 புற நூல்
  • கீழ்க்கணக்கில் கைந்நிலை நூலை ஏற்காதவர்கள் இந்நிலை எனும் நூலைக் கீழ்க்கணக்கு நூலாகக் கொண்டு கீழ்க்கணக்கில் அற நூல்கள் 12 என்றும், அக நூல்கள் 5 என்றும் கூறுவர்
  • கீழ்க்கணக்கு அற நூல்கள் 12 மற்றும் பிற்கால நீதி நூல்கள் 10 (நீதி நூல் கொத்து), பாரதியார், பாரதிதாசன், ஆத்திச்சூடி ஆகியவை முக்கிய தமிழ் நீதி நூல்கள் ஆகும்.
  • மருந்து பெயரில் அமைந்த நூல்கள் = திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி
  • திரிகடுக மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி
  • பஞ்சமூல மருந்து பொருட்கள் = சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, பெருவழுதுணை, கண்டங்கத்திரி
  • ஏலாது மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்
  • திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி நூல்கள் முறையே பாடல் தோறும் 3, 5, 6 கருத்துக்கள் கொண்டவை
  • நீதி நூல் கொத்து = 10 நூல்கள் (ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலகநீதி, அறநெறி சாரம், அருங்கலச் செப்பு)
  • அவ்வையார் எழுதிய நீதிநூல்கள் = ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
  • அதிவீரராம பாண்டியன் எழுதியது = வெற்றிவேற்கை
  • குமரகுருபரர் எழுதியது = நீதிநெறி விளக்கம்
  • சிவப்பிரகாசர் எழுதியது = நன்னெறி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

எண்நூல்பொருள்பாடல்ஆசிரியர்
1நாலடியார்அறம்400சமண முனிவர்கள்
2நான்மணிக்கடிகைஅறம்106விளம்பிநாகனார்
3இன்னா நாற்பதுஅறம்40கபிலர்
4இனியவை நாற்பதுஅறம்40பூதஞ்சேந்தனார்
5திருக்குறள்அறம்1330திருவள்ளுவர்
6திரிகடுகம்அறம்100நல்லாதனார்
7ஆசாரக்கோவைஅறம்100பெருவாயில் முள்ளியார்
8பழமொழி நானூறுஅறம்400முன்றுறை அரையனார்
9சிறுபஞ்சமூலம்அறம்102காரியாசான்
10முதுமொழிக் காஞ்சிஅறம்100கூடலூர் கிழார்
11ஏலாதிஅறம்80கணிமேதாவியார்
12கார் நாற்பதுஅகம்40கண்ணன் கூத்தனார்
13ஐந்திணை ஐம்பதுஅகம்50மாறன் பொறையனார்
14ஐந்திணை எழுபதுஅகம்70மூவாதியார்
15திணைமொழி ஐம்பதுஅகம்50கண்ணன் சேந்தனார்
16திணைமாலை நூற்றைம்பதுஅகம்150கணிமேதாவியார்
17கைந்நிலைஅகம்60புல்லாங்காடனார்
18களவழி நாற்பதுபுறம்40பொய்கையார்
18இன்னிலைபுரம்45பொய்கையார்

 

7 thoughts on “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்”

  1. உதய க சூரியா

    மிகவும் பயனுள்ள்தாகவும் தமிழைக் கண்டு வியப்பாகவும் இருந்தது. நன்றி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

      1. தமிழ் நல்ல பயனுள்ள வகையில் தகவல்கள் இருந்தது.தமிழ் நல்ல முறையில் அனைவருக்கும் பயனடைய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *