DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 21 AUGUST 2021

DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 21 AUGUST 2021

       DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 21 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

ஹுருன் உலகளாவிய 500 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியல்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகில் அதிக மதிப்புமிக்க 5௦௦ நிறுவனகளின் பட்டியலை ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதல் இடத்தில ஆப்பில் நிறுவனம் உள்ளது
  • முதல் 3 இடங்களை பிடித்த நிறுவனங்கள் = ஆப்பில், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான்
  • 5௦௦ நிறுவனங்களில் அமெரிக்காவை சேர்ந்த 243 நிறுவனங்கள் இடம் பிடித்து முதல் இடத்தில் உள்ளன. இப்பட்டியலில் 12 நிறுவனங்களுடன் இந்தியா 9-வது இடத்தை பிடித்துள்ளது

பேஸ்புக் நிறுவனத்தின் “சிறு வணிகக் கடன் முயற்சி”

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பேஸ்புக் இந்தியா நிறுவனம், இந்தியாவில் ஆன்லைன் கடன் தளமான இண்டிஃபை உடன் இணைந்து “சிறு வணிக கடன் முயற்சியை” துவக்கி உள்ளது
  • இந்த முயற்சியின் நோக்கம், முகநூலில் விளம்பரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, எளிய முறையில் கடன் வசதி ஏற்பாடு செய்தல் ஆகும்

உலக மூத்த குடிமக்கள் தினம்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக மூத்த குடிமக்கள் தினம், உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது
  • வயது முதிர்ந்தவர்களை பாதிக்கும் மற்றும் வயது முதிர்ந்தவர்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் முதியோருக்கு ஆதரவு, மரியாதை மற்றும் பாராட்டு மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியை சர்வதேச நினைவு தினமாகவும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாகவும் அனுசரிக்கிறது
  • உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல் காரணமாக உயிர் நீத்த, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இத்தினம் மூலம் அஞ்சலி செலுத்தப்படுகிறது

1௦5-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 127-வது சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 1௦5-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தமாக உருவாகியுள்ளது
  • சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பபிரிவினரை கண்டறியும் உரிமையை அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கே அதிகாரம் வழங்குகிறது இந்த சட்டத் திருத்த மசோதா
  • மேலும் இந்த சட்டத் திருத்த மசோதா மூலம், கீழ்க்கண்ட சட்டங்கள் மாற்றம் அடைந்துள்ளன,
    • சட்டப்பிரிவு 338-B
    • சட்டப்பிரிவு 342-A
    • சட்டப்பிரிவு 366(26C)

இந்தியாவின் முதல் மின்சார வாகனங்களுக்கு உகந்த (தோழமை) நெடுஞ்சாலை

  • மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் ஃபேம்-1 (இந்தியாவில் மின்சார மற்றும் கலப்பு வாகனங்களுக்கு விரைவில் மாறுதல் மற்றும் உற்பத்தி) திட்டத்தின் கீழ் சூரிய சக்தி அடிப்படையிலான வாகன மின்னேற்றி நிலயங்களை டெல்லி -சண்டிகர் நெடுஞ்சாலையில் அதிகளவில் பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) நிறுவியிருப்பதால், இந்தியாவின் முதல் மின்சார வாகனங்களுக்கு தோழமையான நெடுஞ்சாலையாக அது உருவாகி இருக்கிறது.
  • கர்னா ஏரி ரிசார்டில் அமைந்துள்ள சூரிய சக்தி மின்சார வாகன மின்னேற்றி நிலையத்தை மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே காணொலி மூலம் திறந்து வைத்தார். மத்திய கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் அருன் கோயல் முன்னிலை வகித்தார்

இந்தியன் வங்கியின் புதிய முதன்மை நிருவாக அதிகாரி

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியன் வங்கியின் புதிய முதன்மை நிருவாக திகாரியாக சாந்தி லால் ஜெயினை நியமித்து, மத்திய காபினெட் நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது
  • இவர் இப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார். இவர் தற்போது பரோடா வங்கியின் நிருவாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்

பிரபல தடகள பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார் காலமானார்

DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சாரியார் விருதுகளை பெற்ற, இந்தியாவின் பிரபல முன்னாள் தடகள பயிற்சியாளரான, ஓ.எம்.நம்பியார் கேரளாவின் கோழிக்கோட்தில் காலமானார். அவருக்கு வயது 89 ஆகும்.
  • இவர் பி.டீ.உஷா போன்றோருக்கு தடகள பயிற்சி அளித்தவர் ஆவார். இவர் பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டு காலமானார்

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம்

  • ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டியில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்
  • இந்தியக் கல்வி நிறுவனமான ஹைதராபாத்தில் (ஐஐடி-எச்) அமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைத்தார்

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் ஒளிமின்னழுத்த திட்டம்

  • இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் ஒளிமின்னழுத்த திட்டம், தேசிய அனல் மின் கழகத்தால், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரி அனல்மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் முழு திறனானது 25 மெகாவாட் ஆகும்
  • என்டிபிசி ஒரு ட்வீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய 25 மெகாவாட் மிதக்கும் சோலார் பிவி திட்டத்தை என்டிபிசி சிம்ஹாத்ரி அனல் நிலையத்தில் தொடங்கியவுடன், என்டிபிசியின் மொத்த நிறுவப்பட்ட திறன் இப்போது 66,900 மெகாவாட்டை எட்டியுள்ளது.

 

 

Leave a Reply