சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும். பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம். இது தொண்ணூற்றாறு வகைப்படும். வகையும் தொகையும் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன. இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன. […]