மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்

  • இவரின் ஊர் திருக்கோவலூர்
  • இவர் கருடாழ்வார் அம்சமாகப் பிறந்தவர். பெரியாழ்வாரும் இதே அம்சமாகப் பிறந்தவர்
  • இவர் நம்மாழ்வாரின் சீடர்
  • இவர் திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாக நினைத்து பாடியவர்
  • வடதிசை (அயோத்தி வரை) சென்ற ஒரே ஆழ்வார்
  • இவர் 11 பாடல்கள் கொண்ட ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார்
  • அப்பதிகம் “கண்ணிநுண் சிறுதாம்பு” என்று தொடங்கும் பதிகம்
  • நம்மாழ்வாரின் திருவைமொழியை இவரே ஓலைசுவடியில் எழுதினார்
  • நம்மாழ்வார் இறைவனடி சேர்ந்ததும், அவரது தெய்வத் திருவுருவினைத் திருக்குருகூரில் நிறுவினார்
  • நம்மாழ்வார் பிறந்த கி.பி. 798-இக்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.
  • ஒரு காலகட்டத்தில் உலக விஷயங்களில் பற்று நீங்கி அயோத்தி, மதுரா, முதலிய வடநாட்டு திவ்ய தேசங்களைச் சேவிக்கச் சென்றார்.
  • மதுரகவியின் பாசுரங்கள் திருமந்திரத்தின் மத்திய பதமாக எண்ணி அதைப் பிரபந்ததின் நடுவே வைத்துள்ளார்கள்.

மேற்கோள்

  • தேவு மற்றறியேன்; குருகூர் நம்பிப்

            பாவின் இன்னிசை பாடிதிரிவேனே

Leave a Reply