TNPSC DAILY CURRENT AFFAIRS – 22 AUGUST 2021
TNPSC DAILY CURRENT AFFAIRS – 22 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது
நிதி அமைச்சகத்தின் “உபார்தே சீதாரே நிதி” திட்டம்
- ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள ஆகியவற்றிற்காக, மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில், “உபார்தே சீதாரே நிதி” திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது
- நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக நிதி ஏற்பாடு செய்வதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிதி, எக்ஸிம் வங்கி மற்றும் சிட்பி வங்கி ஆகிய இரு வங்கியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது
- இந்தியாவிலேயே மிக அதிகளவில் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கொண்டுள்ள மாநிலமாக உத்திரப் பிரதேசம் உள்ளது
இந்தியாவில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் மூலிகை பூங்கா
- உத்தரகண்டில் இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.
- சமோலி மாவட்டத்தின் மனா கிராமமானது இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கடைசி கிராமமாகும். புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு அருகே இந்த கிராமம் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து சுமாா் 11,000 அடி உயரத்தில் உள்ள அந்த கிராமத்தில் மூலிகைப் பூங்கா அமைக்கப்பட்டது.
- இதுவே இந்தியாவில் மிக உயரமான இடத்தில அமைக்கப்பட்டிருக்கும் மூலிகை பூங்கா ஆகும்
ஹிசார் விமான நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டது
- ஹரியானா மாநிலத்தின் ஹிசார் விமான நிலையத்தின் பெயர், “அக்ராசேனா சர்வதேச விமான நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
- ஹிசார் விமான நிலையம் ஒரு உள்நாட்டு விமான நிலையம் மற்றும் மாநிலத்தின் முதல் DGCA உரிமம் பெற்ற பொது ஏரோட்ரோம் ஆகும். இந்த விமான நிலையம் தற்போது 2024 மார்ச் 30 க்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் நிலையில் உள்ளது.
மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் பாதிக்கப் பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம்
- 2௦19 ஆம் ஆண்டு முதல் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களின் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்நாளின் முக்கிய நோக்கம், தீய செயல்கள், வன்முறை செயல்கள் போன்ற பல்வேறு செயல்களை மதம் அல்லது நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்டு அதனால் பாதிப்பிற்கு உள்ளானவர்களை நினைவு கூறுதல் ஆகும்
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யான் சிங் காலமானார்
- உத்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யான் சிங், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89
- இவர் உத்திரப் பிரதேச மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவர். பிரபல பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் பொழுது அம்மாநில முதல்வராக இருதவர் இவர். மேலும் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்
அந்தமான் தீவுகளில், புதிய வகை கடற்பாசி கண்டுபிடிப்பு
- அந்தமான் தீவுகள் பகுதிகளில், புதிய வகையிலான கடற்பாசி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு “அசிடபுலேரியா ஜலகண்யகே” (Acetabularia jalakanyakae) எனப் பெயரிட்டுள்ளனர்
- சம்ஸ்கிருத மொழியில் “ஜலகண்யகே” என்றால் “‘கடல்களின் தெய்வம்’ அல்லது ‘தேவதை அல்லது கடற்கண்ணி” எனப் பொருளாகும்
- இந்த பாசி ஆனது, குடை போன்ற அமைப்பை கொண்ட தொப்பிப் பகுதிகளை கொண்டுள்ளது. இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அசிடபுலேரியா இனத்தின் முதல் இனமாகும். இந்தியாவின் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் ஃபெலிக்ஸ் பாஸ்ட் தலைமையிலான குழு இதனை கண்டுபிடித்துள்ளது.
கைத்தறி முன்னேற்றதிற்கான “சுனில் சேத்தி” குழு
- இந்திய கைத்தறி துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்க உயர்த்தவும், ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரிக்கவும், வழிமுறைகளை கண்டறிந்து கூற “சுனில் சேத்தி” தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளது
- சுனில் சேத்தி, இந்திய ஃபேஷன் டிசைன் கவுன்சில் (FDCI) அமைப்பின் தலிவராக உள்ளது குறிப்பிடத்தக்கது
ஆர்டியூ ஓபன் பிளிட்ஸ் செஸ் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா
- லாட்வியா நாட்டின் ரிகா நகரில் நடைபெற்ற ஆர்டியூ ஓபன் பிளிட்ஸ் செஸ் பட்டத்தை, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வென்றார்
- உலக தர வரிசையில் 6 ஆம் இடத்தில் உள்ள இவர், தனக்கு முன் தரவரிசையில் உள்ள வீரர்களை வென்று, இக்கொபையை வென்றது குறிப்பிடத்தக்கது
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்சிப்
- ஆப்ரிக்க நாடான நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயது உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பிய்னசிப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில், இந்தியாவின் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்
- ஸ்வீடனின் மஜா அஸ்காக், 6.6௦ மீ தாண்டி, 1 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கம் வென்றார்
2௦26 க்குள், இந்தியாவில் மேலும் 100 பூகம்ப ஆய்வகங்கள்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் 2௦26 ஆம் ஆண்டிற்குள், 100 பூகம்ப (நிலநடுக்க) ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்
- இந்த ஆண்டு இறுதிக்குள், 35 பூகம்ப (நிலநடுக்க) ஆய்வகங்கள் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்
மலபார் புரட்சி (அ) மாப்ளா புரட்சி – சுதந்திர போராட்த்துடன் தொடர்புடையது அல்ல என அறிவிப்பு
- கேரள மாநிலத்துடன் தொடர்புடைய “மலபார் புரட்சி (அ) மாப்ளா புரட்சி” எனப்படும் புரட்சி போராட்டம், இந்திய சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடையது அல்ல என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
- சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து இப்போரட்டதுடன் தொடர்புடைய 387 பேரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது
- மலபார் புரட்சி என்பது இந்து நில உரிமையாளர்களுக்கும் – முஸ்லிம் குடியிருப்பு வாசிகளுக்கும் இடையேயான பிரச்சனை தொடர்புடையது என்றும், இது சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடையதுஅல்ல எனவும் அறிவித்துள்ளது
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 21, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 20, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 19, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 18, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 17, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL– AUGUST 16, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL– AUGUST 15, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 14, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 13, 2021
- TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 12, 2021