TNPSC DAILY CURRENT AFFAIRS – 23 AUGUST 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS – 23 AUGUST 2021

       TNPSC DAILY CURRENT AFFAIRS – 23 AUGUST 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 “அடிமை வர்த்தகத்தை நினைவுகூரும் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக” அனுசரிக்கிறது.
  • ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக1791 ஆகஸ்டு 22 நள்ளிரவுமுதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கொங்கன் கடற்படை பயிற்சி நிகழ்ச்சி

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இங்கிலாந்து நாட்டின் ஆங்கில கால்வாய் பகுதியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கடற்படை இணைந்து மேற்கொண்ட “கொங்கன் கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சி” நடைபெற்றது
  • இப்பயிற்சியில் இந்தியாவின் சார்பில் ஐ.என்.எஸ் தபார் கலந்துக் கொண்டது. இங்கிலாந்து சார்பில் எச்எம்எஸ் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற கடற்படை போர்க் கப்பல் கலந்துக் கொண்டது

இந்தியாவிலேயே முதல் முறையாக டெல்லியில் புகை கோபுரம்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இந்தியாவில் முதன் முதலாக டில்லியில், ‘ஸ்மோக் டவர்’ எனப்படும் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் புது தில்லியில் அமைக்கப் பட்டுள்ளது.இந்தியாவின் முதல் புகை கோபுரத்தை டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது
  • இது, 1 வினாடிக்கு 1,000 கியூபிக் மீட்டர் காற்றை சுத்தம் செய்யும் திறன் கொண்டது. இந்த புகை கோபுரம், 24 மீட்டர் உயரம் கொண்டது. ரூ.22 கோடி செலவில் டாடா பிராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டித் தந்துள்ளது. கோபுரத்தில் 1,200 ஏர் பில்டர்கள் உள்ளன. அவை ஒரு கி.மீ. சுற்றளவில் காற்றை சுத்தப்படுத்தும்.
  • ஆனந்த் விஹாரில் மத்திய அரசு அமைத்த 25 மீட்டர் உயர புகை கோபுரம், 31-ந் தேதிக்குள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

70000 ஏ.கே 203 துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள இந்தியா

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • ரஷ்யாவிடம் இருந்து 7௦௦௦௦ ஏ.கே. 2௦3 ரக துப்பாக்கிகளை வாங்க, இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது
  • மேலும் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து, இந்தியாவில் 6 லட்சம் ஏ.கே. 2௦3 ரக அதிவிரைவு தாக்குதல் துப்பாகிகளை தயாரிக்கும் திட்டத்தினை விரைவில் செயல்படுத்த உள்ளன.

Zair-Al-Bahr 2-வது கடற்பயிற்சி நிகழ்ச்சி

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இந்தியா மற்றும் கத்தார் நாடுகளில் கடற்படைகள் இணைந்து மேற்கொண்ட 2-வது Zair-Al-Bahr கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சி பாரசீக வளைகுடா பகுதியில் நடைபெற்றது
  • கடல் கட்டம் மேற்பரப்பு நடவடிக்கை, கடற்கொள்ளை எதிர்ப்பு பயிற்சிகள், வான் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு, போர்டிங் செயல்பாடுகள் மற்றும் SAR பயிற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு பயிற்சி நிகழ்சிகள் நடத்தப்பட்டன

மகாத்மா காந்திக்கு அமெரிக்க காங்கிரஸ் தங்கப் பதக்கம்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • மகாத்மா காந்திக்கு, அமெரிக்காவின் உயரிய விருதான “காங்கிரஸ் தங்கப் பதக்க” விருதை வழங்கும் தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நியுயாற்கை சேர்ந்த காங்கிரஸ் பெண் கரோலின் மாலோனி, கொண்டு வந்தார்.
  • அகிம்சை வழிகளில் மகாத்மா காந்தியின் பங்களிப்புகளுக்காக மரணத்திற்குப் பின் காங்கிரஸ் தங்கப் பதக்கத்தை வழங்குவதற்காக சட்டத்தை அவர் அறிமுகம் செய்தார்
  • விருது வழங்கப்பட்டால், காந்தி அமெரிக்காவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான காங்கிரஸ் தங்கப் பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் ஆவார்

உலக டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய இணை

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மணிக்கா பத்ரா மற்றும் ஜி.சத்யன் ஜோடி, ஹங்கேரி இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது
  • 11-9, 9-11, 12-10, 11-6 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி, ஹங்கேரி ஜோடியை வீழ்த்தியது

மணிரங் மலையில் தேசியக் கொடியை ஏற்றிய முப்படை வீராங்கனைகள்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 15 பேர் கொண்ட பெண் வீராங்கனைகள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் உயரமான மலைகளில் ஒன்றான “மணிரங்” மலையில் ஏறி தேசியக் கொட்டி நட்டனர்
  • 15 பேர் கொண்ட இந்த பயணத்திற்கு இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் பாவனா மெஹ்ரா தலைமை தாங்கினார்

வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவின் புதிய தலைவர்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • 5௦ கோடி மற்றும் அதற்கு மேலான வங்கி மோசடிகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கையை பரிந்துரையை கூறும் வங்கி மற்றும் நிதி மோசடிகளுக்கான ஆலோசனைக் குழுவின் புதிய தலைவராக திரு டி.எம்.பாசின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • இவரை சி.வி.சி எனப்படும் மத்திய விஜிலன்ஸ் கமிசன் பரிந்துரை செய்ததை அடுத்து, இப்பதவிக்கு இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம் ‘ஆர்மி – 2021’

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் சார்பில், ரஷ்யாவின் குபின்கா நகரில் “ஆர்மி-2௦21” என்ற இராணுவ கண்காட்சி துவங்கியது
  • இந்தியாவின் சார்பில், இக்கண்காட்சி மன்றத்தில் “ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு” எனப்பும் “டி.ஆர்.டி.ஓ” கலந்துக் கொள்கிறது
  • ARMY-2021 மன்றத்தில், DRDO அதன் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர் விமானமான LCA தேஜஸ், அர்ஜுன் மெயின் பாட்டில் டேங்க் (MK1A), டேங்க் எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் போன்றவற்றை இந்தியா பெவிலியன் நிகழ்ச்சியில் காண்பிக்கும்.

100 டன் மருத்துவ திரவ ஆக்சிஜனை இலங்கைக்கு கொண்டு சென்ற ஐ.என்.எஸ் சக்தி கப்பல்

TNPSC DAILY CURRENT AFFAIRS

  • இலங்கையில் ஏற்பட்ட கொரோனோ நோய் பாதிப்புகளுக்கு உதவும் நோக்கில், இந்தியாவின் சார்பில் 100 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், ஐ.என்.எஸ் சக்தி போர்கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
  • இலங்கை அதிபரின் தனிப்பட்ட அவசர வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவின் சார்பில் மருத்துவ திற ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

 

Leave a Reply