TNPSC POTHU TAMIL ONE LINE NOTES

TNPSC POTHU TAMIL ONE LINE NOTES

TNPSC POTHU TAMIL ONE LINE NOTES

TNPSC POTHU TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
    202.  ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
    203.  ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
    204.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
    205.  ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
    206.  ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
    207.  ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
    208.  ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
    209.  ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
    210.  ஐந்திணை ஐம்பது ஆசிரியர் – மாறன் பொறையனார்
    211.  ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
    212.  ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
    213.  ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
    214.  ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
    215.  ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
    216.  ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
    217.  ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
    218.  ஒரு புளியமரத்தின் கதை  நாவலாசிரியர் – சுந்தர ராமசாமி
    219.  ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் – குலோத்துங்கச் சோழனுலா
    220.  ஒருபிடி சோறு –  சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
    221.  ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
    222.  ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
    223.  ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் – கல்கி
    224.  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
    225.  ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
    226.  ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
    227.  ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
    228.  ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
    229.  ஓவச் செய்தி ஆசிரியர் – மு.வ
    230.  ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
    231.  கங்கை மைந்தன் – தருமன்
    232.  கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
    233.  கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
    234.  கடைச் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 449
    235.  கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  – 49
    236.  கடைச்சங்கம் இருந்த மொத்த  ஆண்டுகள்  – 1850
    237.  கடைச்சங்கமிருந்த இடம் – மதுரை
    238.  கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் – முருகு சுந்தரம்
    239.  கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
    240.  கண்ணதாசன் இயற்பெயர் – முத்தையா
    241.  கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
    242.  கந்த புராண ஆசிரியர் – கச்சியப்ப சிவாச்சாரியார்
    243.  கபிலர்-பாரி / ஔவை-அதியன் / பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
    244.  கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
    245.  கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் –  இராமவதாரம்
    246.  கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
    247.  கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்பர்
    248.  கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
    249.  கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
    250.  கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணிமேகலை
    251.  கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
    252.  கரந்தை – ஆநிரை மீட்டல்
    253.  கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
    254.  கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
    255.  கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
    256.  கருப்பு மலர்கள் ஆசிரியர் –  நா.காமராசன்
    257.  கல்கியின் முதல் நாவல் – விமலா
    258.  கலம்பக உறுப்புகள்  – 18
    259.  கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
    260.  கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
    261.  கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
    262.  கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் – 34 பாடல்கள்
    263.  கலி.பாலைக்கலி பாடியவர் – பெருங்கடுங்கோ – 29 பாடல்கள்
    264.  கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
    265.  கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
    266.  கலித்தொகை, பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
    267.  கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
    268.  கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
    269.  கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
    270.  கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
    271.  கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
    272.  கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
    273.  கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
    274.  கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
    275.  கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
    276.  கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
    277.  கவரி வீசிய காவலன் – சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
    278.  கவிஞர் துறைவனின் இயற்பெயர் – எஸ்.கந்தசாமி
    279.  கவிஞர் மீராவின் இயற்பெயர் – மீ.ராஜேந்திரன்
    280.  கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல்  மொழிபெயர்ப்பு – லைட் —-ஆஃப் ஆசியா
    281.  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் – ரூபாயாத் –பாரசீக மொழி
    282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
    283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
    284.  கவிராஜன் கதையாசிரியர்    – வைரமுத்து
    285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
    286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
    287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி                    
    288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
    289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு, நானோர் தும்பி என்று பாடியவர் – பாரதிதாசன்
    290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
    291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
    292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
    293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
    294.  காந்தியக் கவிஞர்  –  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை                     
    295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
    296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
    297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
    298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
    299.  காளக்கவி எனப்படுபவர் – காளமேகம்                                                     
    300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்

 

 

Leave a Reply