TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES

TNPSC TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. கிரவுஞ்சம் என்பது – பறவை
    302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750 
    303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
    304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
    305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
    306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
    307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
    308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
    309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் – குதிரை மறம்
    310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
    311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
    312.  குறிஞ்சிக் கிழவன் – முருகன்                                                                            
    313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி                                             
    314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் – கபிலர்
    315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
    316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
    317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
    318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது – உரிப்பொருள்
    319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
    320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்
    321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
    -குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
    322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
    323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
    324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
    325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
    326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
    327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  – அடியார்க்கு நல்லார்
    328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
    329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
    330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            – தாண்டவராயர்
    331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
    332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
    333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
    334.  கொற்ற வள்ளை – உலக்கைப் பாட்டு
    335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
    336.  கோவூர்கிழார் நூலாசிரியர் – கு.திருமேனி
    337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் – நா.காமராசன்
    338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
    339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
    340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
    341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
    342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
    343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
    344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
    345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
    346.  சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
    347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் – மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
    348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் – 30
    349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
    350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
    351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
    352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
    353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் –  நம்மாழ்வார்          
    354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் – செய்குத் தம்பிப் பாவலர்
    355.  சதுரகராதி ஆசிரியர் –  வீரமாமுனிவர்
    356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் – கவிஞர் தமிழழகன்
    357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
    358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் – வச்சிர நந்தி சங்கம்
    359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
    360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
    361.  சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
    362. சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் –  மாயூரம் வேத நாயகர்
    363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
    364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
    365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
    366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
    367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் – வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
    368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
    369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
    370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
    371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் – படிக்காசுப் புலவர்
    372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் – தாழை நகர்
    373.  சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
    374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
    375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
    376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
    377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
    378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
    379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை
    380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
    381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
    382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  – பாரதியார்
    383.  சின்னூல் எனப்படுவது  –  நேமி நாதம்
    384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  – 1705
    385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
    386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் – செய்யது காதர் மரைக்காயர்
    387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
    388.  சீறாப்புராணம் ஆசிரியர்  –  உமறுப்புலவர்
    389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
    390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
    391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
    392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
    393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
    394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
    395.  சுரதாவின் இயற்பெயர்  –  இராசகோபாலன்
    396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
    397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
    398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
    399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  – மண்டல புருடர்
    400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் – மறக்கள வழி – வாகைத்திணை

 

 

 

Leave a Reply