TNPSC GROUP 4 TAMIL ONE LINE MATERIAL

TNPSC GROUP 4 TAMIL ONE LINE MATERIAL

TNPSC GROUP 4 TAMIL ONE LINE MATERIAL

TNPSC GROUP 4 TAMIL ONE LINE MATERIAL – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.

801.  புறநானூற்றின் பாவகை – ஆசிரியப்பா
802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804.  புறப் பாட்டு எனும் நூல் – புறநானூறு
805.  புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806.  புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807.  புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808.  புறப்பொருளின் பாவகை – வெண்பா
809.  புறவீடு விடுதல் – குடை நிலை வஞ்சி
810.  புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்
811.  புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் – நற்றிணை
812.  புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
813.  புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814.  பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
815.  பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816.  பெண்களின் பருவங்கள் – ஏழு
817.  பெண்புத்தி மாலை ஆசிரியர் – முகம்மது உசைன் புலவர்
818.  பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
819.  பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820.  பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
821.  பெரிய புராண உட்பிரிவு  – சருக்கம்
822.  பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் – திருத்தொண்டர் புராணம்
823.  பெரியபுராணத்திற்கு மூல நூல்
திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824.  பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825.  பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
826.  பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827.  பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828.  பெருந்திணைக்கு உரியது – ஏறிய மடல் திறம்
829.  பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830.  பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831.  பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832.  பொருட்கலவை நூல் – பரிபாடல்
833.  பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் – சேரமான் பெருமாள் நாயனார்
834.  பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835.  பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836.  போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837.  போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838.  பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839.  பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840.  மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
841.  மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
842.  மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் – வ.வே.சு ஐயர்
843.  மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844.  மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
845.  மண நூல் – சீவக சிந்தாமணி
846.  மண்குடிசை நாவலாசிரியர் – மு.வ
847.  மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848.  மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
849.  மண்திணி ஞாலம்                    – பூமி
850.  மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
851.  மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852.  மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
853.  மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
854.  மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
855.  மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
856.  மதிவாணன் நாவலாசிரியர் – பரிதிமாற்கலைஞர்
857.  மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
858.  மதுரைக்காஞ்சிப் பாடியவர் – மாங்குடி மருதனார்
859.  மந்திரமாலை நூலின் ஆசிரியர் – தத்துவப் போதக சுவாமிகள்
860.  மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
861.  மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
862.  மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
863.  மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864.  மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
865.  மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
866.  மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் – மயிலை .சீனி.வேங்கடசாமி
867.  மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் – சாகுந்தலம்
868.  மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
869.  மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
870.  மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
871.  மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
872.  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
873.  மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
874.  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் – திரு.வி.க     
875.  மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
876.  மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
877.  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
878.  மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879.  மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
880.  மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் – கண்ணதாசன்
881.  மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
882.  மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
883.  மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
884.  மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885.  மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் – சேக்கிழார்                            
886.  மாரிவாயில் நூலாசிரியர் – சோமசுந்தர பாரதியார்
887.  மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
888.  மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
889.  மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
890.  மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
891.  மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
892.  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
893.  மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
894.  முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்
895.  முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
896. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி. சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராசப்பிள்ளை, நமச்சிவாயமுதலியார், கோ.கேசவன், கே.முத்தையா
897.  முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
898.  முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899.  முசு  – குரங்கு
900.  முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்

 

 

 

 

Leave a Reply