உதயணகுமார காவியம்
உதயணகுமார காவியத்தின் உருவம்
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 369
- காண்டம் = 6
உதயண குமார காவியம் காண்டங்கள்
- உஞ்சைக் காண்டம்
- இலாவண காண்டம்
- மகத காண்டம்
- வத்தவ காண்டம்
- நரவாகன காண்டம்
- துறவுக் காண்டம்
உதயணகுமார காவியம் வேறு பெயர்
- உதயணன் கதை
பொதுவான குறிப்பு
- இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
- கதைத்தலைவன் = உதயணன்
- உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
- உதயணன் யாழின் பெயர் = கோடபதி
- “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்
- வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
தோணி முகம் கட்டு எனச் சொல்லியே
புலம்புவான்