கியூரி அம்மையார் 1867ம் ஆண்டு போலந்து நாட்டில் வறுமையான குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.
தனது மூத்த சகோதரியின் விருப்பமான மருத்துவ கல்வி பயில்வதை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்ததும், தாதி போல் பணிவிடைகள் செய்தும் பொருளீட்டி உதவினார்.
மேரிக்கு போலந்தில் அறிவியல் கல்வி மறுக்கப்பட்டதால், பிரான்ஸ் நாட்டிற்கு சென்று அறிவியல் கல்வி பயின்றார்.
அறிவியல் மேதை பியுரிகியூரியை, மேரி திருமணம் செய்துகொண்டார்.
அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்சியில் ஈடுபட்டார்.
மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தயை பெற்றெடுத்தார்.
இடைவிடாத ஆராச்சியின் பயனாக, கணவன், மனைவி இருவரும் முதலில் பொலோனியும் என்னும் பொருளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவிடாது ஆராய்ச்சி செய்து ரேடியம் என்னும் பொருளை கண்டுப்பிடித்தனர். இவ்விரண்டு அறிய கண்டுபிடிப்புகளுக்காக மேரி கியூரிக்கும் அவர் கணவருக்கும் 1903ம் ஆண்டு “நோபல் பரிசு” வழங்கப்பட்டது.
இவரின் கண்டுபிடிப்பைப் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன் வந்த போதும் தனது அறிவியல் கண்டுபிடிப்பை அறிவியல் உலகிற்கே கொடையாக கொடுத்தார்.
மேலும் அவருக்கு இரண்டாவது முறையாக 1911ஆம் ஆண்டு ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேரி கியூரி 1934இல் இயற்கை எய்தினார்.
கியூரியின் இறப்பிற்குப்பின் அவர் மகள் ஐரினும், மருமகன் சாலிட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்சிக்காக 1935ம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை