சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாடும் நகரமும்

நாடும் நகரமும்

நாடு:

  • நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
  • மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
  • நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
  • முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
  • சோழநாட்டில் மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கபடுகிறது. கூர்ரைநடு என்பது கொரநாடு என்று மருவிற்று. பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.

நகரம்:

  • சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
  • பாண்டிநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகிறது.
  • இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

சென்னை:

  • திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.

புரம்:

  • “புரம்” என்னும் சொல், சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் “புரம்” என்பது சேர்ந்து காஞ்சிபுரம்ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.

பட்டிணம்:

  • கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டிணம்” எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கப்பட்டிணம் ஆகியவை “பட்டிணம்” எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.

பாக்கம்:

  • கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் “பாக்கம்” எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.

புலம்:

  • “புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமரைபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

குப்பம்:

  • நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் “குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.

ஆசிரியர்:

  • சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் “ஊரும் பேரும்” என்ற நூலின் இருந்து எடுக்கப்பட்டது.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply