சமதர்ம சமயசார்பற்ற நாடு
சமதர்ம சமயசார்பற்ற நாடு
இந்தியா ஒரு சமதர்ம சமயச் சார்பற்ற நாடாகும். இந்தியாவில் எந்தவொரு மதத்தை முன்னிறுத்தியும் அரசியல் அமைப்பு சட்டமானது உருவாக்கப்படவில்லை.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மதமாக எதுவும் இல்லை. 1976 ஆம் ஆண்டு 42-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் (42nd Amendment Act) மூலம் “சோசியலிசம்” (Socialism) மற்றும் “சமயச் சார்பின்மை” (Secular) ஆகிய வார்த்தைகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையில் (Preamble) சேர்க்கப்பட்டது. இந்தியா ஒஅர் சமதர்ம சமயசார்பற்ற நாடு ஆகும்.
சோசியலிசம் என்பது, தேசத்தின் சொத்து மற்றும் வருவாயின் பயன்கள் அனைத்தும், நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். சமுதாயத்தின் விளிம்பில் உள்ள அணைத்து மக்களும் பொருளாதாரப் பயனைப் பெற வேண்டும் என்பதே சோசியலிசம் ஆகும்.
சமயச் சார்பினை என்பது, அரசாங்கம் எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்தவோ, அங்கீகரிக்கவோ, அறக்கொடை அளிப்பதோ கூடாது. அணைத்து மக்களுக்கும் சமய சுதந்திரத்தை அளிக்க வேண்டும் ஆகும்.
சமதர்ம சமயசார்பற்ற நாடு
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சமதர்ம சமயச்சார்பற்ற நாடு – பிரிவுகளின் விதிகலானது,
- முகப்புரையில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது (Liberty of Belief, Faith and Worship)
- விதி 14 = சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Equality before law)
- விதி 15 = சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை (Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth)
- விதி 16 = பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு வழங்குதல் (Equality of opportunity in matters of public employment)
- விதி 25 = மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும், சுதந்திரமாகச் சமயநெறி ஒம்புதலும் ஒழுகுதலும் ஓதிப்பரப்புதலும் (Freedom of conscience and free profession, practice and propagation of religion)
- விதி 26 = சமயம் சார்ந்த செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமை (Freedom to manage religious affairs)
- விதி 27 = குறிப்பிட்ட மதம் சம்பந்தப்பட்ட அமைப்பை வளர்பதற்கான வரிகள் செலுத்துதல் பற்றிய சுதந்திரம் (Freedom as to payment of taxes for promotion of any particular religion)
- விதி 28 = கல்வி நிறுவனங்களில் சமய போதனை அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம் (Freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institutions)
- விதி 29 = சிறுபான்மையிரின் நலன்களுக்கான பாதுகாப்பு (Protection of interests of minorities)
- விதி 30 = கல்வி நிறுவனங்களை ஏற்ப்படுத்தவும், அதனை நிர்வகிப்பதற்குமான சிறுபான்மையினருக்கான உரிமை (Right of minorities to establish and administer educational institutions)
- விதி 44 = குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் (Uniform civil code for the citizens)
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (Communal Representation) அனுமதிக்கப்படவில்லை. அதாவது மதத்தின் அடிப்படையில் தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படுவதில்லை.
சமதர்ம சமயசார்பற்ற நாடு – குறிப்பு
- மதத்தின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. அனால் தாழ்த்தப்பட்டோர் (Scheduled Caste) மற்றும் பழங்குடியினர் (Scheduled Tribes) ஆகியோருக்கு அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக தற்காலிக இடஒதுக்கீடு (Temporary reservation) அமல் செய்யப்பட்டுள்ளது.
- வகுப்புவாரி பிரதிநித்துவம் (Communal representation) நடைமுறையில் இருந்த சட்டங்கள் = இந்திய அரசு சட்டங்கள் 1909, 1919, 1935 ஆகும்
- வகுப்புவாரி பிரதிநித்துவத்தின் தந்தை (Father of Communal Electorate) எனப்படுபவர் = மின்டோ பிரபு ஆவார்.
- SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- LENGTHIEST WRITTEN CONSTITUTION / நீளமான எழுதப்பட்ட ஆவணம்
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை