தன்னாட்சி அமைப்புகள்
தன்னாட்சி அமைப்புகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், தன்னாட்சி அமைப்புகளைப் (Autonomous Bodies) பற்றிய விதிகளாகும். வழக்கமாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் அரசாங்கத்தின் முப்பெரும் பகுதிகளான சட்டமன்றத்துறை (Legislative), ஆட்சித்துறை (Executive) மற்றும் சட்டத்துறை (Judicial) பற்றிய விதிகளே இடம் பெற்றிருக்கும். ஆனால இந்திய அரசியல் சட்டத்தில் தன்னாட்சி அமைப்புகளுக்கு தனி சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தை ஜனநாயக வழியில் செயல்படுத்த பெருபகுதியாக விளங்குகிறது இந்த தன்னாட்சி அமைப்புகள்.
- தேர்தல் ஆணையம் (Election Commission) = பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் போன்றவற்றை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும் அமைப்பாகும்
- இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (Comptroller and Auditor General of India) = மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிதி தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்யும் அதிகார அமைப்பு இதுவாகும். இவர் பொதுமக்களின் பணத்திற்கு பாதுகாவலனாக (Guardian of Public Purse) செயல்படுவார். மேலும் அரசாங்கம் மேற்கொள்ளும் செலவினங்கள் சட்டபூர்வமானதா என்றும், கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா என்பதனையும் கண்காணிக்கும்.
- மத்திய பொதுப் பணித் தேர்வாணையம் (Union Public Service Commission) = மத்திய பொதுப் பணித் தேர்வாணையத்தால் அகில இந்தியப் பணிகள் (All India Services), மத்திய அரசுப் பணிகள் (Higher Central Services), மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பகுதிகளுக்கான பொதுப்பணிகள் ஆகியவற்றிற்கான தேர்வினை நடத்தி உரிய பணியாளரை தேர்வு செய்கிறது. மேலும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கு (President) பரிந்துரை செய்கிறது.
- மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (State Public Service Commission) = மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசுப் பணிகளுக்கு தேர்வினை நடத்தி உரிய தகுதி உள்ள பணியாளரை தேர்வு செய்கிறது. மேலும் பணியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க மாநில ஆளுநருக்கு (Governor) பரிந்துரை செய்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதிகளாகக் கருதப்படும் இந்த அமைப்புகள் முழு சட்டச் சுதந்திரம் பெற்றவை. சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை போன்று தனித்தியங்க வல்லவை. இந்த அமைப்புகளின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்காக இந்த அமைப்பு சார்ந்தவர்களுக்கு பனிக்கால, பனி நிபந்தனை, ஊதியம் பற்றிய சட்டப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தன்னாட்சி அமைப்புகள் – குறிப்பு
- தற்சமயம், அகில இந்திய பணிகளில் 3 பணிகள் மட்டுமே உள்ளன. அவை “ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய நிர்வாகப் பணி (IAS – Indian Administrative Service)”, “ஐ.எப்.எஸ் எனப்படும் இந்திய வனப் பணி” (IFS – Indian Forest Service) மற்றும் “ஐ.பி.எஸ் எனப்படும் இந்திய காவல் பணி” (IPS – Indian Police Service).
- இந்திய சுதந்திரத்தின் பொழுதே அகில இந்திய நிர்வாகப் பணி மற்றும் அகில இந்திய காவல் பணியிடம் இருந்தது. 1963-ம் ஆண்டு அகில இந்திய வனப் பணி உருவாக்கப்பட்டது.
- DRAWN FROM VARIOUS RESOURCES / பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை
- BLEND OF RIGIDITY AND FLEXIBILITY / நெகிழும் மற்றும் நெகிழா தன்மை
- FEDERAL SYSTEM WITH UNITARY BIAS / கூட்டாட்சி ஒற்றையாட்சி கலப்பு
- PARLIAMENTARY FORM OF GOVERNMENT / நாடாளுமன்ற அரசாங்க அமைப்பு
- SYNTHESIS OF PARLIAMENTARY SOVEREIGNITY AND JUDICIAL SUPREMACY / நாடாளுமன்ற இறையாண்மை நீதித்துறை மேலாண்மை ஒருங்கிணைப்பு
- INTEGRATED AND INDEPENDENT JUDICIARY / ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதித்துறை
- FUNDAMENTAL RIGHTS / அடிப்படை உரிமைகள்
- DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY / வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
- FUNDAMENTAL DUTIES / அடிப்படை கடமைகள்
- A SECULAR STATE / சமய சார்பற்ற நாடு
- UNIVERSAL ADULT FRANCHISE / அனைவருக்கும் வாக்குரிமை
- SINGLE CITIZENSHIP / ஒற்றைக் குடியுரிமை