திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார்
- இவரின் ஊர் = உறையூர்
- சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்
- இவர் திருமாலின் ஸ்ரீவத்சம் அம்சமாகப் பிறந்தவர்
- இவர் பாண்குடியினர்
- இழி குலத்தில் பிறந்த ஆழ்வார்
- திருவரங்கக் கோவிலில் செல்ல இயலாது காவிரிக் கரையில் நின்று பாடியவர்
- இவரை உலோக சாரங்கர் முதலிய அந்தணர்கள் கல்லால் அடித்தனர்
- இவர் பாடியது “அமலனாதி பிரான்” என்னும் பதிகம்
- இதில் 10 பாடல்கள் உள்ளன
- இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம்.
- திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் “என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே” என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார்.
- இவர் பாடிய பத்துப்பாடல்கள் “அமலனாதிபிரான்” எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
- இவர் அரங்கன் மீது பாடிய பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாக காட்சிப்படுத்துகிறது.
சிறப்புப் பெயர்கள்
- முனிவாகணன்
- யோகிவாகணன்
- பாணர்
- கவீசுவரர்