பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
பனிரெண்டாம் ஆம் வகுப்பு சிற்றிலக்கியங்கள்
- பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருளாகும்.
- பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப்பெற்றன.
- அவ்வகையில் உருவான இலக்கிய வகைகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் என வழங்கலாயின.
- பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன.
- பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியில் பிரபந்தம் தொண்ணூற்றாறு எனக்கூறி அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
- கோவை, உலா, தூது, கலம்பம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, அந்தாதி முதலியவை சிற்றிலக்கியங்களுள் சிறப்பானவைகளாகக் கருதப்பெறுகின்றன.
- இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலானோரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் நோக்கிலேயே சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றுள்ளன.
- காலந்தோறும் தமிழ்த்தாய் புதுப்புது அணிகளைப் புனைந்து வந்திருக்கிறாள் என்பதற்குச் சான்றுகளாய்ச் சிற்றிலக்கியங்கள் திகழ்கின்றன.
வீரமாமுனிவர் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்கள்
- சதுரகராதியுள் வீரமாமுனிவர் குறிப்பிடும் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் இவை.
- இவற்றுள் கூறப்படாத சிலவற்றை இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
-
- சாதகம்
- பிள்ளைத்தமிழ்
- பரணி
- கலம்பகம்
- அகப்பொருள் கோவை
- ஐந்திணைச் செய்யுள்
- வருக்கக் கோவை
- மும்மணிக்கோவை
- அங்கமாலை
- அட்டமங்கலம்
- அநுராகமாலை
- இரட்டைமணி மாலை
- இணைமணிமாலை
- நவமணி மாலை
- நான்மணி மாலை
- நாமமாலை
- பலசந்த மாலை
- கலம்பகமாலை
- மணிமாலை
- புகழ்ச்சி மாலை
- பெருமகிழ்ச்சிமாலை
- வருத்தமாலை
- மெய்கீர்த்தி மாலை
- காப்புமாலை
- வேனில்மாலை
- வசந்த மாலை
- தாரகை மாலை
- உற்பவ மாலை
- தானைமாலை
- மும்மணிமாலை
- தண்டக மாலை
- வீரவெட்சிமாலை
- வெற்றிக்கரந்தை மஞ்சரி
- போர்க்கெழு வஞ்சி
- வரலாற்று வஞ்சி
- செருக்கள வஞ்சி
- காஞ்சி மாலை
- நொச்சி மாலை
- உழிஞைமாலை
- தும்பை மாலை
- வாகைமாலை
- வதோரணமஞ்சரி
- எண்செய்யுள்
- தொகைநிலைச் செய்யுள்
- ஒலியல் அந்தாதி
- பதிற்றந்தாதி
- நூற்றந்தாதி
- உலா
- உலாமடல்
- வளமடல்
- ஒருபா ஒருபஃது
- இருபா இருபஃது
- ஆற்றுப்படை
- கண்படை நிலை
- துயிலெடை நிலை
- பெயரின்னிசை
- ஊரின்னிசை
- பெயர் நேரிசை
- ஊர் நேரிசை
- ஊர் வெண்பா
- விளக்க நிலை
- புறநிலை
- கடைநிலை
- கையறுநிலை
- தசாங்கப்பத்து
- தசாங்கத் தயல்
- அரசன் விருத்தம்
- நயனப்பத்து
- பயோதரப் பத்து
- பாதாதி கேசம்
- கேசாதி பாதம்
- அலங்காரப் பஞ்சகம்
- கைக்கிளை
- மங்கல வள்ளை
- தூது
- நாற்பது
- குழமகன்
- தாண்டகம்
- பதிகம்
- சதகம்
- செவியறிவுறூஉ
- வாயுறை வாழ்த்து
- புறநிலை வாழ்த்து
- பவனிக்காதல்
- குறத்திப்பாட்டு
- உழத்திப்பாட்டு
- ஊசல்
- எழுகூற்றிருக்கை
- கடிகை வெண்பா
- சின்னப்பூ
- விருத்த விலக்கணம்
- முதுகாஞ்சி
- இயன்மொழி வாழ்த்து
- பெருமங்கலம்
- பெருங்காப்பியம்
- சிறுகாப்பியம்