ஹுமாயூன் – முகலாயப் பேரரசர்: வாழ்க்கை, போர்கள், ஆட்சி மற்றும் சாதனைகள்

இந்தியாவின் இரண்டாவது முகலாயப் பேரரசரான ஹுமாயூன் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். அவரது வாழ்க்கை, ஆட்சிக்காலம், முக்கிய போர்கள், நாடு கடத்தப்பட்ட காலம், இந்தியா திரும்பியது, சாதனைகள் மற்றும் இறப்பு ஆகியவை இதில் அடங்கும். TNPSC தேர்வுக்கான பயனுள்ள குறிப்புகள்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்
- பாபருக்கும், மாஹிம் பேகம் என்பவருக்கும் மகனாக கி.பி.1508 இல் காபுலில் பிறந்தவர் ஹுமாயுன்.
- ஹுமாயூனின் இயற்பெயர் = நசிருதின் முகம்மது
- பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரியணையை பெற்றார் ஹுமாயுன்.
- ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட முகலாய மன்னன் = ஹுமாயுன்.
- 23 வது வயதில் அரியணை ஏறினார்.
- இவர் இரண்டு முறை ஆட்சி செய்தவர் ஆவார்.
- கி.பி. 1530 – 40 & 1555 – 1556 வரை
- ஹுமாயுன் எடுத்த நடவடிக்கைகளில் மிகப்பெரும் தவறாக் அமைந்தது = ஆட்சிப்பகுதியை தனது சகோதரர்களான “கம்ரான், ஹிண்டால் மற்றும் அஸ்காரி” ஆகியோருக்கு பிரித்து கொடுத்தது.
- “தீன்பனா” என்னும் புதிய நகரை உருவாக்கியவர் = ஹுமாயுன்.
- தீன்பனாவை இரண்டாவது தலைநகராக் அறிவித்தார் ஹுமாயுன்.
- 15 ஆண்டுகள் பாரசீகத்தில் வாழ்ந்தார்.
- 15 ஆண்டுகள் சூர் வம்சம் இந்தியாவை ஆட்சி செய்தது.
- டெல்லியை ஆண்ட இரண்டாவது ஆப்கானிய வம்சம் = சூர் வம்சம்.
- ஹுமாயூனை இரண்டு முறை தோற்கடித்தவர் = ஷெர்ஷா சூரி (சௌசா போர் மற்றும் கண்ணோசி போர் (அ) பில்கிராம் போர்)
- பாரசீக அரசனின் உதவியுடனும், தனது நம்பிக்கைக்குரிய பாதுகாவலரான “பைரம்கான்” உதவியுடன் மீண்டும் கி.பி. 1554ல் டெல்லி மீது போர் தொடுத்தார்.
- கி.பி.1555 “சர்ஹிந்த் போர்” மூலம் தனது அரியணை மீண்டும் கைப்பற்றினார் ஹுமாயூன்.
- கி.பி.1556 ல் அரண்மனை நூலக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
- தங்க நாணயங்களை வெளியிட்ட முதல் முகலாய மன்னன் = ஹுமாயூன்.
- “ஹுமாயூன் நாமா” புத்தகத்தின் ஆசிரியர் = குல்பதான் பேகம் (ஹுமாயூனின் சகோதரி)
- “முகலாய ஓவிய முறையை” அறிமுகம் செய்தவர் = ஹுமாயூன்.
- ஹுமாயுன் காலத்தில் பாரசீக மொழி, மெது மெதுவாக வழக்காடு மொழியாக உயர்ந்தது.
- “விழும் வாய்ப்பு இருந்தால், ஹுமாயூன் அதைத் தவறவிடக்கூடிய மனிதர் அல்ல. அவர் தனது வாழ்க்கையில் தடுமாறி கீழே விழுந்தார்” என்று கூறியவர் பிரபல வரலாற்று ஆய்வாளர் “லேன் பூல்” (His end was of a piece with his character; if there was a chance of falling, Humayun was not the man to miss it.)
- ஸ்டான்லி லேன்-பூல் புகழ்பெற்ற ஒரு கருத்தைக் கூறினார்: “ஹுமாயூன் தடுமாறியபடியே வாழ்க்கையைக் கடந்து சென்றார்; இறுதியில் தடுமாறியபடியே அதிலிருந்து விடைபெற்றார்” (Stanley Lane-Poole famously remarked: “Humayun tumbled through life, and he tumbled out of it.“)
- ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்

ஹுமாயூன்: போர்கள் மற்றும் சாதனைகள்
ஹுமாயூனின் முக்கிய போர்களில் கலிஞ்சர் கோட்டை முற்றுகை, சுனார் முற்றுகை, தௌரா போர், சௌசா போர், கண்ணோசி போர், மச்சிவாரா போர் மற்றும் சர்ஹிந்த் போர் ஆகியவை அடங்கும்.
ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்
கலிஞ்சார் முற்றுகை 1531
- நடைப்பெற்ற ஆண்டு = கி.பி.1531
- பந்தேல்கண்டில் உள்ள கலிஞ்சார் கோட்டையை முற்றுகை இட்டார்.
- சந்தேலா அரசன் தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கு ஈடாக “12 டன்” தங்கத்தை ஹுமாயுனுக்கு வழங்கினார்.
தௌரா போர் (கி.பி. 1532)
- பீகாரை ஆட்சி செய்து வந்த ஆப்கன் தலைவரான “மக்மூத் லோடியை” தோற்கடித்தார்.
சுனார் முற்றுகை (கி.பி. 1532)
- “கிழக்கு இந்தியாவின் நுழைவாயில்” என்று அழைக்கப்பட்ட இடம் = சுனார் கோட்டை.
- கிபி 1532 இல், ஷேர்ஷா சூரியின் கீழ் இருந்த சுனார் கோட்டையை ஹுமாயூன் கைப்பற்றினார்.
- இது கிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என்றும் அழைக்கப்பட்டது.
சௌசா போர் 1539
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1539.
- ஷெர்ஷா சூரி, இப்போரில் ஹுமாயுனை தோற்கடித்தார்.
- போர்களத்தில் இருந்து ஹுமாயுன் தப்பி ஓடினார்.
- “நிசாம்” என்னும் தண்ணீர் சேகரிப்பாளர், இவரை காப்பாற்றினார்.
- இதற்கு கைமாறாக நிசாமை, அரை நாள் மட்டும் “பாட்சாவாக” இருக்க ஒப்புதல் அளித்தார் ஹுமாயூன்.
- ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்
கண்ணோசி போர் 1540
- கண்ணோசி போர் (அ) பில்கிராம் போர்
- நடைபெற்ற ஆண்டு = கி.பி. 1540.
- ஷெர்ஷா சூரி வெற்றி பெற்றார். போர்க்களத்தில் இருந்து ஹுமாயுன் தப்பினார்.
- சீக்கிய இரண்டாவது குருவான “குரு அங்கத்” அவர்களை சென்று சந்தித்துள்ளார் ஹுமாயூன்.
மச்சிவாரா போர் 1555
- மச்சிவாரா போர் 1555-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி நடைபெற்றது;
- இடம்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், சட்லஜ் நதிக்கரையில் உள்ள மச்சிவாரா.
- இதில் முகலாயர்கள் பெற்ற தீர்க்கமான வெற்றி, பேரரசர் ஹுமாயூன் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதற்கான பாதையை அமைத்துக்கொடுத்தது.
- ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்
சிர்ஹிந்த் போர் (1555)
- நடைபெற்ற ஆண்டு = 1555.
- தேதி: ஜூன் 22, 1555
- இடம்: சிர்ஹிந்த், பஞ்சாப் (தற்போதைய இந்தியா)
- ஹுமாயூனும் அவரது தளபதி பைராம் கானும் சிக்கந்தர் சூரியை உறுதியான முறையில் தோற்கடித்து, 1555-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லி மற்றும் ஆக்ராவை மீண்டும் கைப்பற்றினர்.
- ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்

ஹுமாயூன் கல்லறை
- ஹுமாயூன் கல்லறை: டெல்லி
- கட்டியவர்: ஹுமாயூனுக்காக ஹமீதா பானு பேகம்
- கட்டிடக்கலைஞர்: மிரக் மிர்சா கியாஸ்
- கட்டுமானப் பணிகள் தொடங்கிய ஆண்டு: 1565
- நிறைவடைந்த ஆண்டு: 1572
- இது முகலாயர்களின் ‘தோட்டத்துடன் கூடிய கல்லறை’ (garden-tomb) கட்டிடக்கலை பாணியின் ஒரு முக்கியமான ஆரம்பகால உதாரணமாகக் கருதப்படுகிறது.
- பிற்காலத்தில் முகலாயக் கட்டிடக்கலையின் வளர்ச்சிக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; குறிப்பாக, தாஜ் மஹாலின் கட்டுமானத்தில் உச்சம் தொட்ட கட்டிடக்கலை மரபு உருவாவதற்கும் இது காரணமாக அமைந்தது.
- இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சார் பாக்’ (நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்ட தோட்டத்துடன் கூடிய கல்லறை) மற்றும் இரட்டை-குவிமாட (double-dome) கட்டமைப்பு முறைக்கு அமைந்த முதல் முக்கிய எடுத்துக்காட்டு; இது தாஜ் மஹாலின் கட்டடக்கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
- ஹுமாயுனின் மனைவி “ஹமிதா பானு பேகம்”, அவருக்காக டெல்லி அருகே “பளிங்கு கற்களால் ஆன குவிமாடம் வகையிலான கல்லறையை” கட்டினார்.
- இந்தியாவில் கட்டப்பட்ட முதல் வெள்ளை பளிங்கு கல்லால் ஆன கட்டிடம் = ஹுமாயூன் கல்லறை.
- இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இரட்டை அடுக்கு குவிமாடக் கட்டிடம் = ஹுமாயூன் கல்லறை.
- “தாஜ்மகாலின் முன்னோடி” எனப்படுவது = ஹுமாயூன் கல்லறை.
- ஹுமாயூன்: வாழ்க்கை வரலாறு, போர்கள் மற்றும் சாதனைகள்