குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
- இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
- இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
- அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
- இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்
- இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்
- இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
- ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும்
- திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார்
வேறு பெயர்கள்
- கொல்லிக் காவலன்
- கூடல் நாயகன்
- கோழிக்கோ
படைப்பு
- பெருமாள் திருமொழி
மேற்கோள்
- ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே
- மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே