சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி ஐராவதம் மகாதேவன் ஆவார்.
சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள்
- கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளது சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகள்
- இக்கல்வெட்டுகளில் “ஆதன்” என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களை குறிக்கிறது.
புகளூர் கல்வெட்டு
“…அம்மண்ணன் யாற்றூர் செங்கையபன் உறைய் கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகன் (இளங் கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்” |
- “யாற்றூர்” என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான “செங்காயபன்” வசிக்கும் உறையுள் இது என்று கூறப்பட்டுள்ளது.
- இது கருவூரில் இருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது.
- இக்கல்வெட்டு கி.பி. (பொ.ஆ) 2 ஆம் நூற்றாண்டை சார்ந்தது.
- இக்கல்வெட்டில் அடுத்தடுத்து “பெருங்கடுங்கோன்”, “இளங்கடுங்கோ”, “இளங்கோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
- இவை முறையே பதிற்றுப்பத்தின் 7-வது 8-வது மற்றும் 9-வது பாட்டுடைத் தலைவர்கள் பற்றியதாகும்.
கே.வி.சுப்பிரமணியர்
- தமிழ்நாட்டில் பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிக்கோலியவர் திரு. கே.வி. சுப்பிரமணியனார் ஆவார்.
- புகளூர் கல்வெட்டுகள் பிராகிருத மொழியினால் ஆனவை அல்ல. அவை தமிழில் தான் எழுதப்பட்டவை என்று நிறுவியவர் = கே.வி.சுப்பிரமணியர்
பிராம்மி கல்வெட்டுகள்
- தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ‘பிரம்மி’ வரிவடிவத்துடன் தமிழி, தரமிழி, திராவிடம் என்று அழைக்கப்படுகிற வேறுபட்ட வரிவடிவங்களும் இருப்பதை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது
- தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககாலக் கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள் ஆகியவற்றில் அசோகர் காலத்திய பிராம்மி வரிவடிவத்தில் உள்ள முரண்பாடுகள் தெரியவருகின்றன.
- இவற்றை இக்கல்வெட்டுகளை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் தன்னுடைய ஆய்வு நூலான “எர்லி தமிழ் எபிகிராபி” யில் தெளிவுபடுத்துகிறார்.
- தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் தமிழி என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்கிறார்
மாங்குளம் கல்வெட்டு
- “1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள், சங்ககாலப் பாண்டிய மன்னாகிய நெடுஞ்செழியனுடையவை என்றும் அவை கி.மு. (பொ. ஆ.) 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கண்டுபிடித்தேன்”.
- என்று ஐராவதம் மகாதேவன் தனது “நூற்றாண்டு மாணிக்கம்” என்ற நூலில் கூறியுள்ளார்.
ஐராவதம் மகாதேவன்
- ஐராவதம் மகாதேவன் எழுதிய இக்கட்டுரை ‘கல்வெட்டு’ இதழில் வெளிவந்தது.
- இவர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து, தொல்லியலிலும் எழுத்தியலிலும் கொண்ட ஆர்வத்தால் விருப்ப ஓய்வு பெற்றார்.
- தனக்கு மிகவும் விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டார்.
- சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று அவர் கண்ட முடிவு, வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
- விருதுகள்,
- ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் விருது (1970)
- இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது (1992)
- தாமரைத்திரு விருது (2009)
- பதிற்றுப்பத்தில் இடம்பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர்க் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதை இவர் கண்டுபிடித்தது, இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது. பாறைகளிலிருந்த பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கி இவர் தந்தது, இமயப் பணி.
- நூல்கள்,
- நூற்றாண்டு மாணிக்கம்
- எர்லி தமிழ் எபிகிராபி (EARLY TAMIL EPIGRAPHY)
- 12TH STANDARD TAMIL மெய்ப்பாட்டியல்
- 12TH STANDARD TAMIL நடிகர் திலகம்
- 12TH STANDARD TAMIL காப்பிய இலக்கணம்
- 12TH STANDARD TAMIL வை.மு.கோதைநாயகி
- 12THSTANDARD TAMIL இலக்கியத்தில் மேலாண்மை
- 12TH STANDARD TAMIL அதிசய மலர்
- 12TH STANDARD TAMIL தேயிலைத் தோட்டப் பாட்டு
- 12TH STANDARD TAMIL புறநானூறு