12 ஆம் வகுப்பு புறநானூறு
12 ஆம் வகுப்பு புறநானூறு
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
- இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவும் வழங்குவர்.
புறநானூறு நூல் குறிப்பு
- வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்கள் அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூ று என்று பெயர் பெற்றது.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
- இந்நூலின் பாடல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகும். இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கவில்லை.
- முடியுடைய மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றையும் இந்நூலால் நன்கு அறியலாம்.
- புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
- புறநானூற்றில் கூறப்பட்டுள்ள புறத்திணைகள் = 11
- புறநானூற்றில் கூறப்பட்டுள்ள துறைகள் = 65.
- வெளிநாட்டவராகிய அறிஞர் ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல்களுள் இப்புற நானூறும் ஒன்றாகும். அவ்வறிஞர் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்குவது இந்நூல்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நரிவெரூஉத் தலையார்
- நரிவெரூஉத் தலையாரால் பாடப்பட்டவன் = சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
- இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும், திருவள்ளுவமாலையிலும் உள்ளன.
- “பல்சான் றீரே பல்சான் றீரே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புற நானூறு.
- “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
- “பல்சான் றீரே பல்சான் றீரே” என்ற அடிகளை பாடிய புலவர் = நரிவெரூஉத் தலையார்
- “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான்” என்ற என்ற அடிகளை பாடிய புலவர் = நரிவெரூஉத் தலையார்.
பொதுவியல் திணை என்றால் என்ன
- வெட்சி முதல் பாடாண் இறுதியாகத் தொல்காப்பியனார் கூறும் புறத்திணைகளுள் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
பொருண்மொழிக் காஞ்சி துறை என்றால் என்ன
- துறவியராகிய மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் இதுவென அதன் இயல்பை உணர்த்தியது. ‘பொருண்மொழிக் காஞ்சி’ என்னும் துறையாகும்.
- பொருண்மொழிக் காஞ்சி துறைக்கு இலக்கணம் கூறும் நூல் = புறப்பொருள் வெண்பாமாலை.
- “எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறப்பொருள் வெண்பாமாலை.
அருஞ்சொற்பொருள்
- பல்சான்றீரே = பலராகிய சான்றோரே
- கயன்முள் = மீன்முள்
- திரைகவுள் = சுருக்கங்களுடைய கன்னம்
- கணிச்சி = மழுவாயுதம்
- கூர்ம்படை = கூரிய ஆயுதம்
- கடுந்திறல் = கடுமையான வலிமை
- ஒருவன் = யமன்
- பிணிக்கும் = கட்டிக்கொண்டு போகும்
- நல்லாறு = நன்னெறி
- ஆற்றீராயினும் = இயலாதோராயினும்
- நெறியும் = வழியும்
- ஒம்புமின் = தவிர்த்துவிடுவீர்
- ஆறு – நெறி
இலக்கணக்குறிப்பு
- கயன்முள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- திரைகவுள் – வினைத்தொகை
- கூர்ம்படை – பண்புத்தொகை
- கடுந்திறல் = பண்புத்தொகை
- ஆற்றீர் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
- படூஉம் – இசைநிறை அளபெடை
- ஓம்புமின் = ஏவல் பன்மை வினைமுற்று
- 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 12 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 11 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 11 ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ்
- 10 ஆம் வகுப்பு பொதுத்தமிழ்
- 9 ஆம் வகுப்பு தமிழ்
- 8 ஆம் வகுப்பு தமிழ்
- 7 ஆம் வகுப்பு தமிழ்
- 6 ஆம் வகுப்பு தமிழ்