கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம்.
இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
கோவிலில் உள்ள சிற்பங்கள்:
முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்.
யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம்.
அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.
கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற் படிகள் “சரிகமபதநி” எனும் 7 நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
கார்ல் சாகன் கூற்று:
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகிசியத்தை காட்டுவதாக வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுகிறார்.
தஞ்சை அரண்மனைக்கு சொந்தமான இக்கோவில் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதை மரபு அடையாளச்சின்னமாக யுனெஸ்கோஅறிவித்துள்ளது. இக்கோவிலை “கலைகளின் சரணாலயம்” என்றே கூறலாம்.