சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்
- நாயன்மார்கள் எத்தனை பேர்? = 63
- ஆழ்வார்கள் எத்தனை பேர்? = 12
- எந்த காலக்கட்டத்தில் “திருமூர்த்தி” வழிபாடு துவங்கியது? = குப்தர்கள் காலத்தில்
- யாருடைய ஆட்சிக்காலத்தில் “அர்த்தநாரீஸ்வரர்” வழிபாடு துவங்கியது? = குப்தர்கள் காலத்தில்
- புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனீஸ் “சிவனை” எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? = “டையோநிசஸ்”
- புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மெகஸ்தனீஸ் “கிருஷ்ணனை” எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? = “ஹீராக்லஸ்”
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- லிங்க வழிபாடு தொடர்பான ஆதாரம் முதன் முதலில் எதில் உள்ளது? = மத்சயா புராணம்
- எந்த சமண தீர்த்தங்கரர் கிருஷ்ணனின் அவதாரம் என கூறப்படுகிறது? = 22 வது தீர்த்தங்கரர் “அரிஷ்டாநேமி” (நேமிநாதர்)
- நேமிநாதர், கிருஷ்ணனின் அவதாரம் எனக் கூறும் சமண இலக்கியம் எது? = உத்தராதயனா சூத்திரம்
- சிவனை, “மகாதேவர்” எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்? = அதர்வண வேதம் மற்றும் ஸ்வேதஸ்வரர் உபநிடதம்.
- வட இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் ஒரு மதப்பிரிவாக வளர்ச்சி பெற்றது? = சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் காலத்தில்
- தென் இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் சைவ சமயம் ஒரு மதப்பிரிவாக வளர்ச்சி பெற்றது? = பிற்கால சோழர்கள் காலத்தில்
- தேவகியின் மகன் கிருஷ்ணன் என்ற குறிப்பு முதல் முதலில் கூறப்பட்டுள்ள இலக்கியம்? = சந்தோகைய உபநிடதம்
- வட இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் வைணவம் செழித்து வளர்ந்தது? = குப்தர்கள் காலத்தில்
- “மறுபிறவி” பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது? = பகவத்கீதை.
- முனிவர் சூதா மகாபாரத கதையை ஷௌனக் மற்றும் 88000 பிற துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு வழங்கிய இடம்? = நைமிஷாரண்யா (உத்திரப்பிரதேசம்)
- “தென்னக மீரா” என அழைக்கப்படுபவர் = ஆண்டாள்.
- சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

பன்னிரு திருமுறைகள்
- தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார்.
- சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம்
- சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும்.
- திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே
- நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம்
- திருமுறைகளைத் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான்
- முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
- தேவாரப் பாக்கள் “பழம் மரபிசைக் களஞ்சியம்” எனப்படுகிறது.
- தேவாரம் என்பதை “தே+வாரம்” எனப் பிரித்து கடவுளுக்கு உரிய பாடல்கள் என்றும், “தே+ஆரம்” எனப் பிரித்து கடவுளுக்கு சூட்டப்படும் பா மாலை என்றும் பொருள் கொள்வர்.
- முதல் ஏழு திருமுறைகளுக்கு “மூவர் தமிழ்” என்ற பெயரும் உண்டு.
- மூவர் முதலிகள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
- சைவசமய குரவர்கள் = திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- சைவ சமய குரவர்கள் நால்வர் பாடியதை “சைவ நான்மறைகள்” என்று புகழப்படும்.
- திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம் 27 பேர்
- “இவ்வளவு பழமையான இசைச் செல்வம் உலகில் வேறு எங்கும் இந்த அளவிற்கு கிடைக்கவில்லை” என்பார் மு.வரதராசனார்.
- 1 முதல் 9 திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = தோத்திரங்கள்
- 10 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = சாத்திரம்
- 11 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = பிரபந்தம் (சிவ நூல்கள்)
- 12 ஆம் திருமுறை எவ்வாறு அழைக்கப்படுகின்றன = புராணம்
- பன்னிரு திருமுறைகளுள் இசைப்பாக்களால் (இசை தமிழ்) ஆனாவை எத்தனை = முதல் ஒன்பது திருமுறைகள் (8 ஆம் திருமுறை மட்டும் இயற்பா வகை)
- பன்னிரு திருமுறைகளுள் 10, 11, 12 எவ்வகை பாக்களால் ஆனவை = இயற்பா (இயற்றமிழ்)
- சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் குறிப்புகள்
- வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
- இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
- ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்
- மொதப் பாடல்கள் = 3776
- நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
- இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
- நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
- 12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
- நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
- நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
- நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாத முனிகள்
- சைவ வைணவம் முக்கிய குறிப்புகள்
பெரும் பிரிவுகள்
- முதல் ஆயிரம்
- மூத்த திருமொழி
- திருவாய் மொழி
- இயற்பா
இந்திய தத்துவத்தின் ஆறு பள்ளிகள்
|
தத்துவம் |
வேதம் |
நிறுவியவர் |
|
சாங்கியம் |
சாங்கிய சூத்திரம் | கபிலர் |
| நியாய | நியாய சூத்திரம் |
கவுதம் |
|
யோகா |
யோக சூத்திரம் | பதஞ்சலி |
| வைஷேகம் | வைஷேக சூத்திரம் |
கணாதர் |
|
மீமாம்சம் |
பூர்வ மீமாமிச சூத்திரம் | ஜைமினி |
| வேதாந்தம் | பிரம்ம சூத்திரம் |
பத்ராயானர் |