பட்டயச் சட்டம் 1793
பட்டயச் சட்டம் 1793:
- 1793ம் ஆண்டு பட்டயச் சட்டத்தை “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1793” எனவும் அழைக்கப்பட்டது
பட்டயச் சட்டத்தின் தேவை:
- 1773ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி, கம்பெனியின் வணிகம் 2௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே உள்ள பட்டயச் சட்டங்களை புதுப்பிக்க வேண்டி இச்சட்டம் உருவாக்கப்பட்டது
பட்டயச் சட்டத்தின் சிறப்பு இயல்புகள்:
- இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமை தொடர செய்தல்
- அடுத்த 2௦ ஆண்டுகளுக்கு கம்பெனியின் ஏகபோக வர்த்தகத்தை தொடர செய்தல்
- கம்பெனி மேற்கொள்ளும் அணைத்து அரசியல் நடவடிக்கைகளும், இங்கிலாந்து அரசின் உத்தரவின் பேரிலே நடைபெறும்
- கம்பெனியின் வருவாயில் இருந்து வழங்கப்படும் ஈவுத்தொகை, 1௦% ஆக உயர்த்தப்பட்டது
- பட்டயச் சட்டம் 1793 கவர்னர் ஜெனரலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது
- மதராஸ் மற்றும் பம்பாய் மாகாண கவர்னர் ஜெனரல்கள், வங்காள கவர்னர் ஜெனரலுக்கு கீழ் கொண்டுவரப்பட்டனர்
- கம்பெனி பணியாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு இந்திய வருவாயில் இருந்து ஊதியம் வழங்குதல்
- கம்பெனியின் அணைத்து செலவினங்களும் போக, இந்திய வருவாயில் இருந்து ஆண்டு தோறும் 5 லட்ச பவுண்டுகள் பிரிட்டிஷ் அரசிற்கு அளிக்க வேண்டும்
- கம்பெனியின் மூத்த அதிகாரிகள் உரிய அனுமதி இன்றி இந்தியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
- இந்தியாவில் வணிகம் செய்வதற்கு தனியாள் அலல்து கம்பெனிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது
- இச்சட்டம் ஒரு வலிமையான மைய அரசாங்கம் அமைவதற்கு வழிவகை செய்தது
- இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நில எல்லையை விரிவாக்கும் எண்ணம் கம்பெனிக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது
- கவர்னர் ஜெனரலின் ஆலோசனை சபை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் இனிமேல் குறைந்தது 12 ஆண்டுகளாவது இந்திய நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனப்பட்டது
- இச்சட்டப்படி கவர்னர் ஜெனரலுக்கு மாகாணங்களில் “அமைதிகான் நீதிபதி” (Justice of Peace) நியமிக்க உரிமை வழங்கப்பட்டது
- நீதி நிர்வாகத்தில் இருந்து வருவாய் நிர்வாகம் தனியாக பிரிக்கப்பட்டது
- சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய குறிப்பு:
- இச்சட்டத்தால் ஏற்கனவே இருந்த சட்டங்களில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை
- ஆனால் கம்பெனி செலவுகளுக்கு இந்திய வருவாயில் இருந்து செலவுகள் மேற்கொள்ளப்பட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
- HISTORICAL BACKGROUND (வரலாற்றுப் பின்னணி)
- REGULATING ACT OF 1773 (ஒழுங்குமுறைச் சட்டம் 1773)
- AMENDING ACT OF 1781 (திருத்தச் சட்டம் – 1781)
- PITT’S INDIA ACT 1784 (பிட் இந்திய சட்டம் 1784)
- CHARTER ACT 1786 (பட்டயச் சட்டம்1786)