TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2021

Table of Contents

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2021

 

       TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 20, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

45 நாட்களில் 401 அரை கொண்ட மருத்துமனை கட்டி உலக சாதனை:

  • சென்னையை சேர்ந்த டீமேஜ் பில்டர்ஸ் நிறுவனம், ப்ரீகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்பத்தில் 45 நாட்களில் 401 அரை கொண்ட மருத்துமனையை கட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
  • தமிழகத்தின் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 692௦௦ சதுர அடி பரப்பளவில் 401 அறைகளுடன் 2 அடுக்கு மாடிகள் கொண்டதாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தமிழர்:

  • திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ள திவ்வியேஷ் என்ற இலங்கை தமிழர், யோகாசனம் செய்து கொண்டு பின்புறமாக ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • இதற்கு முன்னர் உக்ரைன் நாட்டினை சேர்ந்த பெண்மணி ஒரு நிமிடத்தில் யோகாசனம் செய்து கொண்டே 24 பலூன்களை உடைத்தே சாதனையாக இருந்தது.

சூரியத் தகடுகளால் மூடப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையம்:

  • ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ரயில் நிலையம், 13௦ கிலோவாட் திறன் கொண்ட சூரியத் தகடுகள் கொண்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரியத் தகடுகளால் மூடப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற சிறப்பை, விஜயவாடா ரயில் நிலையம் பெற்றுள்ளது.
  • இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 8.1 லட்சம் மின்சார சிக்கனம் ஏற்படும்.

மறைமலையடிகள் பிறந்த தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • மறைமலையடிகளின் 145-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது
  • 1876 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார்.

உலக சதுரங்க தினம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • சர்வதேச சதுரங்க தினம் (World Chess Day, July 20), ஜூலை 2௦ ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
  • சார்வதேச சதுரங்க கூட்டமைப்பு (International Chess Federation) உருவாக்கப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

உலக விண்வெளி ஆய்வு நாள்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலக விண்வெளி ஆய்வு நாள் (World Space Exploration Day, July 20), ஆண்டு தோறும் ஜூலை 2௦ ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • நாசாவின் “அப்பலோ 11” (NASA’s Apollo 11) என்ற விண்கலத்தின் மூலம் நிலவிற்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் 1969 ஆம் ஆண்டு ஜூலை 2௦ ஆம் தேதி நிலவில் இறங்கினர்.
  • இந்நாளினை “உலக நிலவு நாள்” (World Moon Day) என்றும் கூறுவார்.

உலக தாவல் (குதிப்பு) தினம்:

  • உலக தாவல் (குதிப்பு) தினம் (WORLD JUMP DAY), ஜெர்மணியை சேர்ந்த டார்ஸ்டன் லாஷ்மேன் என்பவரால் இக்கருத்து முதலில் துவங்கப்பட்டது.
  • உலக ஜம்ப் தினம் சரியாக 11: 39.13 GMT இல் கொண்டாடப்படுகிறது.
  • உலக தாவல் தினம் முதன் முதலில் ஜூலை 20, 2006 அன்று அனுசரிக்கப்பட்டது.

விஸ்வநாதன் ஆனந்த் ஸ்பர்கசென் டிராபியை வென்றார்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தனது நான்காவது மற்றும் இறுதி சுற்று நோ காஸ்ட்லிங் ’ஆட்டத்தில் நீண்டகால போட்டியாளரான ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் எதிரான ஆட்டத்தில் சமன் செய்து, 2.5 – 1.5 என்ற கணக்கில் ஸ்பர்கசென் டிராபியை வென்றார் / Viswanathan Anand defeated Vladimir Kramnik to win the Sparkassen Trophy at Dortmund
  • தனது 40-வது நகர்தலில் ஆனந்த் போட்டியை சமன் செய்தார்
  • இப்போட்டிகள் ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் நடைபெற்றது.

சுதன்சு மிட்டலின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • பாஜக தலைவர் சுதன்ஷு மிட்டல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பற்றிய புத்தகம் இப்போது சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
  • “RSS: Building India Through SEWA” என்ற அவரின் புத்தகம் சீன மொழியில் ஆர்எஸ்எஸ் வரலாறு, சித்தாந்தம் மற்றும் கொள்கைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

மறைந்த ஷியாப்ஜி முகர்ஜிக்கு “மோகுன் பகன் ரத்னா” விருது:

  • 1977 ஆம் ஆண்டில் நடந்த ஒரு கண்காட்சி போட்டியில் பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே கோல் அடித்ததை பிரபலமாக தடுத்த முன்னாள் இந்திய ஷாட்-ஸ்டாப்பர் (கோல் கீப்பர்) ஷிபாஜி பானர்ஜி, மரணத்திற்குப் பின் மோஹுன் பாகன் ரத்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது / Former India and Mohun Bagan shot-stopper Shibaji Banerjee, who famously denied Brazil’s legendary football player Pele from scoring a goal in an exhibition match in 1977, will be conferred with Mohun Bagan Ratna posthumously

இந்தியா : உலகின் 5-வது பெரிய அன்னியசெலவானி கையிருப்பு நாடு:

  • இந்தியா ஜப்பான், சீனா, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்தை ஆகிய நாடுகளை விஞ்சி உலகின் ஐந்தாவது பெரிய அந்நிய செலாவணி இருப்பு உள்ள நாடாக மாறி உள்ளதாக மக்களவையில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது / India: 5th largest Forex reserve holder in the world

ரசியாவின் ஜிர்கான் ஏவுகணை:

  • ஒலியை விட பலமடங்கு வேகமாக செல்லும் ஹைபெர்சோனிக் “ஜிர்கான் ஏவுகணையை” (Russia test fires Zircon (Triskon) Hypersonic Cruise Missile successfully) ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இச்சோதனையின் பொழுது, ஏவுகணை “மாக் 7” வேகத்தில் சென்று இலக்கினை தாக்கியது. இது அதிகபட்சமாக “மாக் 9” வேகம் வரை செல்லுக் திறன் கொண்டது.
  • ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிகமான வேகத்தை “ஹைபெர்சோனிக்” என்பர்.

உச்சநீதிமன்றத்தின் “FASTER” திட்டம்:

  • சமிபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி,ரமணா அவர்களால் “FASTER” என்ற மின்னு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
  • FASTER = Fast and Secure Transmission of Electronic Records
  • இதன் நோக்கம், கைதிகளின் பெயில், தண்டனை விவரங்கள் போன்றவை சிறைச்சலைகள், மற்ற கீழவை நீதிமன்றங்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் மின்னணு முறையில் அனுப்பப்படுவதாகும்.

ஐ.சி.சி யின் புதிய உறுப்பினர்கள்:

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் இதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1௦6 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 முழு நேர உறுப்பினர்களும், 94 இணை உறுப்பு நாடுகள் ஆகும்.
  • ஆசிய கண்டத்தின் 22-வது நாடாக மங்கோலியாவும், 23-வது நாடாக தஜிகிஸ்தான் உள்ளது.

தேசிய விருது பெற்ற கவுதம் பெனகல் காலமானார்:

  • இந்தியாவின் பிரபல கார்டூனிஸ்ட்டும், அனிமேசன் படத்திற்காக தேசிய விருது பெற்றவருமான கவுதம் பெண்கள் காலமானார். அவருக்கு வயது 56 ஆகும்.
  • 2௦1௦ ஆம் ஆண்டு சிறந்த அனிமேசன் படத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் இவர்.

இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை (INDIA’S FIRST GREEN HYDROGEN PLANT), உத்திரப்பிரதேச மாநிலத்தின் மதுராவில், இந்தியன் ஆயில் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ளது.
  • இதுவே இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை ஆகும். கார்பனால் ஆன எரிபொருள்களுக்கு மாற்றாக இவை உருவாக்கப்படுகின்றன.

இந்திய பாரம்பரிய நிறுவனம்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகத் தரத்திலான “இந்திய பாரம்பரிய நிறுவனம்” (WORLD CLASS “INDIAN INSTITUTE OF HERITAGE”) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள கவுதம புத்தா நகரில் இது அமைய உள்ளது. இதன் முக்கிய நோக்கம், இந்தியாவின் உறுதியான பாரம்பரியத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு கவனம் செலுத்துதல் ஆகும்.

அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் அலாய்:

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

  • இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO – DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION) நிறுவனமான “டி.ஆர்.டி.ஓ” வின் துணை நிறுவனமான, “ராணுவ உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம்” (DMRL – DEFENCE METALLURGICAL RESEARCH LABORATORY) சார்பில், விமானத் துறை தொழிலகத்திற்கு ஏற்ப அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் அலாய் (INDIGENOUS HIGH STRENGTH METASTABLE BETA TITANIUM ALLOY) உருவாக்கி உள்ளது.
  • இது உள்நாட்டு தொழில்நுட்பத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

அறிவியல் பத்திரிக்கையாளர் ஹரி புலாக்கத்தின் “SPACE, LIFE, MATTER” புத்தகம்:

  • பிரபல எழுத்தாளரும், அறிவியல் பத்திரிக்கையாளருமான “ஹரி புலாக்த்” அவர்கள் எழுதிய “SPACE, LIFE, MATTER : THE COMING OF AGE OF INDIAN SCIENCE” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்புத்தகத்தில் 1947 முதல் 2000 வரையிலான காலத்தில் இந்திய விஞ்ஞானிகள் சந்தித்த கடினமான சூழ்நிலைகள் மற்றும் சாதனைகள் கூறப்பட்டுள்ளன.

வங்கி தேசியமயமாக்கல் தினம்:

  • இந்தியாவில், “வங்கி தேசியமயமாக்கல் தினம்” (BANK NATIONALISATION DAY), ஆண்டு தோறும் ஜூலை 19 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அன்று, “வங்கி நிறுவனங்கள் (நிறுவனங்களின் கையகப்படுத்தல் மற்றும் பரிமாற்றம்) கட்டளை, 1969” (Banking Companies (Acquisition and Transfer of Undertakings) Ordinance, 1969) சட்டத்தின் படி, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

இந்தியாவில் முதல்முறையாக பஞ்சாப் அரசின் SOHUM AABR திட்டம்:

  • புதிதாகப் பிறந்த மற்றும் இளம் குழந்தைகளில் கேட்கும் இழப்பை நிர்வகிக்க (To manage the hearing loss in newborn and young children), பஞ்சாப் அரசு, புதிதாகப் பிறந்த கேட்டல் திரையிடல் திட்டத்தின் (Universal Newborn Hearing Screening Programme) கீழ் தானியங்கி ஆடிட்டரி மூளை அமைப்பு பதில் (AABR – Automated Auditory Brainstem Response) முறையை அறிமுகப்படுத்தியது.
  • தானியங்கி ஆடிட்டரி மூளை அமைப்பு பதிலளிப்பு முறையை (SOHUM AABR) அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் பஞ்சாப் அரசு. இந்த வகையான முதல் முயற்சி புதிதாகப் பிறந்த மற்றும் சிறு குழந்தைகளில் கேட்கும் இழப்பை திறம்பட காண்பிக்கும் ”என்று மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து கூறினார்.

 

 

 

Leave a Reply